ஆக்சிஹைட்ரஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹைட்ரஜன் (H2) மற்றும் ஆக்சிஜன் (O2) வாயுக்களின் கலவையே ஆக்சிஹைட்ரஜன் ஆகும். வாயு நிலையில் உள்ள இந்த கலவை உலோக பற்ற வைப்பு தீவட்டி விளக்குகளில் (gas welding torch) எரிபொருளாக தீக்களிமண் (refractory) உருவாக்குவதில் ஆரம்ப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

பண்புகள்[தொகு]

ஆக்சிஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக்கூடிய வெடிக்கும் தன்மை கொண்ட ஒரு வாயு. இது வளிமண்டல அழுத்தத்தில் 570oC வெப்பநிலையில் தீப்பற்றக்கூடியது. இந்த வாயுக்கலவை தீப்பற்றி எரியும்போது நீராவியையும், வெப்ப ஆற்றலையும் வெளியேற்றுகிறது. அதிகபட்சமாக 2800oC வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதனுடைய வெப்பமானது ஹைட்ரஜனை காற்றில் எரிக்கும்போது ஏற்படும் வெப்பத்தை விட 700oC கூடுதலானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிஹைட்ரஜன்&oldid=2228040" இருந்து மீள்விக்கப்பட்டது