ஜே. எம். எச். அசன் மவுலானா
Appearance
ஜே. எம். எச். அசன் மவுலானா | |
---|---|
தொகுதி | வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1985 சென்னை |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | ஷாஜிதா பர்வீன் |
வாழிடம் | சென்னை |
ஜே. எம். எச். அசன் மவுலானா ஆங்கிலம் J.M.H. Aassan Maulaana இந்திய அரசியல்வாதி இவரது தந்தை பெயர் ஜே. எம். ஆரூண்ரஷீத், இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக தேனி நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியுள்ளார். தாயார் பெயர் ஹாஜிரான் பீவி பிறந்தது 1985ம் ஆண்டு. பிறந்த ஊர் சென்னை .
ஷாஜிதா பர்வீன் என்ற மனைவி உள்ளார். சென்னை புதுக்கல்லூரியில் 2005 ஆம் ஆண்டு எம்.பி.ஏ படித்துள்ளார். அடிப்படையில் தொழிலதிபர்.
தேர்தல் களத்தில்
[தொகு]தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 76,877 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ல் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 68,493 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.[1]