எகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: nn:Akon
சி தானியங்கி: பழைய இணைப்பைத் (allmusic.com) திருத்துதல்
வரிசை 30: வரிசை 30:
புகழ் பெற்ற செனகலிய இசைக் கலைஞரான [[மோர் தியாம்|மோர் தியாமிற்கு]] மகனாக பிறந்தமையால் எகான் ஒரு இசை சூழலிலேயே வளர்ந்து [[ட்ஜெம்பெ|ட்ஜெம்பே]] உட்பட பல இசைக் கருவிகளை கற்றார். அவர் [[அமெரிக்கா]]வில் உள்ள [[செயின்ட் லூயிஸ், மிசௌரி]]யில் பிறந்ததால் , குடிபெயரும் நடவடிக்கை தேவையிருக்கவில்லை, ஆனால் அவர் [[டகார், செனகல்|செனகலிலுள்ள டகார்]] என்ற இடத்தில் தான் 7 ஆம் வயது வரை வாழ்ந்தார், 15 வயது வரை தனது நேரத்தை அமெரிக்கா மற்றும் செனகலுக்கிடையே என கழித்துக் கொண்டிருந்த இவர், பின் நிரந்தரமாக [[ஜெர்ஸி சிட்டி, நியூ ஜெர்சி|நியூ ஜெர்ஸியிலுள்ள ஜெர்ஸி சிட்டி]]க்கு குடி பெயர்ந்தார்.<ref name="VH1_interview">பாட்டம்லி, சி. "[http://www.vh1.com/artists/interview/1501105/05022005/akon.jhtml Akon: Trouble No More]", ''VH1.com'' , 2005-05-02.</ref>
புகழ் பெற்ற செனகலிய இசைக் கலைஞரான [[மோர் தியாம்|மோர் தியாமிற்கு]] மகனாக பிறந்தமையால் எகான் ஒரு இசை சூழலிலேயே வளர்ந்து [[ட்ஜெம்பெ|ட்ஜெம்பே]] உட்பட பல இசைக் கருவிகளை கற்றார். அவர் [[அமெரிக்கா]]வில் உள்ள [[செயின்ட் லூயிஸ், மிசௌரி]]யில் பிறந்ததால் , குடிபெயரும் நடவடிக்கை தேவையிருக்கவில்லை, ஆனால் அவர் [[டகார், செனகல்|செனகலிலுள்ள டகார்]] என்ற இடத்தில் தான் 7 ஆம் வயது வரை வாழ்ந்தார், 15 வயது வரை தனது நேரத்தை அமெரிக்கா மற்றும் செனகலுக்கிடையே என கழித்துக் கொண்டிருந்த இவர், பின் நிரந்தரமாக [[ஜெர்ஸி சிட்டி, நியூ ஜெர்சி|நியூ ஜெர்ஸியிலுள்ள ஜெர்ஸி சிட்டி]]க்கு குடி பெயர்ந்தார்.<ref name="VH1_interview">பாட்டம்லி, சி. "[http://www.vh1.com/artists/interview/1501105/05022005/akon.jhtml Akon: Trouble No More]", ''VH1.com'' , 2005-05-02.</ref>


இவர் சிறையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த 3 ஆண்டுகளில் தனது இசை திறமையை உணர்ந்து கொண்டு இசையில் தனது பின்புலத்தையும் போற்றத் துவங்கினார். எகானின் தனித்துவமான மேற்கு ஆப்பிரிக்க பாணி, திறமை மற்றும் அசைவுகள் யுனிவர்சல் நிறுவன நிர்வாகிகளின் காதுகளுக்கு ஒருவழியாய் எட்டியது. எகான் தனது வீட்டு ஸ்டுடியோவிலேயே பாடல்களை எழுதி ஒலிப்பதிவும் செய்தார். அந்த இசை நாடாக்கள் [[ஸ்ட்ரீட் ரெக்கார்ட்ஸ் கார்பரேஷன்|SRC]]/[[யுனிவர்சல் மோடவுன் ரெக்கார்ட்ஸ் குரூப்|யுனிவர்சல்]]லை எட்டியது, அது எகானின் அறிமுகமான LP ''[[ட்ரபுள் (எகான் ஆல்பம்)|ட்ரபுள்]]'' தொகுப்பை ஜூன் 2004 இல் வெளியிட்டது. இந்த ஆல்பம் எகானின் மெல்லிய, மேற்கு-ஆப்பிரிக்க பாணி வாய்ப்பாட்டுடன் கிழக்கு கடற்கரை மற்றும் தெற்கத்திய பீட்டுகள் கலந்து இருந்தது. ஏறக்குறைய எகானின் அனைத்து பாடல்களிலும் சிறை கதவின் சத்தத்துடன் "கோன்விக்ட்" என்ற அவரது உச்சரிப்புடன் தொடங்குவதைக் காணலாம்.<ref>{{cite web|last=Loftus|first=Johnny|title=Akon&nbsp;— Biography|url=http://www.allmusic.com/cg/amg.dll?p=amg&sql=11:fzfoxqr0ldae~T1|work=Allmusic|year=2006|accessdate=2008-05-08}}</ref>
இவர் சிறையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த 3 ஆண்டுகளில் தனது இசை திறமையை உணர்ந்து கொண்டு இசையில் தனது பின்புலத்தையும் போற்றத் துவங்கினார். எகானின் தனித்துவமான மேற்கு ஆப்பிரிக்க பாணி, திறமை மற்றும் அசைவுகள் யுனிவர்சல் நிறுவன நிர்வாகிகளின் காதுகளுக்கு ஒருவழியாய் எட்டியது. எகான் தனது வீட்டு ஸ்டுடியோவிலேயே பாடல்களை எழுதி ஒலிப்பதிவும் செய்தார். அந்த இசை நாடாக்கள் [[ஸ்ட்ரீட் ரெக்கார்ட்ஸ் கார்பரேஷன்|SRC]]/[[யுனிவர்சல் மோடவுன் ரெக்கார்ட்ஸ் குரூப்|யுனிவர்சல்]]லை எட்டியது, அது எகானின் அறிமுகமான LP ''[[ட்ரபுள் (எகான் ஆல்பம்)|ட்ரபுள்]]'' தொகுப்பை ஜூன் 2004 இல் வெளியிட்டது. இந்த ஆல்பம் எகானின் மெல்லிய, மேற்கு-ஆப்பிரிக்க பாணி வாய்ப்பாட்டுடன் கிழக்கு கடற்கரை மற்றும் தெற்கத்திய பீட்டுகள் கலந்து இருந்தது. ஏறக்குறைய எகானின் அனைத்து பாடல்களிலும் சிறை கதவின் சத்தத்துடன் "கோன்விக்ட்" என்ற அவரது உச்சரிப்புடன் தொடங்குவதைக் காணலாம்.<ref>{{cite web|last=Loftus|first=Johnny|title=Akon&nbsp;— Biography|url=http://www.allmusic.com/artist/akon-p535592|work=Allmusic|year=2006|accessdate=2008-05-08}}</ref>


=== தனிப்பட்ட வாழ்க்கை ===
=== தனிப்பட்ட வாழ்க்கை ===

18:41, 11 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

Akon
படிமம்:Akon2.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்Aliaune Badara Akon Thiam
பிறப்புSaint Louis, Missouri, USA
பிறப்பிடம்Dakar, Senegal
இசை வடிவங்கள்Pop, R&B, Hip hop, Reggaeton
தொழில்(கள்)Singer-songwriter, record producer
இசைத்துறையில்1996–present
வெளியீட்டு நிறுவனங்கள்Universal, SRC, Konvict Muzik, UpFront
இணைந்த செயற்பாடுகள்Bone Thugs-n-Harmony, T-Pain, Colby O'Donis, Kardinal Offishall, Ace Hood, DJ Khaled, Young Jeezy, Shontelle, 50 Cent,எமினெம், மைக்கல் ஜாக்சன் , லில் வெயின், Snoop Dogg, Lady Gaga, Wilber Pan, Rick Ross, T.I., Flo Rida, R.Kelly, Tami Chynn, Daddy Yankee, Sway, Pitbull
இணையதளம்akononline.com

தனது இடைப்பெயர் மற்றும் மேடைப் பெயரான எகான் (உச்சரிப்பு /ˈeɪkɒn/)[1] என்ற பெயரில் பிரபலமுற்ற அலியாயுன் படரா எகான் தியாம் ஒரு செனகலிய-அமெரிக்க ஆர்&பி பாடகர்-பாடல் ஆசிரியராகவும், இசைத் தட்டுகள் தயாரிப்பவராகவும் , தொழிலதிபராகவும், மற்றும் கொடையாளியாகவும் திகழ்பவர். அவர் 2004 இல் வெளியான ட்ரபுள் என்னும் தனது முதல் ஆல்பத்தில் இடம் பெற்ற "லாக்டு அப்" என்னும் முதலாவது சிங்கிள் வெளியானதைத் தொடர்ந்து புகழை எட்டினார். அவருடைய இரண்டாவது ஆல்பமான கோன்விக்டட் , அதில் இடம் பெற்ற "ஸ்மாக் தேட்" என்ற சிங்கிளுக்காக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பிறகு கோன்விக்ட் முஸிக் மற்றும் கோன் லைவ் டிஸ்ட்ரிப்யூஷன் ஆகிய இரண்டு இசைத்தட்டு லேபல்களை அவர் ஸ்தாபித்திருக்கிறார்.

