உள்ளடக்கத்துக்குச் செல்

பி. சண்முகம் (வேலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. சண்முகம்
நாடாளுமன்ற உறுப்பினர் வேலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-10-10)10 அக்டோபர் 1946
அகரம்சேரி, வேலூர்தமிழ்நாடு
இறப்புபெப்ரவரி 26, 2016(2016-02-26) (அகவை 69)
அகரம்சேரி
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்ற கழகம்
துணைவர்திருமதி எஸ். பிரேமா
தொழில்அரசியல்வாதி

ப. சண்முகம் (P. Shanmugam, அக்டோபர் 10, 1946 – பிப்ரவரி 26, 2006) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவரது தந்தை பஞ்சாட்சரம் முதலியார் மற்றும் தாயார் கமலா அம்மாள் ஆகியோர் ஆவார். இவர் வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக 1996 முதல் 1998 வரை பதவி வகித்துள்ளார்.[1] இவர் ஒரு சமூக சேவகர், தொழிலதிபர் மற்றும் விவசாயியும் ஆவார்.[மேற்கோள் தேவை]

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி. அக்பர் பாஷா என்பவரை 2,11,035 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார்.[2] இவர் பிப்ரவரி 26, 2006ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

வகித்த பதவிகள்

[தொகு]
  •  திமுகவின் வேலூர் மாவட்ட செயலாளராக இருந்தார். தி. மு. கழகத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
  • அகரம்சேரி பாய் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்
  • ஆம்பூரில் உள்ள 'ஆம்பூர் மார்கெட்டிங்' சங்கங்களின் தலைவராக பதவி வகித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ex-DMK MP Shanmugam passes away". டெக்கன் ஹெரால்டு. 15 February 2006 இம் மூலத்தில் இருந்து 14 செப்டம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170914125137/http://archive.deccanherald.com/deccanherald/feb152006/national1818462006214.asp. பார்த்த நாள்: 14 February 2016. 
  2. "Vellore(Tamil Nadu) Lok Sabha Election Results 2014 with Sitting MP and Party Name". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சண்முகம்_(வேலூர்)&oldid=3943948" இலிருந்து மீள்விக்கப்பட்டது