உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம்
பொறுப்புஇந்தியாவில் பட்டயக் கணக்கறிஞர்கள் தொழிலை வழிநடத்த உறுவாக்கபட்ட சட்டபூர்வமான நிறுவனம்
தலைவர்பி.பிரஃபுல்லா சாஜத் [1]
துனைத்தலைவர்CA.G.இராமசாமி[2]
உறுப்பினர்கள்154,933
மாணவர்கள்518,798
உறுப்பினர்களின் அடையாளம்ACA & FCA
இணையதளம்www.icai.org

இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (English:Institute of Chartered Accountants of India (ICAI)) பட்டயக் கணக்கறிஞர்கள் சட்டம், 1949 இன் படி இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் தொழிலை வழிநடத்த உறுவாக்கபட்ட சட்டபூர்வமான நிறுவனம் ஆகும். இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம், உலகிலேயே இரண்டாவது மிகபெரிய கணக்கியல் நிறுவனம் ஆகும்[3]. பட்டயக் கணக்கறிஞர்கள் சட்டம், 1949 இன் படி இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் அமைக்கபட்ட பிறகு பட்டயக் கணக்கறிஞர் என்ற சொல் பதிவுபெற்ற கணக்காளர் என்பதற்கு பதிலாக வழக்குக்கு வந்தது. இந்த கழகம் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் முன்பே தோற்றுவிக்கபட்டது என்பதே இதன் சிறப்பை மேற்கோளிட்டு காட்டுகிறது. இந்த கழகம் இந்தியாவில் கணக்கியல் மற்றும் கணக்காய்வு கோட்பாடுகளை வகுக்க அதிகாரம் பெற்ற ஒரே அமைப்பாகும்.

வரலாறு

[தொகு]

1913 இல் இயற்றபட்ட இந்திய நிறுமச் சட்டம், முதல்முறையாக ஒரு நிறுமம் குறிப்பிட்ட கணக்கு ஏடுகளை எழுதி பராமரிக்க வேண்டும் என்று உறைத்தது. மேலும் இந்த கணக்கு ஏடுகளை கணக்காய்வு செய்ய குறிப்பிட்ட தகுதி உடைய ஒருவரை கணக்காய்வாளராக பணியில் அமர்த்த வேண்டும் என்றது. ஒருவர் கணக்காய்வாளராக பணியாற்ற மாகாண அரசிடமிறுந்து கட்டுப்பாடுக்குட்பட்ட சான்றிதழ் ஒன்றை பெற வேண்டும்.

1930 இல் கணக்காளர் பதிவேடு ஒன்றை அமைக்க இந்திய அரசு முடிவு செய்தது. இந்த பதிவேட்டில் இடம் பெற்ற நபர்கள் பதிவுபெற்ற கணக்காளர் என்று அழைக்கபட்டனர். அதன் பிறகு இந்திய அரசை கணக்கியல் மற்றும் கணக்காய்வாளர் பெற வேண்டிய தகுதிகள் பற்றி பரிந்துறைக்க இந்திய கணக்கியல் வாரியம் என்ற அமைப்பு உறுவாக்கபட்டது. எனினும் கணக்கியல் துறை சரியாக முறைபடுத்தபடவில்லை என்று பரவலாக நினைக்கபட்டது. அதனால் 1948 இல் கணக்கியல் துறையை முறைபடுத்த கணக்காளர்களை கொண்டு தன்னாட்சி பெற்ற அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வல்லுனர் குழு ஒன்று பரிந்துரை செய்தது. அதன்படி பட்டயக் கணக்கறிஞர்கள் சட்டம், 1949 நிறைவேற்றபட்டது. எனினும் கணக்கியல் துறை சரியாக முறைபடுத்தபடவில்லை. இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் பெறும்பாலும் சில குறிப்பிட்ட உயர் சமூகத்தினர்களாகவே உள்ளனர். இந்தியாவில் பல திறமையானவர்களுக்கு பட்டயக் கணக்கறிஞர் கழகம் நல்ல வாய்ப்பு நல்குகிறது, மற்றும் கிராமப்புறத்தில் உள்ள மாணவ மாணவிகள் இக்கல்வியை பயில வாய்ப்புகள் அளிக்கின்றன பட்டயக் கணக்கறிஞர் கழகம்.

இந்திய பட்டயக் கணக்கறிஞர் ஆவது எளிதல்லாத ஒன்றாய் விளங்குகிறது. இந்திய பட்டயக் கணக்கறிஞர் இறுதித் தேர்வு உலகின் மிக கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. பிற தேர்வுகளுடன் ஒப்பிடும்போது வெற்றி விகிதம் மிகக் குறைவே.அடித்தளத் தேர்வுக்கான காலம் ஆறு மாதம்,அல்லது ஏதோ ஒரு பட்டப்படிப்பு கீழ்நிலை படித்திருக்க வேண்டும்.இடைநிலை தேர்வுக்கு காலம் எட்டு மாதம் . பிறகு இரண்டரை ஆண்டுகள் ஒரு பட்டையக் கணக்கறிஞரிடம் கீழ் வேலை பார்த்து பிறகு இறுதித் தேர்வுக்கு தயாராகி தேர்வளிக்க வேண்டும்.

இந்தியாவில் பட்டயக் கணக்கறிஞர்களுக்கு ஆட்சியர் மற்றும் மருத்துவர்களுக்கு இணையான மதிப்பு வழங்கப்படுகிறது.பொதுவாக பட்டையக் கணக்கருக்கு வேலைவாய்ப்பு பெரிதளவில் உள்ளது. இந்தியாவின் பல பிரபலங்கள் பட்டயக் கணக்கராக இருக்கின்றனர்.எடுத்துக்காட்டாக அமைச்சர் பியூசு கோயல்,ஆதித்ய பிர்லா, இராகேசு சுன்சுன்வாலாவாலா, மேலும் பலர்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

ஆதாரங்கள்:

[தொகு]
  1. New President of ICAI
  2. New Vice President of ICAI
  3. ICAI ஐ பற்றி அதன் இணையதளம்