எகான் பலமுறை மற்ற இசைக்கலைஞர்களுக்கு ஹூக்குகள் பாடுவதுண்டு, இதுவரை 200 க்கும் மேற்பட்ட பாடல்களில் கௌரவ தோற்றம் மற்றும் 32 "பில்போர்டு ஹாட் 100 பாடல்களையும் தந்துள்ளார். பில்போர்டு ஹாட் 100 அட்டவணையில் இரு முறை முதல் மற்றும் இரண்டாம் இடத்தை ஒரே நேரத்தில் பிடித்த முதல் ஸோலோ கலைஞர் என்னும் சாதனையை இவர் புரிந்திருக்கிறார்.[2]

பின்புலம்

எகான் தனது நேர்முகங்களில் தனது முழுப் பெயர் அலியாயுன் டமலா பௌகா டைம் புரு நக்கா லு லு லு படரா எகான் தியாம்[3] என கூறியுள்ளார், எனினும் அவருடைய சட்டபூர்வமான பெயர் மற்றும் பிறந்த தேதியில் சற்று குழப்பம் நீடிக்கிறது. எகான் பொதுவாக அலியாயுன் தியாம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறார்.[4][5] பெயரின் நீள வடிவம் தவிர, எகானின் முழு பெயர் அலியாயுன் படரா தியாம் (Aliaune Badara Thiam) மற்றும் அலியவுன் படரா தியாம்[6] (Alioune Badara Thiam) என்ற இரு வகையாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, மத்தியில் இருக்கும் பெயரானது ஒருபோதும் சுதந்திரமாய் சரிபார்க்கப்பட்டிருக்கவில்லை என About.com தெரிவிக்கிறது.[7] அவருடைய பிறந்த நாளை பொறுத்த வரை, எகான் 1981 ஆம் ஆண்டில் பிறந்தவர் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. AP உட்பட மற்ற செய்தி ஆதாரங்கள் எகான் 1973 ஆம் ஆண்டில் பிறந்தார் எனவும் அவருக்கு மகுயி ஸெக் என்னும் ஒரு செனகல் நாட்டு மருத்துவர் தான் பிரசவம் பார்த்தார் எனவும் தெரிவிக்கின்றன.

தி ஸ்மோகிங் கன் வெளியிட்ட சட்டரீதியான ஆவணங்கள் எகானின் பெயரை அலியாயுன் டமலா தியாம் என்றும் அவருடைய பிறந்த தேதி 1973-04-30[8] அல்லது 1973-04-16[9] என்றும் பட்டியலிடுகின்றன, ஆயினும் பிபிசி அவர் 14 October 1981 அன்று பிறந்தார் என குறிப்பிடுகிறது.[10] "எல்லா அடையாளங்களும், அவர் ஏப்ரல் 16, 1973 தான் பிறந்தார் எனவே காட்டுகிறது" என ஸ்மோகிங் கன் செய்தி விவரிக்கிறது.[11] VIBE உடனான நேர்முகத்தில் அவருடைய வயதை பற்றி கேட்ட போது, "நான் எனது வயதை மட்டுமே மறைக்கிறேன்... நான் உங்களிடம் பொய் சொல்வதற்கு பதில் ஒன்றுமே கூற போவதில்லை" என்று எகான் பதிலளித்தார்.[11] அதிலிருந்து பல ஊடகங்கள் அவருடைய பிறப்பு சான்றிதழில் அவர் பிறந்த நாள் ஏப்ரல் 16, 1977 என்று தான் இருப்பதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.[12]

ஆரம்பகால வாழ்க்கை

புகழ் பெற்ற செனகலிய இசைக் கலைஞரான மோர் தியாமிற்கு மகனாக பிறந்தமையால் எகான் ஒரு இசை சூழலிலேயே வளர்ந்து ட்ஜெம்பே உட்பட பல இசைக் கருவிகளை கற்றார்.  அவர் அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ், மிசௌரியில் பிறந்ததால் , குடிபெயரும் நடவடிக்கை தேவையிருக்கவில்லை, ஆனால் அவர் செனகலிலுள்ள டகார் என்ற இடத்தில் தான் 7 ஆம் வயது வரை வாழ்ந்தார், 15 வயது வரை தனது நேரத்தை அமெரிக்கா மற்றும் செனகலுக்கிடையே என கழித்துக் கொண்டிருந்த இவர், பின் நிரந்தரமாக நியூ ஜெர்ஸியிலுள்ள ஜெர்ஸி சிட்டிக்கு குடி பெயர்ந்தார்.[13]

இவர் சிறையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த 3 ஆண்டுகளில் தனது இசை திறமையை உணர்ந்து கொண்டு இசையில் தனது பின்புலத்தையும் போற்றத் துவங்கினார். எகானின் தனித்துவமான மேற்கு ஆப்பிரிக்க பாணி, திறமை மற்றும் அசைவுகள் யுனிவர்சல் நிறுவன நிர்வாகிகளின் காதுகளுக்கு ஒருவழியாய் எட்டியது. எகான் தனது வீட்டு ஸ்டுடியோவிலேயே பாடல்களை எழுதி ஒலிப்பதிவும் செய்தார். அந்த இசை நாடாக்கள் SRC/யுனிவர்சல்லை எட்டியது, அது எகானின் அறிமுகமான LP ட்ரபுள் தொகுப்பை ஜூன் 2004 இல் வெளியிட்டது. இந்த ஆல்பம் எகானின் மெல்லிய, மேற்கு-ஆப்பிரிக்க பாணி வாய்ப்பாட்டுடன் கிழக்கு கடற்கரை மற்றும் தெற்கத்திய பீட்டுகள் கலந்து இருந்தது. ஏறக்குறைய எகானின் அனைத்து பாடல்களிலும் சிறை கதவின் சத்தத்துடன் "கோன்விக்ட்" என்ற அவரது உச்சரிப்புடன் தொடங்குவதைக் காணலாம்.[14]

தனிப்பட்ட வாழ்க்கை

எகான் ஒரு முஸ்லிம்,[15] தனது மத நம்பிக்கை காரணமாக தான் இதுவரை மதுவை அருந்தியதே இல்லை என அவர் விளக்குகிறார். அவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர் என வதந்திகள் வந்தாலும் , தனக்கு டோமேகா என்ற ஒரே ஒரு மனைவிதான் என அவர் கூறியுள்ளார். ப்ளென்டர் உடனான பேட்டியில் மூன்று பெண்கள் மூலம் தனக்கு 6 குழந்தைகள் இருப்பதாக எகான் கூறியுள்ளார்.[16] தனது அனைத்து குழந்தைகளிடமும் தனக்கு சிறப்பான உறவு உள்ளதாகக் கூறும் எகான், தனது குடும்பம் ஊரின் கண்களில் இருந்து பாதுகாக்கப்பட்டு இருப்பதையே தான் விரும்புவதாகக் கூறுகிறார். தனது மதமே தன்னை மேம்படுத்தியிருப்பதாக கூறும் அவர் அதுவே தான் மற்றவர்களிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதில் தனக்கு வழிகாட்டியாக விளங்குகிறது எனவும் கூறுகிறார்.[17]

