சோசப்பு பிரோசு டிட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோசப்பு பிரோசு டிட்டோ

சோசப்பு பிரோசு டிட்டோ ( Josip Broz Tito 7 மே 1892 -4 மே 1980) என்பவர் யுகோசுலாவியா நாட்டின் அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் அரசின் தலைவர் ஆவார். 1943 ஆம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டவர். [1] டிட்டோ அணிசேரா நாடுகள் அமைப்பில் முக்கியப் பங்கு வகித்து இருந்தார். இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ ஆகியோருடன் இணைந்து இயங்கியவர். [2] நன்மைகள் செய்யும் ஏதேச்சத் தலைவர் என்று மதிக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்புகள்[தொகு]

டிட்டோ குரோசியாவுக்கு அருகில் ஒரு சிற்றூரில்  ஏழை   விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். உரோமன் கத்தோலிக்க முறையில் வளர்ந்தார். எட்டாவது அகவையில் பள்ளியில் சேர்ந்து படித்தார். நான்கு ஆண்டுகளே பள்ளியில் படித்தார். [3] பின்னர் மெக்கானிக் வேலையில் சேர்ந்து பணி செய்தார். முதலாம் உலகப் போர் நடந்த கால கட்டத்தில்  1913 இல் ஆத்திரியா அங்கேரி இராணுவத்தில் சேர்ந்தார்.  செர்பியாவுக்கு எதிரான போரில் காயமுற்று இரசியப் படையால் பிடிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனையில் இருந்தபோது போல்செவிக் கொள்கை பற்றி அறிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

மேற்கோள்[தொகு]

  1. "Josip Broz Tito". Encyclopædia Britannica Online. பார்த்த நாள் 27 April 2010.
  2. Peter Willetts, The non-aligned movement: the origins of a Third World alliance (1978) p. xiv
  3. Swain 2010, பக். 5.