உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் (cosmic microwave background) என்பது இந்த பிரபஞ்சம் உருவாக காரனமான பெரு வெடிப்பின் போது உருவான வெப்பக் கதிர்வீசலின் எஞ்சிய வெப்பக் கதிர்வீசல் ஆகும். பிரபஞ்ச நுண்ணலை கதிர் இயக்கம் என்பது பிரபஞ்சத்தின் முதன் முதலாக தோன்றிய கதிர் இயக்கம் என்பதால் பிரபஞ்சவியலின் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சாதரண வானியற் தொலைநோக்கியில் இரண்டு விண்மீன்கள் அல்லது இரண்டு விண்மீன் பேரடைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் பார்க்கும் போது இருட்டாகத் தெரியும். ஆனால் நுண்ணுணர்வு மிக்க வானொலி அதிர்வெண் தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது இவைகளுக்கு இடையே ஒரு மங்கலான ஒளி இருப்பதும் இவை அனைத்துத் திசையிலும் சமமாகப் பரவியிருப்பதும் தெரிகிறது. ஆனால் இந்த ஒளி எந்த விண்மீன் அல்லது விண்மீன் பேரடையுடனும் தொடர்பு உடையது அல்ல.

1965 லேயே ரேடியோ ஆன்டெனாவில் இந்த நுண்ணலைப் பட்டு சதா கொர் என்ற சீற்ற ஒளியை எற்படுத்துகிறது என ஆர்னோ பென்சியா மற்றும் ராபர்ட் வில்லன் இருவரும் தற்செயலாகக் கண்டுள்ளார்கள். 1978 ல் இதற்காக இவர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பிரபஞ்சம் குழந்தை பருவத்தில் இருந்த போது அதாவது கோள்கள், விண்மீன்கள் உருவாகாத காலத்தில், பிரபஞ்சம் அடர்த்தியாகவும், அதித வெப்பமாகவும், ஹைட்ரஜன் பிளாசுமாவால் உருவான வெப்பப் புகையால் சூழப்பட்டும் இருந்தது. அதில் அணு மூலக்கூறுகளான எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் மற்றும் இன்ன பிற அடிப்படைத் துகள்கள் அனைத்தும் இந்த புகையுள் நிறைந்து காணப்பட்டது. ஆனால் அதன் அதித வெப்பம் காரணமாக இந்த மூலக்கூறுகள் ஒன்றினைந்து அணுக்களாக மாற இயலவில்லை. பின்னர் இந்த பிரபஞ்சம் விரிவடைந்த போது ஹைட்ரஜன் பிளாசுமாவும் அதில் இருத்த வெப்பமும் விரிவடைந்தது, இதனால் பிரபஞ்சம் குளிர்ச்சியடைய தொடங்கியது. அதனால் மூலக்கூறுகள் ஒன்றினைந்து அணுக்களாக மாற முடிந்தது. இந்த நிகழ்வுக்கு பின் எலெக்ட்ரான், புரோட்டானுடன் மோதிக் கொண்டிருந்த ஃபோட்டோன் தனியாகப் பிரிந்தது. இந்த ஃபோட்டோனை இன்று வரை ஒளியாகக் காண முடிகிறது. ஆனால் பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய இதன் ஆற்றல் குறைந்து இப்போது மிகக் குறைவான ஆற்றல் மட்டுமே இதற்கு உள்ளது. பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்தில் இடத்திற்கு இடம் சிறு வெப்ப மற்றும் அடர்த்தி மாற்றங்கள் காணப்படுகிறது.

பெரு வெடிப்புக் கோட்பாடுக்கும் பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்திற்கும் உள்ள தொடர்பு[தொகு]

பிரபஞ்ச நுண்ணலை அம்பலம், பெரு வெடிப்புக் கோட்பாட்டின் சிறந்த ஆதாரமாக அமைகிறது. மேலும் பிரபஞ்ச நுண்ணலையை அளவிடுதலில் ஏற்படும் முன்னேற்றம் பெரு வெடிப்புக் கோட்பாட்டை பிரபஞ்சம் உருவானதை விளக்க சிறந்த மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 1960 ல் பிரபஞ்ச நுண்ணலையை கண்டறிந்த பிறகு பிரபஞ்சம் பற்றிய மற்ற கோட்பாடுகளில் ஆர்வம் குறைந்து விட்டது. பெரு வெடிப்புக் கோட்பாட்டின் படி, இந்தப் பிரபஞ்சம் உருவாகி அதன்பின் விரிவடைந்திருந்தால், வெப்பம் எப்படி பரவியிருக்கும் என்று விஞ்ஞானிகள் உருவாக்கிய மாதிரியுடன் இந்தப் பிரபஞ்ச நுண்ணலை அம்பலம் சரியாக ஒத்துப்போகிறது. இதனால் விஞ்ஞானிகள் பிரபஞ்ச நுண்ணலை அம்பலத்தை, பெரு வெடிப்புக் கோட்பாட்டின் ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபஞ்ச_நுண்ணலை_அம்பலம்&oldid=3499747" இலிருந்து மீள்விக்கப்பட்டது