உள்ளடக்கத்துக்குச் செல்

துர்ஜாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துர்ஜாதி (Dhurjati) (தெலுங்கு: ధూర్ఝటి) (பொது ஊழி 15 அல்லது 16ஆம் நூற்றாண்டுகள் ) ஒரு பிரபலமான தெலுங்குக் கவிஞரும் விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனின் அரசவையிலிருந்த அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகவும் இருந்தார்.[1]

சுயசரிதை

[தொகு]

ஸ்ரீகாளஹஸ்தி என்ற ஊரில் சிங்கம்மா மற்றும் நாராயணன் ஆகியோருக்குப் பிறந்த சிறந்த சிவ பத்தரான இவர், ஆரம்பகால சோழர்களின் பகுதியாக இருந்த கொட்டாபி ( தற்போதைய சோழர்) நாட்டைச் சேர்ந்தவராக கருதப்படுகிறார்.

படைப்புகள்

[தொகு]

இவரது படைப்புகள் சிவபெருமானைப் புகழ்ந்து பேசுவதாகும். இவரது புகழ்பெற்ற படைப்புகளில் "ஸ்ரீகலாஹஸ்தீசுவர மகாத்மியம்" (சிவபெருமானின் அருள் / அற்புதங்கள்) மற்றும் "ஸ்ரீகலாஹஸ்தீசுவர சதகம்" (சிவபெருமானின் புகழைப்பாடும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள்) ஆகியவை அடங்கும்.

ஒரே குடும்பத்தில் இதே காலத்தைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் அதே துர்ஜாதி என்ற பெயரில் இருந்ததால் இவர் பெத்த துர்ஜாதி (தெலுங்கு: மூத்தவர்) என்று அழைக்கப்பட்டார். இவரது பேரன் வெங்கடராய துர்ஜாதி என்பவர் காளிதாசனின் இரகுவம்சத்திலிருந்து இந்துமதி பரிணயம் (இந்துமதியின் திருமணம்) என்ற காவியத்தை எழுதினார்.

கிருஷ்ணதேவராயர் துர்ஜதியை பின்வருமாறு பாராட்டியுள்ளார் "ஸ்தூதிமதி யைனா ஆந்திரகாவி துர்ஜாதி பால்குலகலகல்ஜெனோ யுதூலிதா மாதுரி மஹிமா. . . . " (துர்ஜாதியின் கவிதை எப்படி மிகவும் அழகாக இருக்கிறது). [2]

குறிப்புகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. https://manishjaishree.com/contribution-of-dhurjati/
  2. Dhurajti பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்ஜாதி&oldid=3149401" இலிருந்து மீள்விக்கப்பட்டது