ஜெயந்தி குமரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயந்தி குமரேஷ் (Jayanthi Kumaresh) இந்தியாவின் வீணைக் கலைஞர்களில் ஒருவராவார்.[1][2][3] ஜெயந்தி ஆறு தலைமுறைகளாக கர்நாடக இசைக்கலைஞர்களாக உள்ள பரம்பரையில் இருந்து வருகிறார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

ஜெயந்தி தனது 3 வயதிலிருந்து சரசுவதி வீணையை இசைக்கத் தொடங்கினார். இவரது தாயார் லால்குடி ராஜலட்சுமி முதல் ஆசிரியராக இருந்தார். பின்னர் இவர் தனது தாய்வழி அத்தையான பத்மாவதி அனந்தகோபாலன் என்பவரிடம் வீணையைக் கற்றுக் கொண்டார். வீணை மேதையான, சுந்தரம் பாலச்சந்தரிடமிருந்து வீணையைக் கற்றுக் கொள்வதற்கும் அவருடன் நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்கும் ஒரு அரிய வாய்ப்பையும் இவர் பெற்றார். ஜெயந்தி வித்வான் குமரேஷ் ராஜகோபாலன் என்பவரை மணந்தார். பிரபல வயலின் கலைஞர்களான கணேஷ் மற்றும் குமரேஷ் சகோதரர்களில் குமரேஷ் ராஜகோபாலன் இளையவராவார். ஜெயந்தி புகழ்பெற்ற வயலின் கலைஞர் சிறீ லால்குடி ஜெயராமனின் மருமகளாவார்.

நிகழ்ச்சிகள்[தொகு]

முனைவர் ஜெயந்தி இந்தியாவில் சவாய் காந்தர்வ் மகோத்சம், காண சரசுவதி சமரா, குவாலியர் இசை விழா போன்ற பல மதிப்புமிக்க விழாக்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். சான் பிரான்சிஸ்கோ ஜாஸ் விழா, தர்பார் இசைத் திருவிழா, குயின்சுலாந்து இசை விழா, டார்வின் இசை விழா, அடிலெய்ட் இசை விழா மற்றும் ஐக்கிய நாடுகள் அவை, நியூயார்க், பல்லேடியம், இந்தியானா, தியேட்டர் தி லா வில்லே, பாரிஸ், வடமேற்கு நாட்டுப்புற விழா, சியாட்டில் போன்ற அனைத்துலக விழாக்களிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

ஒருங்கிணைப்பாளராக கைம்முரசு இணை மேதையான உஸ்தாத் சாகீர் உசேன், வயலின் மேதை சிறீ ஆர். குமரேஷ், புல்லாங்குழல் மேதை ரோனு மஜும்தார், இந்துஸ்தானி வயலின் கலைஞர் கலா ராம்நாத், கர்நாடக இசைக்கலைஞர்கள் அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன் போன்ற மேதைகளுடன் தனது நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளார். ஒரு ஆராய்ச்சியாளராக, இவர் "சரசுவதி வீணையின் பாணிகள் மற்றும் வாசிக்கும் நுட்பங்கள்" குறித்த தனது பணிக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பட்டறைகள் மற்றும் விரிவுரைகளை நடத்துகிறார்.

இவர் இந்திய தேசிய இசைக்குழுவை நிறுவியுள்ளார்.[4] அதில் இந்தியாவின் வளமான இசை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கர்நாடக மற்றும் இந்துஸ்தானி வகைகளைச் சேர்ந்த கலைஞர்கள் குழு ஒன்று ஒரே பதாகையின் கீழ் வந்து இந்திய பாரம்பரிய இசையை வெளிப்படுத்துகிறார்கள்.

"மர்மமான இருமை" [5] என்ற இசைத்தொகுப்பை இவர் இயற்றி வெளியிட்டுள்ளார். இது சரசுவதி வீணை என்ற ஒரே கருவியின் மூலம் எளிய மற்றும் சிக்கலான சுயத்தின் பல பரிமாண பிரதிபலிப்பாகும். கலைஞர் ஏழு வெவ்வேறு வீணை தடங்களை வாசித்திருக்கிறார். இந்த இசைத்தொகுப்பு அதன் வகைகளில் ஒன்றாகும்.

விருதுகள்[தொகு]

மகாராஜபுரம் சந்தானம் நினைவு விருது இவருக்கு 2004இல் வழங்கப்பட்டது.
2010இல் காஞ்சி சங்கர மடம்: வீணை நாத மணி என்றப் பட்டத்தை வழங்கியது.
2018இல் இந்திரா சிவசைலம் நினைவு பதக்கம் பெற்றுள்ளார்.
2018: லண்டனில் விஸ்வ கலா ரத்னா என்ற பட்டம் பெற்றுள்ளார்.
சென்னை மியூசிக் அகாதமி மூலம் 990, 1992, 2000, 2002, 2012, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில்: "வீணைக்கான விருது" பெற்றுள்ளார்.
2019இல் புது தில்லி பாரதிய வித்யா பவன் என்ற அமைப்பின் மூலம் "சங்கீத சிகார் சம்மன்" பட்டம் வழங்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. "Faculty | Milapfest". web.archive.org. 22 December 2014. Archived from the original on 22 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 பிப்ரவரி 2020. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  2. "`We hardly discuss music'" இம் மூலத்தில் இருந்து 2007-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070716043753/http://www.hindu.com/mp/2007/01/09/stories/2007010900550100.htm. 
  3. Rao. "Of memories, melodies and more…". http://www.thehindu.com/features/friday-review/music/article77502.ece. 
  4. "Classic Choral: Indian National Orchestra" (in en-IN). The Hindu. 25 October 2014. http://www.thehindu.com/features/november-fest/indian-national-orchestra-at-friday-review-november-fest-214/article6522526.ece. 
  5. Sivakumar, S. (21 October 2010). "Concept of duality" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/features/friday-review/music/concept-of-duality/article840913.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயந்தி_குமரேஷ்&oldid=3930459" இலிருந்து மீள்விக்கப்பட்டது