நந்தினி சங்கர்
நந்தினி சங்கர் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 07/01/1993 மும்பை, இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, இணைவு இசை |
தொழில்(கள்) | வயலின் கலைஞர் |
இசைக்கருவி(கள்) | வயலின் |
இணையதளம் | www.nandinishankar.com |
நந்தினி சங்கர் (Nandini Shankar) இவர் ஓர் இந்திய வயலின் கலைஞராவார். இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் இணைவை நிகழ்த்துகிறார். இவர் முனைவர் சங்கீதா சங்கர் என்பவரின் மகளாவார். [1] மேலும், புகழ்பெற்ற பத்ம பூசண் முனைவர் என். ராஜம் என்பாரது பேத்தியாவார். [2] இவர் தற்போது மும்பையில் வசிக்கிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
இவர் தனது மூன்று வயதில் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். மேலும் 8 வயதில் தனது முதல் இசை நிகழ்ச்சியினை பொதுவெளியில் நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். இவர் தனது தனது முதல் முழுமையான நிகழ்ச்சியினை தனது 13 வயதில் வழங்கினார். [3] இவர் "கயாக்கி ஆங்" என்ற வயலின் வாசிப்பவராவார் .
கல்வி[தொகு]
நந்தினி சங்கர் கல்வியில் சிறந்து விளங்கினார். இவர் வர்த்தகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மேலும் தகுதிவாய்ந்த இந்திய பட்டய கணக்காளர் ஆவார். இசையில் முதுகலையையும் முடித்துள்ளார்.
தொழில்[தொகு]
இவர் 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மிட் டவுன் மன்ஹாட்டனில் மதிப்புமிக்க கார்னகி அரங்கத்தில் [4] ஒரு இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளார். அமெரிக்கா, [4] கனடா, நியூசிலாந்து, [5] இங்கிலாந்து, [6] பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஹங்கேரி, ஐக்கிய அரபு அமீரகம், [7] வங்காளதேசம், [8] மலேசியா, இலங்கை, இந்தோனேசியா [9] மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தனது நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளார். [10] யூரோபாலியா, [11] சவாய் காந்தர்வா பீம்சென் விழா, [12] [13] [14] யக்சா (திருவிழா), [15] சப்தக் இசை விழா, [16] பஞ்சம் நிஷாத்துக்கான ஆரோகி, [17] ஐடிசி நிறுவனத்தின் சங்கீத ஆராய்ச்சி அமைப்பின் சங்கீத சம்மேளன்ம், [18] மேரு, நெதர்லாந்து [19] நடிகை, ஹேம மாலினி வழங்கிய ஜெய ஸ்மிருதி, [20] நுண்கலைகள் கோயில், [21] பில்வரா சுர் சங்கம், [22] இந்திய நடிப்புக் கலைக்கான சங்கம், [23] டி.என். கிருஷ்ணன் அறக்கட்டளை, [24] தில்லி சர்வதேச கலை விழா, [25] வங்காள இசை அறக்கட்டளை, டோவர் லேன் இசை மாநாடு [26] போன்ற பல்வேறு மதிப்புமிக்க விழாக்களில் இவர் தனது வயலின் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மேலும் ''ஐடியா ஜல்சா'' என்ற தொலைக்காட்சியிலும் இவரது இசை ஒளிபரப்பப்பட்டது.. [27] இவர் தனது சகோதரி இராகினி சங்கருடன் ஒரு காணொளிக் காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். [28]
இவர் கௌசிகி சக்ரவர்த்தியால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் அனைத்து பெண் இந்திய பாரம்பரிய இசைக்குழுவான சாகியின் ஒரு பகுதியாவார். [29] உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகைகளை இணைக்கும் ஒரு இணைவு இசைக்குழுவான 'இன்ஸ்ட்ரிங்ஸ்' இன் ஒரு பகுதியாவார்.
விருதுகள் & மரியாதை[தொகு]
2007இல் சங்கீதா பண்டிட் லால்மணி மிஸ்ரா கிஷோர் ஆதிதா விருதினைப் பெற்றுள்ளார். [30] இவருக்கு, திரைப்பட நடிகையும் நடனக் கலைஞருமான ஹேமா மாலினி, 'ஜெய ஸ்மிருதி' என்றப் பட்டத்தை 2012இல் வழங்கினார் 2018இல் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அவர்கள் " ஜஷ்ன்-இ-யங்கிஸ்தான்" [31] என்ற பட்டத்தை வழங்கினார். இது நாட்டின் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தியைக் கொண்டாடும் மரியாதையாகும்.
விமர்சனங்கள்[தொகு]
"நந்தினி, தனது உள்ளுணர்வு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மிகப்பெரிய செயதிறனை நிகழ்த்திக் காட்டினார்." [18] இளம் நந்தினி சங்கருக்கு அவரது திறமையைக் காட்ட ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மேலும் அவர் அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். பார்வையாளர்களை தனது இசையால் ஈர்க்கக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தினார்." என்று இவரது திறன் பாராட்டப்பட்டது.[32]
குறிப்புகள்[தொகு]
- ↑ Sangeeta Shankar - The Legacy Continues, archived from the original on 2015-04-11, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ N. Rajam
- ↑ Nandini Shankar's Official Website
- ↑ 4.0 4.1 Carnegie Hall, archived from the original on 2015-06-04
- ↑ Young Violin Master to perform in New Zealand next month
- ↑ Indika: Evening Raga - Ragini & Nandini Shankar, archived from the original on 2020-09-20, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ Hindustani Violin Concert
- ↑ Violins charm Bengal classical fest
- ↑ Sakhi: Bold and beautiful
- ↑ Nandini Shankar
- ↑ Europalia, archived from the original on 2018-10-31, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ DNA Syndication, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ DNA India - Pune's Sawai Gandharva Mahotsav ends on a soulful note
- ↑ Mid-Day Archives: Performance by 3 generations of family steals show on final day
- ↑ Yaksha (festival)
- ↑ Saptak Annual Festival
- ↑ Pancham Nishad - Past Events, archived from the original on 2014-06-23, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ 18.0 18.1 ITC - Sangeet Sammelan, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ MERU Concerts - Three Generations (PDF), archived from the original (PDF) on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ Solaris Event Archives, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ Thyagaraja Tansen Music Festival, The Temple of Fine Arts, Malaysia
- ↑ Bhilwara Group presents music festival
- ↑ Gallery, The Association of Performing Arts of India, archived from the original on 2018-06-09, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ Parampara, T. N. Krishnan Foundation, archived from the original on 2016-03-03, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ Delhi International Arts Festival
- ↑ Dover Lane Music Conference
- ↑ Youtube, Payoji Maine - Bhajan (Dr. N. Rajam, Sangeeta Shankar, Ragini Shankar & Nandini Shankar)
- ↑ Legendary Legacy, Record Label, archived from the original on 2016-03-04, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ First All Women's Classical Band, Sakhi
- ↑ Award Recipients - O. P. Chourasiya, archived from the original on 2015-02-17, பார்க்கப்பட்ட நாள் 2020-02-23
- ↑ Jashn-E-Youngistan 2018 honoured violinsts Ragini Shankar and Nandini Shankar
- ↑ The Hindu - New Delhi