பி. சண்முகம் (வேலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ப. சண்முகம்
பாராளுமன்ற உறுப்பினர் வேலூர்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 10, 1946(1946-10-10)
அகரம்சேரி, வேலூர்தமிழ்நாடு
இறப்பு பெப்ரவரி 26, 2016(2016-02-26) (அகவை 69)
அகரம்சேரி
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்ற கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி எஸ். பிரேமா
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து

பி. சண்முகம் (அக்டோபர் 10, 1946 – பிப்ரவரி 26, 2006) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவரது தந்தை பஞ்சாட்சரம் முதலியார் மற்றும் தாயார் கமலா அம்மாள் ஆகியோர்கள் ஆவார். இவர் வேலூர் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக 1996 முதல் 1998 வரை பதவி  வகித்துள்ளார்.[1] இவர் ஒரு சமூக சேவகர், தொழிலதிபர் மற்றும் விவசாயியும் ஆவார்.[மேற்கோள் தேவை]

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், இவரை எதிர்த்து போட்டியிட்ட  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி. அக்பர் பாஷா என்பவரை 2,11,035 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். இவர் பிப்ரவரி 26, 2006 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

வகித்த பதவிகள்[தொகு]

  •  திமுகவின் வேலூர் மாவட்ட செயலாளராக இருந்தார். தி. மு. கழகத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
  • அகரம்சேரி பாய் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்
  • ஆம்பூரில் உள்ள 'ஆம்பூர் மார்கெட்டிங்' சங்கங்களின் தலைவராக பதவி வகித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சண்முகம்_(வேலூர்)&oldid=2759170" இருந்து மீள்விக்கப்பட்டது