உள்ளடக்கத்துக்குச் செல்

சீர்வேக ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரமோஸ் சீர்வேக ஏவுகணை

சீர்வேக ஏவுகணை (cruise missile) என்பது சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல வழிகாட்டப்பட்ட ஏவுகணை. இதனை "குரூஸ்" ஏவுகணை என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். சீர்வேக ஏவுகணை சிறியதொரு ஆளில்லா விமானத்தைப் போன்று இயங்கும் இவ்வகை ஏவுகணைக்குத் தாரை இயந்திரம் ஒன்றின்மூலம் உந்துசக்தி வழங்கப்படுவதுடன், இவை தன்னியக்க வழிச்செலுத்தி மூலம் இலக்கை நோக்கி வழிநடத்தப்பட்டு மிகவும் துல்லியமாக இலக்கினைத் தாக்கவல்லன. இவ்வகை ஏவுகணைகள் பொதுவாக பாரிய சாதாரண வெடிமருந்திகாலான வெடிபொருட்களையோ அல்லது அணுவாயுதங்களையோ காவிச்செல்ல வல்லனவாகக் காணப்படுகின்றன. மிகவும் தாழ்வான உயரத்தில் ஒரு விமானத்தைப்போன்று பறந்துசெல்லவல்ல இவ்வகை ஏவுகணைகள் எதிரிகளின் தொலைக்கண்டுணர்வி திரைகளிற் படாது தன்னியக்கமாக வழிநடாத்தப்பட்டு இலக்கைநோக்கிப் பயணிக்கவல்லன. அத்துடன் தாரை இயந்திரங்களால் இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை ஏவுகணைகள் இலக்கை அடைவதற்காக வளிமண்டலத்தைத் தாண்டிச்செல்ல வேண்டிய தேவை இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்வேக_ஏவுகணை&oldid=3939501" இலிருந்து மீள்விக்கப்பட்டது