சோசப்பு பிரோசு டிட்டோ
படைத்தலைவர் யோசிப் புரோசு டிட்டோ Josip Broz Tito | |
---|---|
1961 இல் டிட்டோ | |
யுகோசுலாவியாவின் அரசுத்தலைவர் | |
பதவியில் 14 சனவரி 1953 – 4 மே 1980 | |
பிரதமர் | இவரே (1953–1963) பீட்டர் இசுத்தாம்போலிச் (1963–1967) மிக்கா இசுப்பியாக் (1967–1969) மித்சா ரிபிச்சிச் (1969–1971) த்சேமல் பிசேடிச் (1971–1977) வெசெலின் துரனோவிச் (1977–1980) |
துணை அதிபர் | அலெக்சாந்தர் ரான்கோவிச் (1963–1966) கோச்சா பப்போவிச் (1966–1967) |
முன்னையவர் | இவான் ரிபார் (மக்கள் பேரவைத் தலைமைப்பீடத்தின் தலவராக) |
பின்னவர் | லசார் கொலிசேவ்சுக்கி |
19-வது யுகோசுலாவியப் பிரதமர் | |
பதவியில் 2 நவம்பர் 1944 – 29 சூன் 1963 | |
குடியரசுத் தலைவர் | இவான் ரிபார் |
முன்னையவர் | இவான் சுபாசிச் |
பின்னவர் | பீட்டர் இசுத்தாம்போலிச் |
அணிசேரா இயக்கத்தின் 1-வது பொதுச் செயலர் | |
பதவியில் 1 செப்டம்பர் 1961 – 5 அக்டோபர் 1964 | |
முன்னையவர் | பதவு உருவாக்கம் |
பின்னவர் | ஜமால் அப்துல் நாசிர் |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 7 மார்ச் 1945 – 14 சனவரி 1953 | |
பிரதமர் | இவரே |
முன்னையவர் | இவான் சுபாசிச் |
பின்னவர் | இவான் கோசுனியாக் |
யுகோசுலாவிய கம்யூனிஸ்டுகள் முன்னணியின் 4-வது தலைவர் | |
பதவியில் 5 சனவரி 1939 – 4 மே 1980 | |
முன்னையவர் | மிலான் கோர்க்கிச் |
பின்னவர் | பிராங்கோ மிக்கூலிச் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | யோசிப் புரோசு 7 மே 1892 கும்ரோவிச், குரோவாசிய-சுலோவீனிய இராச்சியம், ஆத்திரியா-அங்கேரி |
இறப்பு | 4 மே 1980 லியுப்லியானா, சுலோவீனியா, யுகோசுலாவியா | (அகவை 87)
இளைப்பாறுமிடம் | பெல்கிறேட், செர்பியா 44°47′12″N 20°27′06″E / 44.78667°N 20.45167°E |
அரசியல் கட்சி | யுகோசுலாவிய கம்யூனிஸ்டுகள் முன்னணி RCP (b) |
துணை | தவோர்யான்கா பவுனோவிச் |
பிள்ளைகள் | சிலாத்திக்கா இன்கோ சார்க்கோ லியோன் அலெக்சாந்தர் புரோசு |
பெற்றோர் |
|
வேலை | எந்திர வினைஞர், புரட்சியாளர், எதிர்ப்புத் தளபதி, அரசியல்வாதி |
இனம் | குரோவாசியர் |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | ஆத்திரியா-அங்கேரி உருசிய சோவியத் குடியரசு யுகோசுலாவியா |
கிளை/சேவை | ஆத்திரிய-அங்கேரிய இராணுவம் செஞ்சேனை யுகோசுலாவ் மக்கள் இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1913–1915 1918–1920 1941–1980 |
தரம் | படைத்தலைவர் |
கட்டளை | தேசிய விடுதலை இராணுவம் யுகோசுலாவ் மக்கள் இராணுவம் (உயர் தலைவர்) |
போர்கள்/யுத்தங்கள் | முதலாம் உலகப் போர் உருசிய உள்நாட்டுப் போர் இரண்டாம் உலகப் போர் |
சோசப்பு பிரோசு டிட்டோ ( Josip Broz Tito 7 மே 1892 -4 மே 1980) என்பவர் யுகோசுலாவியா நாட்டின் அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் அரசின் தலைவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்.[1] டிட்டோ அணிசேரா நாடுகள் அமைப்பில் முக்கியப் பங்கு வகித்து இருந்தார். இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ ஆகியோருடன் இணைந்து இயங்கியவர்.[2] நன்மைகள் செய்யும் ஏதேச்சத் தலைவர் என்று மதிக்கப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]டிட்டோ குரோசியாவுக்கு அருகில் ஒரு சிற்றூரில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உரோமன் கத்தோலிக்க முறையில் வளர்ந்தார். எட்டாவது அகவையில் பள்ளியில் சேர்ந்து படித்தார். நான்கு ஆண்டுகளே பள்ளியில் படித்தார். [3] பின்னர் மெக்கானிக் வேலையில் சேர்ந்து பணி செய்தார். முதலாம் உலகப் போர் நடந்த கால கட்டத்தில் 1913 இல் ஆத்திரியா அங்கேரி இராணுவத்தில் சேர்ந்தார். செர்பியாவுக்கு எதிரான போரில் காயமுற்று இரசியப் படையால் பிடிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் இருந்தபோது போல்செவிக் கொள்கை பற்றி அறிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
மேற்கோள்
[தொகு]- ↑ "Josip Broz Tito". Encyclopædia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் 27 April 2010.
- ↑ Peter Willetts, The non-aligned movement: the origins of a Third World alliance (1978) p. xiv
- ↑ Swain 2010, ப. 5.