ஆப்பிரிக்காவில் ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான கோன்பிடன்ஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை அவர் சொந்தமாக நிறுவியுள்ளார்.[18] தென்னாப்பிரிக்காவில் ஒரு வைரச் சுரங்கம் வைத்திருக்கும் எகான் மோதல் வைரங்கள் (அல்லது சாதாரணமாக 'ரத்த வைரங்கள்' என்றும் குறிப்பிடப்படுகின்றது) என்பதான கருத்தை மறுக்கிறார். "மோதல் வைரங்கள் என்பதையே நான் நம்பவில்லை. அது ஒரு வெறும் திரைப்படம் தான். சிந்தித்து பாருங்கள். இந்த படம் வரும் வரை மோதல் வைரங்கள் குறித்து எதுவுமே யாருமே சிந்திக்காது இருந்திருக்க முடியுமா" என்று அவர் கூறுகிறார்.[19] ஆனாலும், அதற்குப் பின் ரத்த வைரங்கள் என்பவை இருப்பதை ஒப்புக் கொண்ட அவர், ரத்த வைரங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கும் அர்ப்பணிப்பு கொண்ட ஒரு ஆப்பிரிக்க சுரங்கத்தில் தான் ஒரு பகுதி உரிமையாளராக இருப்பதாகவும் லாபங்களை உள்ளூர் சமுதாயங்களுக்கு பகிர்ந்தளிப்பதாகவும் கூறியுள்ளார்.[20] முன்பு ஒரு போதைமருந்து டீலராக அவர் வேலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் அவர், தனது பாடல் வரிகள் வேறு மாதிரியாக அர்த்தப்படுத்தினாலும் கூட, தான் ஒரு போதும் போதைமருந்துகள் பயன்படுத்தியதில்லை என பேட்டிகளில் கூறியிருக்கிறார். அவரது குற்றவியல் வரலாறு பற்றிய குற்றச்சாட்டுகள் இருப்பினும், தன்னுடைய வாழ்க்கையை தான் மாற்றிக் கொண்டு விட்டதாக அவர் கூறுகிறார்.

தொழில் வாழ்க்கை

2004-05: அறிமுகம்: ட்ரபுள்

எகானின் முதல் ஸோலோ ஆல்பமான ட்ரபுள் ஜூன் 29, 2004 அன்று வெளியானது. அதுவே "லாக்டு அப்" மற்றும் "லோன்லி", "பெல்லி டான்ஸர் (பனன்ஸா)", "பாட் ஆஃப் கோல்ட்", மற்றும் "கெட்டோ" ஆகியவை வெளிவர வித்திட்டது. இந்த ஆல்பம் தான் கோன்விக்ட் மியூசிக் என்ற அவருடைய புது இசை லேபலின் முதல் வெளியீடாகும். அவர் 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ'விற்காக மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்த போதுதான் அறிமுக சிங்கிளுக்கான உத்வேகத்தை அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது.[4] "லாக்டு அப்" அமெரிக்காவின் சிறந்த தலைமை 10 பட்டியலிலும் மற்றும் இங்கிலாந்தின் தலைமை 5 பட்டியலிலும் இடம் பிடித்தது. "கெட்டோ"வில் 2Pac மற்றும் The Notorious B.I.G. இன் ராப் வரிகளை சேர்த்து டிஜே கிரீன் லேன்டர்ன் ரீமிக்ஸ் செய்தபோது அது ஒரு பெரிய ரேடியோ வெற்றியானது.

2005 இல் அவர் "லோன்லி" என்ற சிங்கிளை வெளியிட்டார். (இது பாபி வின்டனின் "மிஸ்டர் லோன்லி"யில் இருந்து முன்மாதிரி எடுக்கப்பட்டது). இந்த பாடல் "பில்போர்டு" ஹாட் 100 பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் சென்றது, அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலும் பட்டியல்களில் முன்னணி வகித்தது. அத்துடன் அவரது ஆல்பம் ஏப்ரல் 2005 இல், இங்கிலாந்தில் முதலிடத்தைப் பெற்றது. மியூசிக் சானலான தி பாக்ஸ் ஒரு முன்னணி பத்து வாராந்திர பட்டியல் கொண்டிருக்கும், இது எத்தனை பேர் இந்த பாடலை விரும்பிக் கேட்டார்கள் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும், எகோனின் "லோன்லி" தான் இந்த பட்டியலில் வெகுகாலம் இருந்த சிங்கிள் பாடலாக ஆனது, இது பதினைந்து வாரங்களுக்கும் அதிகமாய் பட்டியலில் இருந்தது. அதன்பிறகு எகோன் நியூசிலாந்தின் ராப் கலைஞரான சாவேஜ் உடன் இணைந்து மூன்ஷைன் என்னும் இன்னுமொரு சிங்கிளை வெளியிட்டார். அந்த சிங்கிள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இரண்டு நாடுகளிலும் வெற்றி பெற்று, நியூசிலாந்து பட்டியல்களில் முதலிடத்தை வென்றது. 2005 ஆம் ஆண்டில் விமர்னரீதியாக வரவேற்புபெற்ற தனது முதல் சிறப்புத் தோற்றத்தை யங் ஜீஸியின் அறிமுக ஆல்பமான, லெட்ஸ் கெட் இட்: தக் மோடிவேஷன் 101 இல் "சோல் சர்வைவர்" என்னும் பாடலில் அவர் செய்தார். அதே ஆண்டு டிசம்பரில் அவரது மேலாளரான ராபர்ட் மோன்டானெஸ் நியூ ஜெர்ஸியில் ஒரு சண்டையால் விளைந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டார்.

2006-08:கோன்விக்டட்

தி ஸ்வீட் எஸ்கேப் டூரில் க்வென் ஸ்டீபனி உடன் எகான் நிகழ்ச்சி செய்கிறார்.

எகானின் இரண்டாவது ஆல்பமான, கோன்விக்டட் நவம்பர் 14, 2006 அன்று வெளியானது. எமினெம், ஸ்னூப் டாக் மற்றும் ஸ்டைல்ஸ் பி. ஆகியோருடன் இணைந்து பாடியவை இதில் இடம்பெற்றிருந்தன. எமினெம் பங்கேற்ற முதலாவது சிங்கிளான "ஸ்மாக் தேட்" ஆகஸ்டு 2006 இல் வெளியானது, அத்துடன் பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு இரண்டாவது இடத்தில் இருந்தது. "ஐ வான்ன லவ் யூ" (ஸ்னூப் டாக் பங்கேற்றது) செப்டம்பரில் வெளியான இரண்டாவது சிங்கிளாகும், பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் முதலாவது இடத்தைப் பிடித்த எகோனின் முதலாவது சிங்கிளாகும் இது, ஸ்னூப்பிற்கு இது இரண்டாவது. "ஐ வான்ன லவ் யூ" அமெரிக்காவின் வரிசைப்படுத்தல் பட்டியல்களில் தொடர்ந்து இரண்டு வாரங்கள் முதன்மை வரிசையில் இருந்தது. ஜனவரி 2007 இல், மூன்றாவது சிங்கிளான "டோன்ட் மேட்டர்" முதலிடத்தை பிடித்த அவரது முதலாவது ஸோலோ பாடலாகவும், ஹாட் 100 பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தைப் பிடித்த எகான் பாடலாகவும் ஆனது. "மாமா ஆப்ரிக்கா" ஒரு ஐரோப்பிய சிங்கிளாக ஜூலை 2007 இல் வெளியானது, ஆல்பத்தின் மொத்தத்தில் நான்காவது சிங்கிளாக அமைந்த இது இங்கிலாந்தில் வெறும் 47 ஐ மட்டுமே எட்டியது.
"சாரி, பிளேம் இட் ஆன் மீ" ஆல்பத்தின் பிளாட்டின (டீலக்ஸ்) பதிப்பு வெளியீட்டிடுன் இணைந்த வகையில் ஆல்பத்தின் ஐந்தாவது சிங்கிள் ஆகஸ்டு 2007 இல் வெளிவந்தது, ஹாட் 100 இல் ஏழாவது இடத்தைப் பிடித்தது. டீலக்ஸ் பதிப்பு முழுமையாய் ஆகஸ்டு 28, 2007 இல் வெளியானது. "நெவர் டுக் தி டைம்" தான் இறுதி சிங்கிள் என்பதாக எகான் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.[21] "பில்போர்டு" 200 பட்டியலில் இரண்டாவது இடத்தில் அறிமுகமான கோன்விக்டட் , தனது முதலாவது வாரத்தில் 286,000 பிரதிகள் விற்றது. ஆறே வாரங்களுக்குப் பிறகு, கோன்விக்டட் அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமாகவும் உலகெங்கிலும் 1.3 மில்லியனுக்கும் அதிகமாகவும் இது விற்றது. ஏழு வாரங்களுக்குப் பின் பிளாட்டின சான்றிதழ் பெற்ற இந்த ஆல்பம், பதினாறு வாரங்களின் பின் இரட்டை பிளாட்டின சான்றிதழ் பெற்றது. பில்போர்டு 200 இன் தலைமை இருபதில் இது 28 தொடர்ந்த வாரங்களுக்கு இடம்பிடித்தது, அத்துடன் நான்கு வெவ்வேறு சமயங்களில் இது இரண்டாம் இடத்தையும் எட்டிப் பிடித்தது. அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருந்த நிலையில், நவம்பர் 20, 2007 இல் RIAA இந்த ஆல்பத்திற்கு டிரிபிள் பிளாட்டின சான்றிதழ் அளித்தது. உலகெங்கும் இது 4 மில்லியன் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருக்கிறது.

