உள்ளடக்கத்துக்குச் செல்

தௌணோஜம் சாவோபா சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தௌனோஜம் சாவோபா சிங்
பிறப்பு24 மே 1937
உட்லோ,பிஷ்ணுபூர் மாவட்டம்
தேசியம் இந்தியா
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
உறவினர்கள்தௌணோஜம் பசந்த சிங் (மகன்)

தௌனோஜம் சாவோபா சிங் (Thounaojam Chaoba Singh) (பிறப்பு: மே 24, 1937, மணிப்பூரின், பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள உட்லோ ) என்பவர் முன்னாள் இந்திய மத்திய அமைச்சரும், மணிப்பூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். [1] [2] மணிப்பூர் மக்களால் இவர் உட்லோ சாவோபா என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1972 முதல் 1995 வரை, நம்போல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974 முதல் 1975 வரை மணிப்பூர் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்துள்ளார். 1994 முதல் 1995 வரை மணிப்பூரின் துணை முதல்வராகவும் இருந்தார்.

1996 இல் 11 வது மக்களவைக்கு உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியிலிருந்து 1998 இல் பன்னிரண்டாவது மக்களவைக்கும் 1999 இல் பதின்மூன்றாவது மக்களவைக்கும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997-ல் காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு, பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் அவர்களின் அரசில் மத்திய அமைச்சராக, கலாச்சாரம், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரானார்.

2004 இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சௌபா சிங் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இவர் மணிப்பூர் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், 2006 வரை அந்தப் பதவியில் இருந்தார். இடைப்பட்ட ஆண்டுகளில், சிங் தனது சொந்த மணிப்பூர் மக்கள் கட்சியை உருவாக்கினார்.

2012 இல், மீண்டும் மணிப்பூர் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2016 வரை அந்தப் பதவியில் இருந்தார். [3]

2017இல் நடைபெற்ற மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலின் போது முதலமைச்சர் பதவிக்கு வர இருப்பவர்களில் ஒருவராக இருப்பார் என பல்வேறு ஆதாரங்கள் கூறின. இருப்பினும், இவர் நம்போல் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்ததால் அப்பதவி ந. பீரேன் சிங்கிடம் சென்றது.

விருதுகள்

[தொகு]

பொது அலுவல்களில் இவரது பங்களிப்பிறக்காக 2023 ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [4]

சான்றுகள்

[தொகு]
  1. "BJP mulls legal battle against funds misuse". Archived from the original on 18 April 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.
  2. "Chaoba Singh out of poll race". Archived from the original on 18 November 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-09-23.
  3. "Chaoba is Manipur BJP chief, to fight corruption". The Times of India. 18 December 2012. https://timesofindia.indiatimes.com/city/guwahati/Chaoba-is-Manipur-BJP-chief-to-fight-corruption/articleshow/17658915.cms. 
  4. "Two from Manipur among Padma Shri awardees". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-01-26. பார்க்கப்பட்ட நாள் 2023-04-11.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தௌணோஜம்_சாவோபா_சிங்&oldid=3773920" இலிருந்து மீள்விக்கப்பட்டது