வானியல் வல்லுநர்
Appearance
(வானியலாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வானியல் வல்லுநர் அல்லது வானியலாளர் (Astronomer) என்பவர் புவிக்கு அப்பாற்பட்ட உலகத்தை ஆராயக்கூடிய ஒரு அறிவியலாளர் ஆவார். அவர் விண்ணில் உள்ள கோள்கள், நிலாக்கள், விண்மீன்கள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள், நெபுலா, கருந்துளைகள், விண்மீன் பேரடைகள் போன்ற வானியல்சார் பொருட்களின் உண்மைகளை ஆராய்ந்து கற்பவர். இவை மட்டுமின்றி வானில் நிகழும் காமா கதிர் வெடிப்புகள், அண்ட நுண்ணலை பின்புலக் கதிர்வீச்சு ஆகியனவும் வானியல் வல்லுனரின் கற்றலோடு தொடர்புடைய பிரிவுகளாகும். அண்ட நுண்ணலை கதிர்வீச்சு என்பது அண்டத்தைப் பற்றிய தோற்றம், இயக்கம், கட்டமைப்பு, படிமலர்ச்சி/பரிணாமம் ஆகியன குறித்த தனிப்பட்ட ஆய்வு இயல் என்றாலும் புவிக்கு அப்பாற்பட்ட துறையாக இருப்பதால் இப்பிரிவும் வானியலுடன் தொடர்புடையதே எனக் கருதலாம்.