கெப்லர் (விண்கலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: zh:克卜勒太空望遠鏡
வரிசை 56: வரிசை 56:
[[uk:Кеплер (орбітальний телескоп)]]
[[uk:Кеплер (орбітальний телескоп)]]
[[vi:Kepler (tàu vũ trụ)]]
[[vi:Kepler (tàu vũ trụ)]]
[[zh:開普勒太空望遠鏡]]
[[zh:克卜勒太空望遠鏡]]

16:19, 16 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கெப்லர் விண்கலம்

கெப்லர் (Kepler) என்பது வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கோள்களை ஆராய்வதற்கென நாசா ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி விண்கலம் ஆகும்[1]. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் ஒளியளவியின் உதவியுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன் கோள்கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம் எனக் கருதப்படுகிறது. ஜெர்மனியின் புகழ்பெற்ற வானியலாளர் ஜொகான்னஸ் கெப்லர் அவர்களின் நினைவாக இத்திட்டத்திற்கு கெப்லர் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது[2].

கெப்லர் விண்கலம் 2009, மார்ச் 6 ஆம் நாள் கீழைத்தேய நேரத்தின் படி 22:49 மணிக்கு (மார்ச் 7, 03:49 UTC)[3] விண்ணுக்கு ஏவப்பட்டது.

கெப்லர் விண்வெளித் திட்டத்தின் முதல் ஆய்வு முடிவுகள் 2010, ஜனவரி 4 ஆம் நாள் அறிவிக்கப்பட்டன: முதல் ஆறுவார கால ஆய்வுகளின் படி முன்னர் எப்போது கண்டுபிடிக்கப்படாத ஐந்து புதிய புறக்கோள்களை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்திருக்கிறது. இவை அனைத்தும் தமது விண்மீன்களுக்கு மிகக் கிட்டவாகச் சுற்றி வருபவை. இவற்றில் ஒன்று ஏறத்தாழ நெப்டியூன் அளவிலும், ஏனையவை வியாழன் அளவிலும் உள்ளன[4]. இவற்றில் கெப்லர்-7பி இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் மிகவும் அடர்த்தி குறைவானதாகும்[5].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்_(விண்கலம்)&oldid=875590" இலிருந்து மீள்விக்கப்பட்டது