உள்ளடக்கத்துக்குச் செல்

பியர் சிமோன் இலப்லாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியர் சிமோன், மார்க்கி டி இலப்லாசு
Pierre-Simon, marquis de Laplace
பியர் சிமோன் இலப்லாசு(1749-1827).
இறந்தபின் மேடம் ஃவெய்ட்டோ (Madame Feytaud) வரைந்த படம், 1842.
பிறப்பு23 ஏப்ரல் 1749
பியூமொன்ட்-என்-ஓஜ் (Beaumont-en-Auge), நோர்மன்டி (Normandy), பிரான்சு
இறப்பு5 மார்ச்சு 1827(1827-03-05) (அகவை 77)
பாரிசு, பிரான்சு
வாழிடம்பிரான்சு
தேசியம்பிரான்சு
துறைவானியலாளர், கணிதவியலாளர்
பணியிடங்கள்இக்கோல் மிலிட்டேர் (École Militaire) (1769-1776)
கல்வி கற்ற இடங்கள்கேன் பல்கலைக்கழகம் (University of Caen)
கற்கை ஆலோசகர்கள்ஜீன் டி'எலெம்பேர்ட்(Jean d'Alembert)
கிறிச்டொபி கட்பில்ட் (Christophe Gadbled)
பியர் லே கனு(Pierre Le Canu)
முனைவர் பட்ட 
மாணவர்கள்
சிமியன் டெனிஸ் பொயிசன்
(Simeon Denis Poisson)
அறியப்படுவதுWork in Celestial Mechanics
Laplace's equation
Laplacian
Laplace transform
Laplace distribution
Laplace-Beltrami operator
Laplace's demon
Laplace expansion
Young–Laplace equation
Discrete Laplace operator
Laplace–Runge–Lenz vector
Two-sided Laplace transform
Laplace's law
Laplace–Stieltjes transform
Laplace number
Laplace limit
De Moivre–Laplace theorem
Laplace invariant
Log-Laplace distribution
Laplace principle
கையொப்பம்

பியர் சிமோன், இலாப்லாசு அல்லது மார்க்கி டி இலப்லாசு (ஏப்ரல் 23, 1749மார்ச் 5, 1827) என்பவர் 18-19 ஆவது நூற்றாண்டின் மிகச் சிறந்த கணிதவியல், வானவியலாளர்களுள் ஒருவர். வானியலை கணித அடிப்படையில் விரிவடையச் செய்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு. புள்ளிக்குறிப்பியலிலும் இவருடைய பங்கு மிகச் சிறப்பானது. இவர் தமக்கு முன்னிருந்த அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை ஒழுங்கு படுத்தி, கணித அடித்தளம் இட்டு, தான் கண்டுபிடித்தவற்றையும் தொகுத்து ஐந்து பெரும் தொகுதிகளாக வான்பொருள்களின் இயக்கவியல் (Mécanique Céleste ) என்னும் பெரும் பல்லடுக்கு நூற்தொகுதியை 1799-1825 காலப்பகுதியில் வெளியிட்டார். இப் பல்லடுக்கு நூல்தொகுதியால், வடிவவியல் அடிப்படையாக இருந்த வானியல் இயக்கங்கள் பற்றிய அறிவை நுண்பகுப்பாய்வு (கால்க்குலசு) அடிப்படையான அறிவாக மாற்றினார். புள்ளிக்குறிப்பியலில் பேயீசிய நிகழ்தகவியல் (Bayesian probability) என்னும் துறைக்கு இவர் ஆற்றிய ஆய்வுகளே அடிப்படையாக அமைந்ததுள்ளது.[1].

