தாமசு சாழிகடன்
தாமசு சாழிக்கடன் Thomas Chazhikadan | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | இயோசு கே. மணி |
தொகுதி | கோட்டயம் |
உறுப்பினர், கேரள சட்டமன்றம் | |
பதவியில் 1991 –2011 | |
பின்னவர் | K. Suresh Kurup |
தொகுதி | ஏற்றுமானூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 செப்டம்பர் 1952 ஏற்றுமானூர், திருவாங்கூர் கொச்சி (தற்பொழுது கோட்டயம், கேரளம்), இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | கேரள காங்கிரசு (மணி) |
வாழிடம் | எசு.எச். மவுண்ட்டு, குமரநல்லூர், கோட்டயம், கேரளா, 686016 |
முன்னாள் கல்லூரி | இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் |
தாமசு சாழிக்கடன் (Thomas Chazhikadan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பட்டயக் கணக்காளர், கோட்டயம் மக்களவைத் தொகுதியில் இருந்து தற்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், 1991 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரளாவின் ஏற்றுமானூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என பன்முகங்களுடன் இவர் அறியப்படுகிறார்.[1] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோட்டயத்தில் இருந்து கேரள காங்கிரசு (எம்) வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கேரள காங்கிரசு (மணி) கட்சியைச் சேர்ந்தவராவார்.[2]
அரசியல்வாதியான பாபு சாழிக்கடனின் மூத்த சகோதரர் என்று இவர் அறியப்படுகிறார். ஏற்றுமானூர் சட்டமன்றத் தொகுதியின் அசல் வேட்பாளராக இருந்த பாபு சாழிக்கடன் 1991 தேர்தல் பிரச்சாரத்தின் போது மின்னல் தாக்கி கொல்லப்பட்டார்.
தாமசு சாழிகடன் இப்போது கேரளாவின் கோட்டயத்தில் உள்ள பட்டய கணக்காளர் நிறுவனமான தாமசு சாழிக்கடன் & இணையர்கள் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]தாமசு சாழிக்கடன் 25 செப்டம்பர் 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று கோட்டயத்தில் உள்ள வெளியன்னூரில் சிரியாக்கு மற்றும் ஏலியம்மா சாழிகடன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஒய்எம்சிஏ போன்ற பல சமூக சேவைக் கழகங்களில் உறுப்பினராக இருந்தார்; அரிமா சங்க உறுப்பினராகவும், கோட்டயம் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், நியூ பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கோட்டயத்தில் உள்ள வங்கியாளர்கள் மன்றத்தின் செயலாளராகவும், மகாத்மா காந்தி பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M.K, Nidheesh (2019-03-12). "Kerala: Congress ally KC(M) at the verge of implosion". Mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-13.
- ↑ "Kerala". The Journal of Parliamentary Information (Lok Sabha Secretariat) 38: 59. 1992. பன்னாட்டுத் தர தொடர் எண்:0447-9408.