உள்ளடக்கத்துக்குச் செல்

தனி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனி மொழி (language isolate) என்பது, பிற மொழிகளுடன் விளக்கிக் காட்டக்கூடிய இனத்தொடர்பு எதுவும் அற்ற ஒரு இயற்கை மொழியைக் குறிக்கும். அதாவது, தனி மொழிகள், வேறு மொழிகளுடன் பொது மூதாதையைக் கொண்டிராதவை. தனி மொழிகள் என்பவை உண்மையில் ஒரு மொழியை மட்டும் கொண்டுள்ள மொழிக் குடும்பங்களாகும். பொதுவாக எடுத்துக்காட்டப்படும் தனி மொழிகளுள் அயினு, பாஸ்க், கொரிய மொழி, சுமேரியம், ஈலமைட்டு போன்றவை உள்ளடங்கும். எனினும், சிறுபான்மை மொழியியலாளர்கள் மேற்காட்டிய மொழிகளுக்கு வேறு மொழிகளுடன் இனத்தொடர்புகள் இருப்பதாகக் கருதுகின்றனர்.[1]

சில மூலங்கள், தனி மொழி என்பதை பெரிய மொழிக் குடும்பம் ஒன்றின் ஒரேயொரு மொழியைக் கொண்ட கிளை ஒன்றைக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, அல்பேனியம், ஆர்மேனியம், கிரேக்கம் ஆகிய மொழிகள் இந்திய-ஐரோப்பியத் தனி மொழிகள் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனி_மொழி&oldid=3840391" இலிருந்து மீள்விக்கப்பட்டது