சோமேசுவர் கடற்கரை
Appearance
சோமேசுவர் கடற்கரை | |
---|---|
கடற்கரை | |
அமைவிடம் | உல்லால் |
நகரம் | மங்களூர் |
நாடு | இந்தியா |
அருகிலுள்ள ஈர்ப்புகள் | சோமேசுவரர் கோயில் |
அரசு | |
• நிர்வாகம் | உல்லால் நகராட்சி |
சோமேசுவர் கடற்கரை (Someshwar Beach) என்பது இந்தியாவின் மங்களூர் நகரில் உல்லாலில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். கடலோரத்தில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் சோமேஸ்வரா கோவிலால் இதற்கு 'சோமேசுவர கடற்கரை' என்ற பெயர் உருவானது.[1]
இந்த கடற்கரைக்கு அருகில் ஒட்டினீன் மலை உள்ளது. இந்த மலையிலிருந்து நேத்ராவதி ஆறு அரபிக் கடலில் கலக்கிறது. இந்த மலையில் இயற்கையாக வளரும் பசுமையான தாவரங்களும், மருத்துவத் தாவரங்களும் உள்ளன.[1]
ருத்ர பாதம்
[தொகு]இந்தக் கடற்கரையில் ருத்ர சிலை அல்லது ருத்ர பாதம் என்று அழைக்கப்படும் பெரிய பாறைகளுக்கு பெயர் பெற்றது. 'ருத்ரா' என்பதற்கு 'சிவன்' என்றும் 'பாதா' அல்லது 'சிலே' என்றால் துளு மொழியில் 'பாறை' என்றும் பொருள்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Someshwara Temple and Beach at Ullal, Mangalore - Review of Someshwara Temple and Beach, Mangalore, India - TripAdvisor". www.tripadvisor.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02.
- ↑ "Someshwara Beach | Mangalore Beach | Ullal" (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-12-02. பார்க்கப்பட்ட நாள் 2016-10-02.