அக்டோபர் 5, 2006 அன்று எகான் ஹாட் 100 பட்டியலில் ஒரு சாதனையை முறியடித்தார், எகானின் "ஸ்மாக் தேட்" 95 வது இடத்திலிருந்து 7 வது இடத்திற்கு தாவியது தான் இந்த பட்டியலின் 48 வருட கால வரலாற்றில் சாதனை தாவலாக ஆனது. ஹாட் டிஜிட்டல் சாங்ஸ் தொகுப்பில் ஆறாவது இடத்தில் அறிமுகமாகி 67,000 பதிவிறக்கங்களைப் பெற்றதும் இந்த தாவலுக்கு காரணமாய் அமைந்தது. இந்த சாதனை அதற்குப் பின் பலமுறைகள் முறியடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 2006 இல், எகானின் "ஸ்மாக் தேட்" சிறந்த ராப்/கூட்டு பாடலுக்கு 49வது கிராமி விருதுகள் விழாவில் பரிந்துரை செய்யப்பட்டது, ஆனால் ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் T.I.இன் "மை லவ்" வெற்றி பெற்று விட்டது.

மற்ற கலைஞர்களுடன் இணைந்து செய்த பிராஜெக்டுகள்

  • 2006 ஆம் ஆண்டில், எகோன் தனது புதிய இசைத் தட்டு லேபல் கோன் லைவ் டிஸ்ட்ரிப்யூஷன் நிறுவனத்தை இன்டர்ஸ்கோப் ரெக்கார்ட்ஸின் கீழ் துவக்கினார். அவர் முதலில் ஒப்பந்தம் செய்த கலைஞர் ரே லாவண்டர்.
  • அவர் குவென் ஸ்டீபனியின் சமீபத்திய ஆல்பமான தி ஸ்வீட் எஸ்கேப் பில் இடம்பெற்றிருந்தார். டைட்டில் இசை மற்றும் இரண்டாவது சிங்கிளான "தி ஸ்வீட் எஸ்கேப்"பில் அவர் தோற்றமளித்தார். எகான் இந்த பாடலைத் தயாரித்தார். டிசம்பர் 10, 2006 இல் எகான் மற்றும் ஸ்டீபனி சாட்டர்டே நைட் லைவ் நிகழ்ச்சியில் இசை விருந்தினர்களாக தோன்றினர், ஆயினும் ஸ்டீபனி பாடல்வரிகளை அப்போது முழுமையாகக் கற்றிராத காரணத்தால் அவர்கள் அந்த பாடலை பாடவில்லை. ஆயினும், இந்த பாடலை நேரலையாக மார்ச் 28, 2007 இல் அமெரிக்கன் ஐடல் நிகழ்ச்சியில் அவர் செய்தார், முந்தைய இரவில் குவென் ஸ்டீபனி ஒரு பயிற்சியாளராகத் தோற்றம் கொடுத்திருந்தார் என்பதால். "பில் போர்டு" ஹாட் 100 பட்டியலில் "தி ஸ்வீட் எஸ்கேப்" இரண்டாமிடத்தைப் பிடித்தது.
  • சமில்லியனரின் மிக்ஸ்டேப் மெசையா 2 என்கிற அவரது மிக்ஸ்டேப்பில் எகோன் "ரைடிங் ஓவர்சீஸ்" என்கிற டிராக்கில் இணைந்து பங்கேற்றார், இதன் தயாரிப்பிலும் இவர் இருந்தார். இந்த மிக்ஸ்டேப் சமில்லியனிரின் இணையதளத்தில் டிசம்பர் 24, 2006 முதல் பதிவிறக்கக் கிடைக்கிறது.
  • 2006 ஆம் ஆண்டில், 2005 ஆம் ஆண்டில் எகான் தயாரித்த சிங்கிளான, "சோல் சர்வைவருக்கு"ப் பிறகு, வருங்காலத்தில் தங்கள் இணையிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கலாம் என இருவரும் தெரிவித்தனர். ஒரு கூட்டுப்படைப்பு ஆல்பத்திற்கு இப்போது திட்டங்கள் இருப்பதாக இந்த ஜோடி தெரிவித்தது.[22][23]
  • போனெ தக்ஸ்-அன்-ஹார்மோனியின் ஆல்பமான ஸ்ட்ரென்த் அன் லாயல்டி மற்றும் த்ரீ 6 மாபியாவின் 8வது ஸ்டுடியோ ஆல்பமான லாஸ்ட் 2 வாக் , டிஜே காலீத்தின் வீ தி பெஸ்ட் , ஃபேபோலஸ்ஸின் ஃப்ரம் நதிங் டூ சம்திங் , 50 சென்ட் உடன் கர்டிஸ் [24] க்கான சில டிராக்குகளில், T.I. இன் 5வது ஆல்பமான T.I. vs. T.I.P. ,[25] மரியோவின் 3வது ஸோலோ ஆல்பமான கோ! ,[26] மற்றும் டாடி யாங்கீ உடன் இணைந்து ஜூன் 5, 2007 இல் வெளியான எல் கார்டெல்: தி பாக் பாஸ் எனப்படும் ஆல்பத்தில் இடம்பெற்ற "பிரிங் இட் ஆன்" எனும் பாடல் தயாரிப்பு ஆகியவற்றிலும் எகான் இடம்பெற்றார்.[27]
  • ஜூலை 7, 2007 இல், லைவ் எர்த்தின் அமெரிக்க பிரிவில் எகான் நிகழ்ச்சி செய்தார்.
  • நவம்பர் 2007 இல், மைக்கேல் ஜாக்சன் உடன் இணைந்து "வான பீ ஸ்டார்டிங் சம்திங்" என்னும் ஒரு ரீமிக்ஸை எகான் பதிவு செய்தார். பிப்ரவரி 2008 இல், மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் 25வது ஆண்டு மறுவெளியீட்டு விழா வினை ஒட்டி இந்த ரீமிக்ஸ் வெளியானது.
  • ஆகஸ்டு 2009 இல், பிரபலமான புகழ்பெற்ற கொரிய பாடகரான BOA இடம்பெறும் பியூட்டிஃபுல்லின் இன்னொரு பதிப்பை எகான் வெளியிட்டார். ஆயினும் இந்த பதிப்பு ஜப்பான் சந்தைக்கானது.

