உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
Tamil National People's Front
தலைவர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செயலாளர் நாயகம்செல்வராசா கஜேந்திரன்
நிறுவனர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தொடக்கம்28 பெப்ரவரி 2010 (2010-02-28)
பிரிவுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தலைமையகம்43, 3-ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம், இலங்கை
கொள்கைதமிழ்த் தேசியம்
பிரதேசவாதம்
சமயச் சார்பின்மை
நிறங்கள்    
17-வது நாடாளுமன்றம்
1 / 225
இணையதளம்
www.tnpf.info
இலங்கை அரசியல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (Tamil National People's Front, TNPF) என்பது இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இலங்கை அரசியல் கூட்டணியாகும். இக்கூட்டணி 2010 பெப்ரவரி 28 ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து உருவானது.[1] இக்கூட்டணியின் தலைவராக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் இக்கூட்டணியின் உறுப்பினர்கள் ஆவர்.[2] இக்கூட்டணி 2010, 2015 நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது. ஆனாலும் எவரும் வெற்றி பெறவில்லை. 2013 மாகாண சபைத் தேர்தல், மற்றும் 2015 சனாதிபதித் தேர்தல்களை ஒன்றியொதுக்கியது.

2010 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

2010 ஏப்ரல் 8 ஆம் நாள் நடைபெற்ற 2010 நாடாளுமன்றத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மட்டும் போட்டியிட்டு மொத்தம் 0.09% வாக்குகளைப் பெற்றது. ஆனாலும் நாடாளுமன்றத்திற்கு எந்த வேட்பாளரும் தெரிவு செய்யப்படவில்லை.

போட்டியிட்ட மாவட்டங்கள் வாரியாக ததேமமு பெற்ற வாக்குகள்

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் மொத்த வாக்களிப்பு வீதம் ததேமமு உறுப்பினர்கள்
யாழ்ப்பாணம் 6,362 4.28% 0 23.33% 0
திருகோணமலை 1,182 0.85% 0 62.20% 0
மொத்தம் 7,544 0.09% 0 61.26% 0
மூலம்:"நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் – 2010". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2010-04-14. பார்க்கப்பட்ட நாள் 2013-04-03.

2015 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

2015 ஆகத்து 17ஆம் நாள் நடைபெற்ற 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வட, கிழக்கு மாகாணங்களின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்டு மொத்தம் 18,644 (0.17%) வாக்குகளைப் பெற்றது. ஆனாலும் நாடாளுமன்றத்திற்கு எந்த வேட்பாளரும் தெரிவு செய்யப்படவில்லை.

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் மொத்த வாக்களிப்பு வீதம் ததேமமு உறுப்பினர்கள்
யாழ்ப்பாணம் 15,022 5.00% 0 61.56% 0
வன்னி 1,174 0.71% 0 71.89% 0
திருகோணமலை 1,144 0.63% 0 74.34% 0
மட்டக்களப்பு 865 0.36% 0 69.11% 0
அம்பாறை 439 0.13% 0 73.99% 0
மொத்தம் 18,644 0.17% 0 77.66% 0
மூலம்:"நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் – 2015". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2015-09-27. பார்க்கப்பட்ட நாள் 2015-08-21.

2020 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

2020 ஆகத்து 5ஆம் நாள் நடைபெற்ற 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட, கிழக்கு மாகாணங்களின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்டு மொத்தம் 67,766 (0.58%) வாக்குகளைப் பெற்றது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும், தேசியப் பட்டியல் மூலம் ஒரு ஆசனத்தையும் பெற்றது.

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் மொத்த வாக்களிப்பு வீதம் ததேமமு உறுப்பினர்கள்
யாழ்ப்பாணம் 55,303 15.40% 1 68.92% கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வன்னி 8,232 3.96% 0 78.34% -
திருகோணமலை 2,745 1.29% 0 78.62% -
மட்டக்களப்பு 1,203 0.40% 0 76.83% -
அம்பாறை 283 0.07% 0 78.28% -
தேசியப் பட்டியல் - - 1 - செல்வராசா கஜேந்திரன்
மொத்தம் 67,766 0.58% 2 75.89% 2
மூலம்:"நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் – 2020". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்

[தொகு]

2024 நவம்பர் 14-ஆம் நாள் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வட, கிழக்கு மாகாணங்களின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்டு மொத்தம் 39,894 (0.36%) வாக்குகளைப் பெற்றது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தைப் பெற்றது.

தேர்தல்
மாவட்டம்
வாக்குகள் % இடங்கள் மொத்த வாக்களிப்பு வீதம் ததேமமு உறுப்பினர்கள்
யாழ்ப்பாணம் 27,986 8.60% 1 60.37% கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
வன்னி 7,492 3.82% 0 68.98% -
திருகோணமலை 1,592 0.75% 0 69.14% -
மட்டக்களப்பு 1,784 0.62% 0 67.24% -
அம்பாறை 1,090 0.30% 0 68.51% -
மொத்தம் 39,944 - 1 - 1
மூலம்:"நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் – 2024". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil National Peoples Front launched in Jaffna". தமிழ்நெட். 1 மார்ச் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31285. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2010. 
  2. . தமிழ்நெட். 24 February 2011. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33589. பார்த்த நாள்: 6 மே 2011.