செஞ்சிறகுச் சிரிப்பான்
நீலச் சிறகு சிரிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | துரோகலோப்டெரான்
|
இனம்: | து. பார்மோசம்
|
இருசொற் பெயரீடு | |
துரோகலோப்டெரான் பார்மோசம் (வெர்ரோக்சு, 1869) | |
வேறு பெயர்கள் | |
கருலாக்சு பார்மோசசு |
செஞ்சிறகுச் சிரிப்பான்(Red-winged laughingthrush)(துரோகலோப்டெரான் பார்மோசம்) லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும் .
இதன் இறகுகள் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கைகள் மற்றும் வால்களில் சிவப்பு நிறத்தில் பெரிய பகுதிகள் இருக்கும். தலைப்பகுதி மற்றும் காது மறைப்புகள் இருண்ட கோடுகளுடன் சாம்பல் நிறமாகவும், தொண்டை கருமையாகவும் இருக்கும். அலகும் பாதங்களும் கருமை நிறத்தில் உள்ளன. இது உரத்த, விசில் ஓசையினைக் கொண்டுள்ளது. இதனுடைய 27 முதல் 28 சென்டிமீட்டர் நீளம் உடையது. சிவப்பு வால் சிவப்பு வால் சிறப்பானை ஒத்தது, ஆனால் பழுப்புத் தலையும், சாம்பல் நிற முதுகு மற்றும் மார்பகம் இதனை வேறுபடுத்துகின்றது.
இது தென்மேற்கு சீனாவில் (சிச்சுவான், யுன்னான் மற்றும் குவாங்சி மாகாணங்கள்) மற்றும் வடமேற்கு வியட்நாமில் காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 900 முதல் 3000 மீட்டர் வரையுள்ள காடு, இரண்டாம் நிலை வளர்ச்சி, புதர் மற்றும் மூங்கில் பகுதியில் வாழ்கிறது. இது ஒரு மழுப்பலான பறவையாகும். இது வனப்பகுதிக்கு அருகில் அடர்ந்த பகுதியில் இணையாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ பயணிக்கிறது. இதன் இனப்பெருக்க பழக்கம் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் சீனாவில் சூன் மற்றும் சூலை மாதங்களில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
அறிமுகங்கள்
[தொகு]இந்த சிற்றினத்தின் பத்து பறவைகளை 1990-ல் மாண் தீவில் உள்ள குராக்ஸ் வனவிலங்கு பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு கொல்லைப்படுத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டிலிருந்து காடுகளில் வாழும் பறவைகள் தப்பித்து அருகில் வாழத்தொடங்கியது குறித்த பதிவுகள் உள்ளன. 1996-ல் காடுகளில் இனப்பெருக்கம் உறுதி செய்யப்பட்டது. 1998 வாக்கில், கொல்லைப்படுத்தப்பட்ட பத்து பறவைகளும் இறந்துவிட்டன அல்லது தப்பிவிட்டன. காடுகளில் பறவைகள் பற்றிய பதிவுகள் கடைசியாக வெளியிடப்பட்டது சூலை 2005-ல் வெளியிடப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் நீடித்த இப்பறவை தற்பொழுது அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது (2017).[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Trochalopteron formosum". IUCN Red List of Threatened Species 2018: e.T22715761A132108397. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22715761A132108397.en. https://www.iucnredlist.org/species/22715761/132108397. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Sharpe, Chris (2007). Manx Bird Atlas (in English). Liverpool University Press. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84631-039-3.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
- Steve P. Dudley (2005) Changes to Category C of the British List, Ibis 147:803
- John MacKinnon & Karen Phillipps (2000) A Field Guide to the Birds of China, Oxford University Press, Oxford
- Malcolm Ogilvie (2003) Non-native birds breeding in the United Kingdom in 2001 British Birds 96:620-625
- Craig Robson (2002) A Field Guide to the Birds of South-East Asia. New Holland, London
வெளி இணைப்புகள்
[தொகு]- இணைய பறவை சேகரிப்பில் செஞ்சிறகு சிரிப்பான் வீடியோக்கள்