சட்ட சிக்கல்கள்

ஏப்ரல் 2007 இல், ஒரு போதகரின் மகளான, அப்போது 15 வயதே ஆகியிருந்த டனா (தீனா) அலெய்ன் என்பவருடன் எகான் ஒரு கிளர்ச்சியூட்டும் நடனமாடினார், டிரினிடாட் அன்ட் டொபகோவில் இருக்கும் ஒரு கிளப்பில் ஒரு விளையாட்டான போட்டி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இது நடந்தது, ஆயினும் கிளப் தாங்கள் 21 வயது வரம்பு வைத்திருந்ததாகக் கூறியது.[28][29] இந்த சம்பவம் எகானின் குழுவினர் மூலம் படமாக்கப்பட்டு பின்னர் இணையத்தில் பதிவேற்றப்பட்டது. 2007 ஏப்ரல் 20 அன்று, டிவி6 சானல், இந்த வீடியோ கிளிப்பை பகிரங்கமாய் ஒளிபரப்பியது. ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் வலைப்பதிவு உலகில் இருந்தும் விமர்சனம் வந்ததை அடுத்து, வெரிசான் ஒயர்லெஸ்நிறுவனம் எகான் பாடல்கள் கொண்ட ரிங்டோன்களை அகற்றி விட்டது. எகான் துவக்க பாகத்தில் க்வென் ஸ்டீபனிக்கு பங்களிப்பதாய் இருந்த தி ஸ்வீட் எஸ்கேப் டூர் நிகழ்ச்சிக்கும் தான் ஸ்பான்சர் செய்யப் போவதில்லை எனவும் வெரிசான் தீர்மானித்தது.[30] ஆனால் யுனிவர்சல் மியூசிக் குரூப் நிறுவனமோ எகான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாறாக அந்த வீடியோ கிளிப்பை மட்டும் பதிப்புரிமை மீறல் என்று கூறி வீடியோ பகிர்வு தளமான யூட்யூப்பில் இருந்து அகற்ற கேட்டது. பழமைவாத விமர்சகரும் பேரண்ட்ஸ் டெலிவிஷன் கவுன்சில் ஸ்தாபகருமான ப்ரென்ட் போஸெல் இதனை "பெருநிறுவனப் பொறுப்பின்மை" என வர்ணித்தார்.[31]

அரசியல் விமர்சகர்களான மிசெல் மால்கின், லாரா இன்க்ரஹாம், மற்றும் பில் ஓ'ரெய்லி ஆகியோர் எகான் 'பெண்களை இழிவுபடுத்துவதாக' விமர்சித்தனர்.[32][33] மியூசிக் வீடியோக்கள் மற்றும் டிரினிடாட் கச்சேரி படங்களைக் கொண்டு, எகான் மீது விமர்சனக் கருத்தை யூட்யூப்பில் மால்கின் பதிவிட்டார், பின் யுனிவர்சல் மியூசிக் குரூப் அதனை DMCA டேக்டவுன் நோட்டிஸ் விநியோகம் மூலம் நிர்ப்பந்தமாய் அகற்றியது.[34]

இந்த அகற்றம் பதிவுரிமைச் சட்ட துஷ்பிரயோகம் என்று கூறி தி எலெக்ட்ரானிக் ஃபிரண்டியர் பவுண்டேஷனும் சவாலில் இணைந்து கொண்டது, கண்ணியமான பயன்பாட்டை அது கோரியது.[35]  மே 2007 இல், UMG இந்த வீடியோவுக்கான தனது உரிமைகோரலை தள்ளுபடி செய்து விட்டது, வீடியோ மீண்டும் யூட்யூப்புக்கு திரும்பியது.

ஜூன் 3, 2007 இல், நியூயார்க்கின், ஃபிஷ்கில்லில் உள்ள டட்சஸ் அரங்கத்தில் நடந்த WSPK's KFEST கச்சேரியில், கலந்து கொண்ட ஒருவர் எகான் மீது ஒரு பொருளை மேடையில் வீசியெறிந்தார். யார் பொருளை எறிந்தது எனக் கண்டுபிடித்து அவரை மேடைக்கு கொண்டு வாருங்கள் என்று கூட்டத்தாரைக் கேட்டுக் கொண்டார் எகான். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை பிடித்து மேடைக்கு இழுத்து வந்தனர். எகான் அந்த இளைஞரை கூட்டத்தில் இருந்து பிடித்து இழுத்து தனது தோளுக்கு எதிராய் தூக்கி நிறுத்தினார். பின் அவரை திரும்பவும் கூட்டத்திற்குள் தூக்கிப் போட்டார். இந்த சம்பவ வீடியோ ஃபிஷ்கில் போலிசார் மூலம் விசாரிக்கப்பட்டது.[36] இந்த சம்பவம் திட்டமிட்ட நாடகம் என்றும் உண்மையில் இந்த செயலை தனது அடுத்த இசைத் தட்டில் அமைப்பதற்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் எகான் தெரிவித்தார்.[37] காவல்துறை தலைவர் டோனால்டு எஃப் வில்லியம்ஸ் நடவடிக்கையின் படி, ஒரு சிறுவனின் நலனை அபாயத்திற்குள்ளாக்கியது, அத்துமீறிய குறும்பு, மற்றும் இரண்டாம் தரமான துன்புறுத்தல், அத்துமீறல் ஆகிய குற்றச்சாட்டுகள் எகான் மீது சுமத்தப்பட்டன, இரண்டு குற்றச்சாட்டுகள் மீது ஃபிஷ்கில் நீதிமன்றத்தில் டிசம்பர் 3, 2007 இல் எகான் விசாரணை செய்யப்பட்டார்.[38]

2008-இன்று வரை: ஃப்ரீடம்

எகான் தனது புதிய ஆல்பமான ஃப்ரீடத்தை டிசம்பர் 2 அன்று வெளியிட்டார், இது நான்கு சிங்கிள்களை அளித்தது: "ரைட் நவ் (ன ன ன)", " ஐ ஆம் ஸோ பெய்ட்" (லில் வேய்ன் மற்றும் யங் ஜீஸி), "ப்யூட்டிஃபுல்" (கார்டினல் ஒபிஷல் மற்றும் கோல்பி ஓ'டோனிஸ் இடம்பெறுவது) மற்றும் வீ டோன்ட் கேர். 600,000 ஆல்பங்களுக்கும் அதிகமாய் விற்றதன் மூலம் இந்த ஆல்பம் தங்க அந்தஸ்தை எட்டியது. [மேற்கோள் தேவை] வைஸ்லெஃப் உடன் இணைந்தும் அவர் ஒரு பாடல் பாடுகிறார். எகானின் ஆல்பமான ஃப்ரீடம் அவரது பாடல் வாழ்க்கையில் ஒரு பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.