பல இயற்பியல் பகுப்பாய்வுகளில் காணப்படும் இலப்லாசு சமன்பாடு (Laplace's equation) என்னும் இரண்டாம் படிய நுண்பகுப்புக் கணித சமன்பாடு இவர் உருவாக்கியதே ஆகும்.[2]

இளமை

[தொகு]

1749 ஆம் ஆண்டு பிரான்ஸு நாட்டு நார்மாண்டி பகுதியில் இலாப்லாசு பிறந்தார். இவர் இளம் வயதில் படிப்பில் ஆர்வம் மிகுந்தவராகக் காணப்பட்டார். 1768-இல் இவர் பாரீசு நகருக்குச் சென்று கணிதப் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். பிரெஞ்சு அறிவியல் அகாதமியின் முன்னணி அறிஞராக இவர் விளங்கினார். மாவீரன் நெப்போலியனுக்கு அறிவியல் ஆலோசகராகச் சிலகாலம் செயல்பட்ட பெருமை கொண்டவர் இவர்.

வானவியல் ஆய்வுகள்

[தொகு]

ஒரு கோள் சூரியனைச் சுற்றிவரும்போது அது கெப்ளரின் விதிகளுக்கு உட்பட்டு சூரியனை தனது நீள்வட்டப் பாதையில் சுற்றும் சுற்றும் கோளின் மைய விலக்கு விசையும், சூரியனின் புவி ஈர்ப்பு விசையும் சமநிலையில் இருப்பதால், கோள்கள் சூரியனில் விழவோ, விலகிச்செல்லவோ நேராது. ஆனால் பல கோள்கள் சூரியனைச் சுற்றிவரும்போது, ஒரு கோளின் ஈர்ப்பு விசை மற்றொரு கோளின் மீது செலுத்தும் விசைகளால் கோள்களின் பாதைகளில் மாற்றங்களை ஏற்படுத்தித் தனது சுற்றுப்பாதைகளிலிருந்து கோள்களைத் தூக்கி எறியச் செய்யும் என நியூட்டன் எண்ணினார்.

கணித ஆய்வுகள் பல செய்தும் நியூட்டனால் கோள்களின் சீரான இயக்கத்தை விளக்க இயலவில்லை. பாதிகளிலிருந்து விலகும் கோள்களை அவ்வப்போது கடவுளின் கரங்கள் சீரமைக்கின்றன எனக் கூறப்பட்டது. அனால் இலாப்லாசு கி.பி. 1780 ஆம் ஆண்டுகளில் கணிப்புகளைத் தனது கணிதத் திறமியால் மேம்படுத்தி கோள்களின் பாதைகளில் ஏற்படும் சிறிய மாறுபாடுகள் எப்படித் தம்மைத் தாமே திருத்திக் கொள்கின்றன என நிறுவினார்.

அந்தக் காலகட்டத்தில் சனிக்கோளின் சுற்றுப்பாதை விரிந்து செல்வதாகவும், வியாழனின் சுற்றுப்பாதை சுருங்குவதாகவும் கணக்கிட்டனர். கெப்ளரின் விதிகளின் படி அமைந்த சுற்றுப்பாதைகளில் மிகப்பெரும் கோள்களின் உண்மையான பாதைகள் மெல்லச் சுழன்று மாற்றமடைந்து மீள்கின்றன. இதற்காகும் காலம் சுமார் 929 ஆண்டுகள் எனவும் கணக்கிட்டு சூரிய குடும்பம் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது எனவும் நிறுவினார்.

ஞாபகார்த்தமாகப் பெயரிடப்பட்டவை

[தொகு]
  • சிறுகோள் ஒன்றிற்கு இலப்லாசின் ஞாபகார்த்தமாக 4628 இலப்லாசு என பெயர் சூட்டப்பட்டது.
  • ஈபிள் கோபுரத்தில் ஊள்ள 72 பெயர்களுள் இவருடைய பெயரும் ஒன்றாகும்.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. Stephen M. Stigler (1986) The history of statistics. Harvard University press. Chapter 3.
  2. [Anon.] (1911) "Pierre Simon, Marquis De Laplace", Encyclopaedia Britannica
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்_சிமோன்_இலப்லாசு&oldid=2764988" இலிருந்து மீள்விக்கப்பட்டது