பிங்கி சிங் யாதவ்
பிங்கி சிங் யாதவ் Pinki Singh Yadav | |
---|---|
17ஆவது சட்டமன்ற உறுப்பினர், உத்திரப்பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 2017 | |
முன்னையவர் | இவரே |
தொகுதி | அஸ்மோலி |
16ஆவது சட்டமன்ற உறுப்பினர், உத்திரப்பிரதேசம் | |
பதவியில் மார்ச் 2012 – மார்ச் 2017 | |
பின்னவர் | இவரே |
தொகுதி | அஸ்மோலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 மார்ச்சு 1981[1] புது தில்லி[1] |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி[1] |
துணைவர் | பிரமோத் யாதவ்[1] |
பிள்ளைகள் | 1 |
பெற்றோர் | பிரஜேந்திர பால் சிங்[1] |
முன்னாள் கல்லூரி | மகாத்மா ஜோதிபா பூலே ரோகில்கந்து பல்கலைக்கழகம் (பி. எட்.) தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக (எல். எல். பி.) |
வேலை | விவசாயி & அரசியல்வாதி |
பிங்கி சிங் (Pinki Singh) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2] இவர் உத்தரப்பிரதேசத்தின் அஸ்மோலி தொகுதி சட்டமன்ற உறுப்பினராவார். பிங்கி சிங் சமாஜ்வாதி அரசியல் கட்சியினை சார்ந்தவர் ஆவார்.[3][4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சிங் புது தில்லியில் மார்ச்சு 25, 1981ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை முன்னாள் அமைச்சர் பிரஜேந்திர பால் சிங் ஆவார். கல்வியியலில் இளங்கலைப் பட்டத்தினை மகாத்மா ஜோதிபா பூலே ரோகில்கந்து பல்கலைக்கழகத்திலும் சட்டப் பட்டப்படிப்பினை தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு படித்து முடித்தார்.[2] இவர் மே 2010இல் பிரமோத் யாதவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]பிங்கி சிங் முதன் முறையாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் அஸ்மோலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[2] பின்னர் மீண்டும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.
தேர்தல் வெற்றிகள்
[தொகு]# | இருந்து | வரை | நிலை | கருத்துகள் |
---|---|---|---|---|
01 | மார்ச் 2012 | மார்ச் 2017 | உறுப்பினர், 16 வது சட்டமன்றம் | |
02 | மார்ச் 2017 | பதவியில் | உறுப்பினர், 17 வது சட்டமன்றம் |
இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Member Profile". U.P. Legislative Assembly website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/32.pdf. பார்த்த நாள்: 1 December 2018.
- ↑ 2.0 2.1 2.2 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=2227. பார்த்த நாள்: 1 December 2018.
- ↑ "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: 1 December 2018.
- ↑ "All MLAs from constituency". elections.in. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=2227. பார்த்த நாள்: 1 December 2018.