மற்ற கலைஞர்களுடனான பிராஜெக்டுகள்

  • 2008 இளவேனில் காலத்தில் வெளியிடப்பட்ட லத்தீன் பாய் குழு மெனுடோவின் சமீபத்திய ஆல்பத்தில், "எக்கோ" என்னும் தலைப்பிலான டிராக்கினை எகான் தயாரித்தார்.
  • கேட் டெலுனாவின் அறிமுக ஆல்பமான 9 லைவ்ஸ் (ஆல்பம்) ஆல்பத்தின் மறுவெளியீட்டினை 'கோன்விக்ட் மியூசிக்' மேற்கொள்ள இருக்கிறது, இதில் "ஆம் ஐ ட்ரீமிங்" என்னும் சிங்கிளில் எகான் இடம்பெறுவார்.
  • ஜூலை 2008 இல், "ஹோல்ட் மை ஹேன்ட்" என்னும் ஒரு பாடல் இணையத்தில் சுற்றி வந்தது. இது கிளாட் கெல்லி தொகுப்பில் வந்த மைக்கேல் ஜாக்சன் மற்றும் எகான் ஆர்&பி டூயட்/கூட்டுப் பாடலாகும். எகான் மட்டுமே இடம்பெறும் இன்னொரு பதிப்பும் உள்ளது. இரண்டு கலைஞர்களின் இணையதளத்திலுமே இந்த பதிவு குறித்த எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் இல்லை, ஆயினும் பல்வேறு மற்ற இணையதளங்களில் இந்த டிராக் குறித்து எகான் பேசியிருக்கிறார். எகான் முன்பு கூறியிருந்தது போல் ஃப்ரீட த்தின் டிராக் பட்டியலில் இது சேர்க்கப்பட்டிருக்கவில்லை. டேவிஸ் ஸ்மைலி உடனான ஒரு நேர்காணலில், இந்த டிராக் வெளியில் கசியும் வரை, ஒரு இசை வீடியோவுடன் உயர் வகை வெளியிட்டிற்கு ஜேக்சன் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்று எகான் தெரிவித்தார். இது ஜேக்சன் ஜூன் 25, 2009 இல் மரணிப்பதற்கு முன்பு அவருடையதாக அறியப்படும் கடைசிப் பாடலாகும். ஜூலையின் பிற்பகுதியில், எகான் பாடிய ஒரு அஞ்சலி பாடல் "க்ரை அவுட் ஆஃப் ஜாய்" இணையத்தில் கசிந்தது.
  • கார்டினல் ஒபிஷல்லின் நான்காவது ஸோலோ ஆல்பமான நாட் 4 சேல் ஆல்பத்தில் நிர்வாக இயக்குநராகவும் எகான் இருந்தார், இது செப்டம்பர் 9, 2008 இல் வெளியானது. விளம்பர சிங்கிளான "கிரேவ்யார்டு ஷிப்டில்" எகான் இடம்பெற்றிருக்கிறார், முதல் அதிகாரப்பூர்வ சிங்கிளான "டேஞ்சரஸ்" போலவே, பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் இது ஐந்தாம் இடத்தைப் பிடித்ததோடு, 2009 ஜூனோ விருதுகள் விழாவில் ஆண்டின் சிறந்த சிங்கிளுக்கான விருதையும் வென்றது.
  • நியூ கிட்ஸ் ஆன் தி பிளாக்கின் 2008 மறுஇணைவு ஆல்பமான தி பிளாக் கில் அவர்களுடன் இணைந்து "புட் இட் ஆன் மை டேப்" என்கிற பாடலை எகான் எழுதி பதிவு செய்தார்.[39]
  • லியோனா லூயிஸின் அறிமுக ஆல்பமான "ஸ்பிரிட்"டில் இடம் பெற்ற அவரது வெற்றி பெற்ற இசைத் தட்டான ஃபர்கிவ் மீ எகான் இணைந்து எழுதி தயாரிப்பு செய்ததாகும்.
  • அவர் இப்போது எக்ஸ் ஃபேக்டர் 2008 வென்ற அலெக்சாண்ட்ரா பர்கே உடன் வெளிவரவிருக்கும் அவரது அறிமுக ஆல்பத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
  • கோன்விக்ட் முஸிக் கலைஞரான லேடி காகாவின் முதல் ஸ்டுடியோ ஆல்பமான தி ஃபேம் ஆல்பத்தை எகான் இணைந்து தயாரித்தார், அத்துடன் உலகளவில் பெரும் வெற்றி பெற்ற "ஜஸ்ட் டான்ஸ்" ஐ இணைந்து எழுதி தயாரித்தார், கோல்பி ஓ'டோனிஸும் இடம்பெற்றிருந்ததான இந்த ஆல்பம் 51வது கிராமி விருதுகள் விழாவில் ஒரு கிராமி பரிந்துரையை சம்பாதித்தது. இது கோன்விக்ட் முஸிக்கின் இரண்டு இளம் கலைஞர்களுக்கும் அவர்களது முதலாவது கிராமி பரிந்துரைகளை சம்பாதித்துத் தந்திருப்பதோடு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 14 க்கும் அதிகமான நாடுகளில் முதலிடத்தையும் பெற்றிருக்கிறது.
  • ஃபுளோ ரிடாவின் புதிய ஆல்பமான R.O.O.T.S. இன் "அவெய்லபிள்" டிராக்கில் எகான் இடம்பெற்றிருக்கிறார்.
  • தி பால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் E-40 இன் ஆல்பத்திற்காக "வேக் இட் அப்" என்கிற தலைப்பிலான பாடலை E-40 உடன் இணைந்து எகான் பதிவு செய்திருக்கிறார். பாடலில் தானியங்கு-மெட்டு விளைவு கொண்டு எகான் பரிசோதனை செய்திருக்கிறார்.
  • எகான், பரேல், மற்றும் டி-பெயின் இணைந்து 2009 இல் ஒரு ராப் சூப்பர்குழு ஒன்றை உருவாக்குவது குறித்து பேசியிருப்பதாக ராப் பாடகர் நெல்லி உறுதிப்படுத்தியுள்ளார்.[40]
  • எகான் மற்றும் கோன்விக்ட் முஸிக் ஃப்ளிப்ஸைடி என்னும் ஹிப் ஹாப்/ராக் குழுவின் 2009 வெளியீடான, ஸ்டேட் ஆஃப் சர்வைவல் -ஐ தயாரித்து வருகின்றன, இது கோன் லைவ் டிஸ்ட்ரிப்யூஷன் மற்றும் செர்ரிட்ரீ ரெக்கார்ட்ஸ் மூலம் வெளியிடப்பட இருக்கிறது.[41]
  • விட்னி ஹவுஸ்டனின் 2009 மறுதிரும்பல் ஆல்பமான ஐ லுக் டூ யூ -இல் எகான் அவருடன் பணிபுரிந்துள்ளார். "லைக் ஐ நெவர் லெஃப்ட்" என்கிற டிராக்கில் அவர் தோன்றுகிறார்.[42]
  • எகான் பசாதா குழு அவெஞ்சுரா மற்றும் ரெகாடன் இணை விசின் ஒய் யான்டெல் உடன் ஆல் அப் 2 யூ இல் வேலை செய்தார், அவெஞ்சுராவின் ஆல்பத்தில் இரண்டாவது சிங்கிளான தி லாஸ்ட் ஜூனில் கைவிடப்பட்டது.
  • எகான் தனது லேபலுக்காக சமீபத்தில் ஜேகோ என்னும் ஒரு ஹிஸ்பானிக் ஆர்&பி மற்றும் ரெகேடன் கலைஞருடன் கையொப்பமிட்டிருக்கிறார், அவரது "மெர்கான்டோ டெரிடோரியோ" என்னும் அறிமுக ஆல்பத்தில் அவருடன் இணைந்து வேலை செய்து வருகிறார்.
  • ஜூலை 2009 இல் "செக்ஸி பிட்ச்"[43] என்கிற ஒரு புதிய சிங்கிளில் டேவிட் குவெட்டாவுடன் இணைந்து எகான் வேலை செய்துள்ளார்.

குற்றச்சாட்டுகள்

எகானின் குற்றவியல் மற்றும் சிறை வரலாற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு அழகுபடுத்தப்பட்டிருக்கின்றன என்று "தி ஸ்மோக்கிங் கன்" ஏப்ரல் 2008 இல் கூறியது.[44][45][46] குறிப்பாக வாகனம் திருடும் கும்பல் ஒன்றின் பகுதியாக இருந்ததாகவும் மூன்று வருடங்களை சிறையில் கழித்திருப்பதாகவும் எகான் கூறுவது நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் எகானின் வழக்கில் சம்பந்தப்பட்ட புலனாய்வினருடனான பேட்டிகள் மூலம் கேள்விகளுக்கு உட்பட்டது.

"தி ஸ்மோக்கிங் கன்" கட்டுரையின் படி, எகான் எந்த குற்றத்திலும் குற்றப்பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை, அத்துடன் அவர் முன்னர் கூறி வந்தது போல் 1999 மற்றும் 2002 க்கு இடைப்பட்ட காலத்தில் அவர் எந்த நேரத்திலும் சிறையில் இருந்திருக்கவுமில்லை.  தன்னை "நம்பகமற்றதாக்க" "தி ஸ்மோக்கிங் கன்" முயலுவதில் எந்த அர்த்தமும் இல்லை, ஏனெனில் அவற்றைத் தான் நான் மறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார் எகான்.  தான் ஒரு போதும் தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறையில் செலவிட்டிருக்கவில்லை எனவும், ஆனால் மொத்தம் 3 வருட காலம் வரக் கூடிய அளவிலான சிறு சிறு தண்டனைகளைப் பெற்றதாகவும், "தி ஸ்மோக்கிங் கன்" கட்டுரையில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் எகான் பதிலடி அளித்தார்.[47]

தென்னாப்பிரிக்காவில் இவருக்கு சொந்தமான வைரச் சுரங்கம் சண்டைக்கான பின்புலமாய் இருக்கும் வைரங்களுக்கான ஒரு ஆதாரமாக விளங்குவதாகவும் ஊடகங்கள் இவர் மீது புகார் கூறின. இந்த விஷயம் குறித்து அவர் இன்டிபென்டட் நியூஸ்பேப்பர் செய்தித்தாளிடம் கூறும்போது இது பிளட் டயமண்ட் என்கிற திரைப்படத்தில் கூறப்படுகிற கருத்தாகும் என்றார். இந்த படம் தான் வைரங்களால் மோதல் உருவாகவும் இந்த பிரச்சினையை மிகைப்படுத்தவும் பொறுப்பாகியிருப்பதாக கூறி ஊடக புகார்களை அவர் கடுமையாக மறுக்கிறார்.[19]

தொலைக்காட்சி மற்றும் திரைப்படம்

ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வேலை நடந்து கொண்டிருப்பதாக எகான் உறுதிப்படுத்தியிருக்கிறார். "மை பிரதர்'ஸ் கீப்பர்" என்று அழைக்கப்படவிருக்கும் இந்த நிகழ்ச்சியில், ஏறக்குறைய எகான் போலவே இருக்கும் அவரது இரண்டு சகோதரர்கள் மக்களை தாங்கள் தான் எகான் என்று நம்ப வைத்து அட்லாண்டாவைச் சுற்றி வருவார்கள். விஐபிக்கான வரவேற்பு, பெண்கள் மற்றும் இலவச விஷயங்கள் அத்தனையையும் அவர்கள் பெற முயற்சிப்பார்கள். அட்லாண்டாவில் தனது சகோதரர்களைப் பார்த்து தான் என்று பலமுறை மக்கள் ஏமாந்திருப்பதாகவும் அது தான் இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படை எனவும் எகான் கூறியிருக்கிறார்.[37]

இல்லீகல் ஏலியன் என்கிற பெயரில் ஒரு முழுநீளத் திரைப்படம் ஒன்றில் பணிபுரியவும் எகான் திட்டமிட்டிருக்கிறார். தனது வாழ்க்கையின் சில சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் இருக்கும், நடிகர் மெகி பிஃபர் எகானாக நடிக்க இருக்கிறார்.

