ஸ்னூப் டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்னூப் டாக்
2006ல் சிட்டி ஸ்டேஜெஸ் விழாவில் பாடகர் ஸ்னூப் டாக்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கோர்டோசார் கேல்வின் புரோடஸ் ஜூனியர்
பிற பெயர்கள்ஸ்னூப் டாக், ஸ்னூப் டாகி டாக்
பிறப்புஅக்டோபர் 20, 1971 (1971-10-20) (அகவை 52)
பிறப்பிடம்லாங் பீச், கலிபோர்னியா,  ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்ராப் இசை
தொழில்(கள்)ராப் இசைக் கலைஞர், நடிகர், இசை தயாரிப்பாளர்
இசைத்துறையில்1992 – இன்று
வெளியீட்டு நிறுவனங்கள்இண்டர்ஸ்கோப்
டிவிடி
ஸ்டார் ட்ராக்
கெஃபென்
டாகிஸ்டைல்
இணைந்த செயற்பாடுகள்வாரென் ஜி, டூபாக் ஷகூர், நேட் டாக், டாக்டர் ட்ரே, டாஸ் டிலிஞ்சர், கரப்ட், ஆர்.பி.எக்ஸ்., சூப்பஃப்ளை, லேடி ஆஃப் ரேஜ், கோல்டி லோக், சார்லி வில்சன், ஃபரெல் வில்லியம்ஸ், த கேம்
இணையதளம்www.snoopdogg.com

ஸ்னூப் டாக் (Snoop Dogg) அல்லது ஸ்னூப் டாகி டாக் (Snoop Doggy Dogg) (பிறப்பு கோர்டோசார் கேல்வின் புரோடஸ் ஜூனியர் (Cordozar Calvin Broadus, Jr.), அக்டோபர் 20, 1971) ஒரு அமெரிக்க ராப் இசைக் கலைஞர், நடிகர், மற்றும் இசை தயாரிப்பாளர் ஆவார். மேற்கு கடற்கரை ராப் இசை கலைஞர்களின் ஒரு புகழ்பெற்றவர் ஆவார். இவரின் முதலாம் ஆல்பம் டாகிஸ்டைல் ராப் இசை வரலாற்றில் மிக உயர்ந்த ஆல்பம்களின் ஒன்று என்று பல ராப் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

கலிபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் ஒரு புறநகரம் லாங் பீச் (கலிபோர்னியா)சில் பிறந்து வளந்த ஸ்னூப் டாக் 1992ல் டாக்டர் ட்ரேயின் முதலாம் ஆல்பம் த க்ரானிக்கில் சில கவிதைகளை படைத்து புகழுக்கு வந்தார். டாக்டர் ட்ரே உடன் இசை தயாரிப்பு நிறுவனம் டெத் ரோ ரெக்கர்ட்ஸ்-ஐ சேர்ந்து 1993ல் இவரின் முதலாம் ஆல்பம் டாகிஸ்டைல் வெளிவந்தது. த க்ரானிக், டாகிஸ்டைல் ஆகிய ஆல்பம்கள் ஜி-ஃபங்க் மற்றும் மேற்கு கடற்கரை ராப் இசையை சிறப்பினது. டெத் ரோ ரெக்கர்ட்ஸில் இருக்கும்பொழுது வேறு புகழ்பெற்ற ராப்பர்கள் ஐஸ் கியூப், டூபாக் ஷகூர், மற்றும் இவரின் மாமாப் பிள்ளை நேட் டாக் உடன் ராப் பாடல்களை படைத்தார்.

இரண்டு ஆல்பம் படைத்து 1998ல் டெத் ரோ நிறுவனத்தை விட்டு மாஸ்டர் பீயின் நோ லிமிட் ரெக்கர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தார். இங்கு மூன்று ஆல்பம்களை படைத்தார். 2003ல் இந்த நிறுவனத்தை விட்டு ஃபரெல் வில்லியம்ஸ் உடன் ஸ்டார் ட்ராக் நிறுவனத்தை சேர்ந்து இன்று வரை ஃபரெல் உடன் நாலு ஆல்பம் படைத்துள்ளார்.

ராப் இசை தவிர இவர் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். போன்ஸ், ஸ்டார்ஸ்கி & ஹச், மற்றும் சோல் ப்ளேன் ஆகிய திரைப்படங்களில் ஒரு பிரதான நடிகராக நடித்தார். இது தவிர பல திரைப்படங்களில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். எம்.டி.வி.யில் ஒரு காட்சி, டாகி ஃபிசில் டெலெவிசில், இவரின் தயாரிப்பில் 2002ல் வெளிவந்தது. Porn படங்களும் இவர் தயாரிப்பு செய்துள்ளார்.

2008இல் ஸ்னூப் டாக் சிங் இஸ் கிங் என்ற பாலிவுட் திரைப்படத்துக்காக அக்ஷய் குமார் உடன் ஒரு பாடலை தயாரித்துள்ளார்.

ஆல்பம்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்னூப்_டாக்&oldid=3816412" இலிருந்து மீள்விக்கப்பட்டது