தெற்கு ஜோர்ஜியா நெட்டைக்காலி
தெற்கு ஜோர்ஜியா நெட்டைக்காலி | |
---|---|
தெற்கு ஜோர்ஜியாவில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஆ. அண்டார்டிகசு
|
இருசொற் பெயரீடு | |
ஆந்தசு அண்டார்டிகசு கேபானிசு, 1884 |
தெற்கு ஜோர்ஜியா நெட்டைக்காலி (South Georgia pipit)(ஆந்தசு அண்டார்டிகசு) என்பது அண்டார்டிக்கா மூவலந்தீவில் உள்ள தெற்கு ஜோர்ஜியா தீவுக்கூட்டத்தில் மட்டுமே காணப்படும் குருவி அளவிலான பறவையாகும். இது அந்தாட்டிக்கா கண்டத்தில் உள்ள ஒரே பாடும் பறவை ஆகும். தெற்கு ஜோர்ஜியாவின் ஒரே பசாரிபார்மிசு பறவையான இது கடல் பறவைகள் அல்லாத பறவைகளில் ஒன்றாகும்.
விளக்கம்
[தொகு]தெற்கு ஜோர்ஜியா நெட்டைக்காலி ஒரு சிறிய மற்றும் குட்டையான வல்லுறுதி வாய்ந்த நெட்டைக்காலி ஆகும். இது 17 செ.மீ. நீளமானது. இதன் எடை 36 கிராம் ஆகும். இந்த இனம் நீண்ட கால்கள் மற்றும் மிக நீண்ட கால்நகம் மற்றும் ஒரு குறுகிய வாக் கொண்டுள்ளது.[2]
நடத்தை
[தொகு]தெற்கு ஜோர்ஜியா நெட்டைக்காலி உலர்ந்த புல்லினால் கூடுகளை உருவாக்குகிறது. பொதுவாக டுசாக் எனும் ஒரு வகைப் புல்லில் கூட்டினை கட்டுகிறது. ஒரு வருடத்திற்கு நான்கு முட்டைகள் வரை இடும். இது சிறிய பூச்சிகள் மற்றும் சிலந்திகள் மற்றும் கடற்கரைக் குப்பைகளை உண்கிறது.
பாதுகாப்பு
[தொகு]இத்தீவுகளில் மனிதனால் அறிமுகம் செய்யப்பட்ட எலிகள் மற்றும் மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றால் இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 2011-ல் தெற்கு ஜோர்ஜியாவில் எலிகளை ஒழிக்கத் தொடங்கிய தெற்கு ஜோர்ஜியா பாரம்பரிய அறக்கட்டையின் வாழ்விட மறுசீரமைப்பு (எலி ஒழிப்பு) திட்டத்தின் சுவரொட்டியில் இப்பறவையின் படம் இடம்பெற்றிருந்தது. இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டம் 2015-ல் தொடக்கத்தில் முடிவடைந்தது; மேலும் 2018-ல் திட்டத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.[3] பிரியான் தீவு மற்றும் தெற்கு ஜோர்ஜியாவில் உள்ள எந்த கடற்கரையிலும் இந்த பறவையை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2021). "Anthus antarcticus'". IUCN Red List of Threatened Species 2021: e.T22705324A177963150. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T22705324A177963150.en. https://www.iucnredlist.org/species/22705324/177963150. பார்த்த நாள்: 1 January 2022.
- ↑ "South Georgia Pipit - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-17.
- ↑ Amos, Jonathan (2018-05-09). "Rodents driven from South Georgia". BBC News. https://www.bbc.co.uk/news/science-environment-44046472.