இதுதவிர, "கோகோயின் கவ்பாய்ஸ்" என்னும் ஒரு திரைப்படத்திலும் தான் வேலை செய்வதாக போலந்து நாட்டின் இணையதளமான INTERIA.PL க்கு அளித்த பேட்டியில் ஆகஸ்டு 2007 இல் எகான் உறுதி செய்திருக்கிறார், இது மெடலின் கார்டெல்லின் (கொலம்பிய போதைமருந்து கடத்தல்காரர்கள்)முக்கிய பைலட் ஜோன் ராபர்ஸ் கதையைச் சொல்கிறது.[48]

வெரிசான் ஒயர்லஸ்ஸின் வர்த்தகரீதியான மற்றும் பாடல் தொடரான சிஎஸ்ஐ: கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன் என்னும் தொகுப்பில் இடம்பெற்ற "பாப்பிங் டேக்ஸ்" என்னும் அத்தியாயத்தில் ஓபி ட்ரைஸ் உடன் இணைந்து ஸ்னிட்ச் என்னும் சிங்கிளிலும் பங்கேற்றிருந்தார்.

நவம்பர் 30, 2007 இல், பினாய் பிக் பிரதர் செலப்ரிட்டி எடிஷன் 2   நிகழ்ச்சியில் வீட்டில் இருப்பவர்கள் அவரை 100 விநாடிகள் மட்டும் சந்திக்கக் கூடிய வகையில் ஒரு விருந்தினராக பிக் பிரதர் வீட்டிற்குள் எகான் நுழைந்தார்.

நவம்பர் 17,2008 WWE Raw நிகழ்ச்சியிலும் அவர் தோன்றினார், சான்டினோ மரெல்லா அவரை தனது பேச்சில் குறிப்பிட்டார். சான்டினோவின் இத்தாலிய தொனிநடை காரணமாக, அவர் எகானின் பெயரை "அகார்ன்" என பிழையாக உச்சரித்தார்.

ஏப்ரல் 27, 2008 இல் டான்ஸ் ஆன் சன்செட் நிகழ்ச்சியில் கோல்பி ஓ'டோனிஸ் உடன் எகான் தோன்றினார்.

ஃபேஷன்

பிப்ரவரி 2007 இல், கோன்விக்ட் குளோத்திங் என்னும் தனது ஆடை வரிசையை எகான் அறிமுகப்படுத்தினார். டெனிம் ஜீன்ஸ், ஹூடிஸ், டி-சர்ட்டுகள் மற்றும் தொப்பிகள் உள்ளிட நகர்ப்புற வீதியாடைகளை இது கொண்டிருந்தது. அலியாவுன் மேம்பட்ட வகை அல்லது உயர்தர வரிசையாகும், இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பிளேசர்கள், டெனிம் ஜீன்ஸ், மற்றும் பிற அம்சங்களும் இருக்கும். எம்டிவியின் டைரக்ட் எஃபக்ட் நிகழ்ச்சியில் கோன்விக்ட் ஆடை வரிசைக்கு விளம்பரத்தில் எகான் உடன் டைமோத்தி ஹாட்ஜ் தோன்றினார்.[49]

டிஸ்கோகிராபி

விருதுகளும் பரிந்துரைகளும்

Akon awards and nominations
Award Wins Nominations
American Music Awards
1 3
Grammy Awards
0 5
MTV Video Music Awards
0 4
Totals
Awards won 1
Nominations 12

எகான் 2008 ஆம் ஆண்டில் நான்கு கிராமி விருது பரிந்துரைகளைப் பெற்றார், "தி ஸ்வீட் எஸ்கேப்"பிற்காக க்வென் ஸ்டீபனி உடன் வாய்ப்பாட்டில் சிறந்த பாப் கூட்டுப்படைப்புக்கான பரிந்துரை, "பார்டென்டர்"க்காக டி-பெயின் உடன் ஒரு இருவர் இணை அல்லது குழுவால் அளிக்கப்பட்ட சிறந்த ஆர்&பி வாய்ப்பாட்டு நிகழ்ச்சிக்கான பரிந்துரை, கோன்விக்டடு க்காக சிறந்த சமகால ஆர்&பி ஆல்பத்திற்கான பரிந்துரை, மற்றும் ஸ்னூப் டாக் உடனான "ஐ வான்னா லவ் யூ" வுக்கான சிறந்த ராப்/கூட்டுப் பாடலுக்கான பரிந்துரை ஆகியவை இதில் அடக்கம். எகான் பெற்றுள்ள ஒரே விருது அமெரிக்க மியூசிக் அவார்ட்ஸ் 2007 ஆம் ஆண்டில் வழங்கிய ஃபேவரைட் சோல்/ஆர்&பி ஆண் கலைஞருக்கான விருது ஆகும். மொத்தத்தில், பன்னிரண்டு பரிந்துரைகளில் இருந்து எகான் ஒரு விருது மட்டுமே வென்றுள்ளார்.

அமெரிக்கன் மியூசிக் அவார்ட்ஸ்

அமெரிக்கன் மியூசிக் அவார்ட்ஸ் என்பது டிக் கிளார்க் 1973 ஆம் ஆண்டில் நிறுவிய வருடாந்திர விருதுகள் வழங்கும் விழாவாகும்.  எகான் மூன்று பரிந்துரைகளில் இருந்து ஒரு விருதினை வென்றுள்ளார்.[50][51]
Year Nominated work Award Result
2007 எகான் ஃபேவரைட் சோல்/ஆர்&பி ஆண் கலைஞர் வெற்றி
ஆண்டின் சிறந்த கலைஞர் பரிந்துரை
ஃபேவரைட் பாப்/ராக் மேல் ஆர்டிஸ்ட் பரிந்துரை

கிராமி விருதுகள்

கிராமி விருதுகள் வருடந்தோறும் அமெரிக்காவின் நேஷனல் அகாதமி ஆஃப் ரெகார்டிங் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ் அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது. எகான் ஐந்து முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.[50][52]

Year Nominated work Award Result
2007 "ஸ்மாக் தேட்" (எமினெம் உடன்) சிறந்த ராப்/கூட்டுப் பாடல் பரிந்துரை
2008 "தி ஸ்வீட் எஸ்கேப்" (க்வென் ஸ்டீபனி உடன்) வாய்ப்பாட்டு கலைஞர்களுடன் சிறந்த பாப் கூட்டுப்பாடல் பரிந்துரை
"பார்டென்டர்" (டி-பெயின் உடன்) ஒரு இணை அல்லது குழு மூலம் பாடப்பெற்ற சிறந்த ஆர்&பி வாய்ப்பாட்டு நிகழ்ச்சி பரிந்துரை
கோன்விக்டட் சிறந்த சமகால ஆர்&பி ஆல்பம் பரிந்துரை
"ஐ வான்னா லவ் யூ" (ஸ்னூப் டாக் உடன்) சிறந்த ராப்/கூட்டுப் பாடல் பரிந்துரை

MTV வீடியோ மியூசிக் விருதுகள்

MTV வீடியோ மியூசிக் விருதுகள் 1984 ஆம் ஆண்டில் எம்டிவியால் ஸ்தாபகமான வருடாந்திர விருதுகள் வழங்கும் விழாவாகும். எகான் நான்கு பரிந்துரைகளை பெற்றிருக்கிறார்.[50][53][54]

