பிராக்கிபோடியசு
Appearance
பிராக்கிபோடியசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ‘’பைக்னோனோடிடே’’
|
பேரினம்: | பிராக்கிபோடியசு
|
மாதிரி இனம் | |
லேனியசு மெலனோசெப்பாலசு (கருந்தலை சின்னான்) ஜெமிலின், 1788 |
பிராக்கிபோடியசு (Brachypodius) என்பது சின்னான் குடும்பமான பைக்னோனோடிடே பறவைப் பேரினமாகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]பிராக்கிபோடியசு பேரினமானது 1845ஆம் ஆண்டு இங்கிலாந்து விலங்கியல் வல்லுநரான எட்வர்ட் ப்ளைத் என்பவரால் கருப்புத் தலை சின்னானை வகைப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது.[1] பிராக்கிபோடியசு என்ற சொல்லானது பண்டைக் கிரேக்க பிராகுசு என்ற "குறுகிய" என்று பொருள்படும் சொல்லிலிருந்தும் பௌசு, போடோசு என்றால் "கால்" என்று பொருள்படும் சொல்லிருந்தும் தோன்றியது.
2017-ல் வெளியிடப்பட்ட கொண்டைக்குருவி குடும்பத்தின் மூலக்கூறு இனவரலாற்று ஆய்வில் பைக்னோனோடசு பலதொகுதிமரபு உயிரினத் தோற்றம் உடையதாகக் கண்டறியப்பட்டது.[2] முன்னர் பைக்னோனோடசில் வகைப்படுத்தப்பட்ட நான்கு சிற்றினங்கள் பிராச்சிபோடியசில் வகைப்பிரிக்கப்பட்டது.[3]
இந்த பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன. அவை:[3]
- சாம்பல்-தலை சின்னான் (பிராக்கிபோடியசு பிரியோசெபாலசு)
- கருப்புத் தலை சின்னான் (பிராக்கிபோடியசு மெலனோசெபலோசு)
- அந்தமான் சின்னான் (பிராக்கிபோடியசு பசுகோபிளாவென்சென்சு)
- நீலத்தாடைச் சின்னான் (பிராக்கிபோடியசு நியுவென்ஹுயிசி)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Edward Blyth (1845). "Notices and descriptions of various new or little known species of birds (continued)". Journal of the Asiatic Society of Bengal 14, Part 2 (164): 546–602 [576]. https://www.biodiversitylibrary.org/page/40127351.
- ↑ Shakya, Subir B.; Sheldon, Frederick H. (2017). "The phylogeny of the world's bulbuls (Pycnonotidae) inferred using a supermatrix approach". Ibis 159 (3): 498-509. doi:10.1111/ibi.12464.
- ↑ 3.0 3.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2021). "Bulbuls". IOC World Bird List Version 11.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.