பிங்கி சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிங்கி சிங் யாதவ்
Pinki Singh Yadav
17ஆவது சட்டமன்ற உறுப்பினர், உத்திரப்பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2017
முன்னையவர்இவரே
தொகுதிஅஸ்மோலி
16ஆவது சட்டமன்ற உறுப்பினர், உத்திரப்பிரதேசம்
பதவியில்
மார்ச் 2012 – மார்ச் 2017
பின்னவர்இவரே
தொகுதிஅஸ்மோலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 மார்ச்சு 1981 (1981-03-25) (அகவை 43)[1]
புது தில்லி[1]
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி[1]
துணைவர்பிரமோத் யாதவ்[1]
பிள்ளைகள்1
பெற்றோர்பிரஜேந்திர பால் சிங்[1]
முன்னாள் கல்லூரிமகாத்மா ஜோதிபா பூலே ரோகில்கந்து பல்கலைக்கழகம் (பி. எட்.)
தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக (எல். எல். பி.)
வேலைவிவசாயி & அரசியல்வாதி

பிங்கி சிங் (Pinki Singh) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[2] இவர் உத்தரப்பிரதேசத்தின் அஸ்மோலி தொகுதி சட்டமன்ற உறுப்பினராவார். பிங்கி சிங் சமாஜ்வாதி அரசியல் கட்சியினை சார்ந்தவர் ஆவார்.[3][4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சிங் புது தில்லியில் மார்ச்சு 25, 1981ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை முன்னாள் அமைச்சர் பிரஜேந்திர பால் சிங் ஆவார். கல்வியியலில் இளங்கலைப் பட்டத்தினை மகாத்மா ஜோதிபா பூலே ரோகில்கந்து பல்கலைக்கழகத்திலும் சட்டப் பட்டப்படிப்பினை தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு படித்து முடித்தார்.[2] இவர் மே 2010இல் பிரமோத் யாதவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பிங்கி சிங் முதன் முறையாக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் அஸ்மோலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[2] பின்னர் மீண்டும் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.

தேர்தல் வெற்றிகள்[தொகு]

# இருந்து வரை நிலை கருத்துகள்
01 மார்ச் 2012 மார்ச் 2017 உறுப்பினர், 16 வது சட்டமன்றம்
02 மார்ச் 2017 பதவியில் உறுப்பினர், 17 வது சட்டமன்றம்

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Member Profile". U.P. Legislative Assembly website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/32.pdf. பார்த்த நாள்: 1 December 2018. 
  2. 2.0 2.1 2.2 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=2227. பார்த்த நாள்: 1 December 2018. 
  3. "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: 1 December 2018. 
  4. "All MLAs from constituency". elections.in. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=2227. பார்த்த நாள்: 1 December 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கி_சிங்_யாதவ்&oldid=3743727" இலிருந்து மீள்விக்கப்பட்டது