Year Nominated work Award Result
2005 "லாக்டு அப்" MTV2 விருது பரிந்துரை
2007 எகான் ஆண்டின் சிறந்த ஆண் கலைஞர் பரிந்துரை
"ஸ்மாக் தேட்" (எமினெம் உடன்) உலகத்தை உலுக்கும் சிறந்த கூட்டுப் பாடல் பரிந்துரை
"தி ஸ்வீட் எஸ்கேப்" (க்வென் ஸ்டீபனி உடன்) உலகத்தை உலுக்கும் சிறந்த கூட்டுப் பாடல் பரிந்துரை

இசைப் பயணம்

  • தர் எஸ் சலாம், தான்சானியா ஒருமுறை கச்சேரி (2006).[55]
  • கோன்விக்டட் டூர் (2007 ஜூலை முதல் செப்டம்பர் வரை, அதனைத் தொடர்ந்து 2008 இல் கூடுதல் தேதிகள்)
  • தி ஸ்வீட் எஸ்கேப் டூர் க்வென் ஸ்டீபனி உடன் (2007 ஏப்ரல் முதல் ஜூலை வரை)
  • தி குட் கேர்ள் கோன் பேட் ரிஹானா உடன் (கனடாவில் மட்டும், செப்டம்பர் – டிசம்பர் 2008).

குறிப்புதவிகள்

  1. Ingolo.com: எகான் உச்சரிப்பு.
  2. பிரான்சன், ஃபிரட் "Chart Beat", பில்போர்டு மேகஸின் , 2007-04-05.
  3. தி எலென் டிஜெனர்ஸ் ஷோவில் மற்றும் பிற பேட்டிகளில் எகான் (ஜனவரி 7 2009).
  4. 4.0 4.1 ரோலிங்ஸ்டோன்ஸ்: எகான் பெயர் “ரோலிங்ஸ்டோன் இதழ், 2006-11-02.
  5. ASCAP: அலியாவுன் தியாம் என குறிக்கப்பட்டது ஏப்ரல் 7, 2009 அன்று அணுகப்பட்டது
  6. "Akon se rattrape à Iba Mar Diop", ஸெனெபோர்டல், 2005-06-05.
  7. நீரோ, மார்க் எட்வர்டு. எகான் புரொஃபைல், About.com.
  8. http://www.thesmokinggun.com/archive/years/2008/0416081dutchmisd2.html
  9. http://www.thesmokinggun.com/archive/years/2008/0416081njjudgment1.html
  10. எகான் பிபிசி. பெறப்பட்டது 2009-06-24 அன்று.
  11. 11.0 11.1 http://www.thesmokinggun.com/archive/years/2008/0416081akon1.html
  12. Wie alt ist Akon wirklich? (MTV நியூஸ்)
  13. பாட்டம்லி, சி. "Akon: Trouble No More", VH1.com , 2005-05-02.
  14. Loftus, Johnny (2006). "Akon — Biography". Allmusic. பார்க்கப்பட்ட நாள் 2008-05-08.
  15. எகான் புரொஃபைல் About.com. பெறப்பட்டது 2009-03-23 அன்று.
  16. Who Does Akon Think He Is? ப்ளென்டர் , செப்டம்பர் 19, 2007.
  17. ஃபிரேசர் மெகல்பின் (7 பிப்ரவரி 2007) Ask Akon, And Answers Arrive! பிபிசி ரேடியோ 1 (பிபிசி). பெறப்பட்டது 2009-04-23 அன்று.
  18. "Founders". Konfidence Foundation.
  19. 19.0 19.1 எகெரெ-கூப்பர், மாடில்டா. எகான்: நான் ஒரு வைர சுரங்கம் வைத்திருப்பதால் என்ன ஆயிற்று?.இன்டிபென்டன்ட் , 2007-02-16.
  20. "Akon Interview with Howard Stern part 4 of 4".
  21. டாங், மெலிசா எகான்: நல்லதும் கெட்டதும், BallerStatus.com, 2007-08-02.
  22. ரீய்ட், ஷஹீம் Saga Of Young Jeezy, Akon Continues With Possible Duet LP, MTV நியூஸ் , 2006-06-15.
  23. பெடிபாஸ், ஜொலென் Young Jeezy Teams With Akon For Collabo CD, SOHH , 2006-12-07.
  24. "My List: Akon". ரோலிங் ஸ்டோன் , 2007-04-03.
  25. கோஹென்.ஜோனாதென்."T.I. Stretches Out With Eminem, Timbaland, Wyclef", பில்போர்டு , 2007-04-14.
  26. ரோட்ரிகெஸ், ஜேசன் "Mario Gets Back To Making Music With Akon, Timbaland, Neptunes", MTV.com , 2007-04-13.
  27. கோஹென்.ஜோனாதென். "Daddy Yankee Drafts Fergie, Akon For New Album", பில்போர்டு , 2007-04-03.
  28. டெலஸ்ஃபோர்டு, நிகில் Akon 'cons' Trinidad, டிரினிடாட் எக்ஸ்பிரஸ் , 2007-04-14.
  29. ராம்நரைன், கிறிஸ்டி. Zen owner: Age limit 21 for club, டிரினிடாட் எக்ஸ்பிரஸ் , 2007-04-20.
  30. லீட்ஸ், ஜெஃப் Verizon Drops Pop Singer From Ads, நியூயார்க் டைம்ஸ் , 2007-05-10.
  31. போஸெல், எல்.பிரென்ட் III. Rapper Not a "Perfect Gentleman", ParentsTV.org , 2007-05-24.
  32. மால்கின், மிசெல். Look who’s promoting a vulgar misogynist, MichelleMalkin.com, 2007-05-03.
  33. பல்ஸ் ரிப்போர்ட், SOHH.com , 2007-05-11.
  34. மால்கின், மிசெல். "Akon's record company abuses DMCA to stifle criticism on YouTube", MichelleMalkin.com, 2007-05-03.
  35. "Malkin Fights Back Against Copyright Law Misuse by Universal Music Group", எலெக்ட்ரானிக் ஃபிரண்டியர் பவுண்டேஷன் , 2007-05-09.
  36. Police: Akon investigation continues, பவ்கீப்ஸி ஜர்னல் , 2007-08-29.
  37. 37.0 37.1 சாஜனி, அர்ச்சனா Akon: Real Talk, AllHipHop.com , 2007-08-06.
  38. Akon Faces Charges, பவ்கீப்ஸி ஜர்னல் , 2007-11-30.
  39. http://nkotb.com/blog/2008/08/donnie-talks-music
  40. Goldstein, Melissa (2008-10-23). "Pharrell, T-Pain, Nelly, Akon Unite for Supergroup". Spin.
  41. "Flipsyde's Official MySpace".
  42. MTV: Whitney & AKon Collab
  43. "Sexy Bitch teaser". பார்க்கப்பட்ட நாள் 2009-07-16.
  44. http://www.nytimes.com/2008/04/17/arts/17arts-AKONSRAPSHEE_BRF.html
  45. http://www.foxnews.com/story/0,2933,351580,00.html
  46. எகானின் மோசடி வேலை, தி ஸ்மோக்கிங் கன் , 2008-04-16.
  47. http://www.mtv.com/news/articles/1587614/20080516/akon.jhtml
  48. "Akon intensywnie", INTERIA.PL , 2007-08-28.
  49. வின்னிங், ப்ராலின். "Akon - Got It Locked", MP3.com , 2006-10-23.
  50. 50.0 50.1 50.2 "Akon". Rock on the Net. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  51. Cohen, Sandy (2007-11-19). "Daughtry Wins 3 American Music Awards". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  52. Montgomery, James (2007-12-06). "Akon Calls His Mom, Plain White T's Call Delilah To Celebrate Grammy Nominations". MTV. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  53. "2005 Video Music Awards". MTV. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  54. "2007 Video Music Awards". MTV. பார்க்கப்பட்ட நாள் 2008-10-18.
  55. Akon comes to region. ஆல் ஆப்ரிக்கா நியூஸ்வயர் , 2006-05-23.

புற இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
எகான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வார்ப்புரு:Akon

nan:எகான்

pnb:ایکون

"https://ta.wikipedia.org/w/index.php?title=எகான்&oldid=628665" இலிருந்து மீள்விக்கப்பட்டது