சுண்ணாம்பொளி
சுண்ணாம்பொளி (Limelight (also known as Drummond light அ்ல்லது calcium light)[1] என்பது ஒரு வகையான மேடை விளக்கு ஆகும். இது அரங்குகள், இசையரங்குகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டது. கால்சியம் ஆக்சைடைச் (சுட்டசுண்ணாம்பு) சூடுபடுத்தினால் ஏற்படும் ஆக்சிஹைட்ரஜனால் மிகுதியான வெளிச்சம் உருவாக்கப்படுகிறது,[2] இதனால் 4,662 °F (2,572 °C) வெப்பம் உருவாகிறது. இதனால் பிரகாசமான ஒளியை உருவாக்க இயலும். இந்த ஒளியைக் கொண்டு அக்காலத்தில், மேடை நாடகங்களில் ஒரு குறிப்பிட்ட காட்சியில், குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக, அவர் மீது ‘ஒளி’ விழ வைக்கப்பட்டது. அதாவது, அந்தக் காட்சியில் அவர்தான் முதன்மையானவர் (சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்) என்பதைப் புரிய வைப்பதற்காக அப்படி ஒரு உத்தி கையாளப்பட்டது. மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் இந்த லைம்லைட் ஆங்கில மரபுச் சொல்லில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதையாவது ஒரு கருத்தைச் சொல்லி, அடிக்கடி ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்’ ஆகுபவர்களை ஊடகத்தினர் “அவர் எப்பவுமே ‘லைம்லைட்டிலேயே’ இருப்பார்” என்பர். ஆங்கிலத்தில் இதை ‘In the limelight’ என்பார்கள். இதைப் பாராட்டாகவும் சொல்லலாம். கிண்டலாகவும் பயன்படுத்தலாம். இந்தச் சொற்றொடர், இதிலிருந்து பிறந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ James R. Smith (2004) San Francisco's Lost Landmarks, Quill Driver Books.
- ↑ Chemical of the Week - Lime பரணிடப்பட்டது 2008-02-17 at the வந்தவழி இயந்திரம்.