அடோபி சிஸ்டம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Manjuudupa (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Adobe_Systems (revision: 347511555) using http://translate.google.com/toolkit with about 85% human translations.
(வேறுபாடு ஏதுமில்லை)

10:19, 14 மே 2010 இல் நிலவும் திருத்தம்

Adobe Systems Incorporated
வகைPublic (நாசுடாக்ADBE)
நிறுவுகைMountain View, California (1982)
நிறுவனர்(கள்)Charles Geschke
John Warnock
தலைமையகம்San Jose, California, U.S.
சேவை வழங்கும் பகுதிWorldwide
முதன்மை நபர்கள்Charles Geschke, Founder
John Warnock, Founder
Shantanu Narayen, President & CEO
தொழில்துறைComputer software[1]
உற்பத்திகள்See List of Adobe products
வருமானம் $ 3.579 billion (2008)[2]
இயக்க வருமானம் $ 1.028 billion (2008)[2]
நிகர வருமானம் $ 871.8 million (2008)[2]
மொத்தச் சொத்துகள் $ 5.821 billion (2008)[2]
மொத்த பங்குத்தொகை $ 4.410 billion (2008)[2]
பணியாளர்8,660 (December 2009)[3]
இணையத்தளம்Adobe.com

அடோப் சிஸ்டம்ஸ் இன்கார்பரேட்டட் (ஒலிப்பு: /əˈdoʊbiː/ə-DOE-bee)(நாசுடாக்ADBE) அமெரிக்காவில் கணினிக்கான மென்பொருள் உருவாக்கும் ஒரு நிறுவனம், இது கலிபோர்னியாவில், சான் ஹூசேவைத் தலைமையகமாகக் கொண்டது. இந்த நிறுவனம் மல்டிமீடியா மற்றும் ஆக்கபூர்வ மென்பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது, சமீபகாலமாக சிறந்த இணையதள பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது.

டிசம்பர் 1982[3] ஆம் ஆண்டு, ஜான் வார்னாக் மற்றும் சார்லஸ் ஜெஸ்க் என்பவர்களால் அடோப் நிறுவனம் உருவாக்கப்பட்டது, போஸ்ட் ஸ்க்ரிப்ட் (PostScript) பக்க விளக்க மொழியை உருவாக்க இவர்கள் ஜெராக்ஸ் பார்க் (Xerox PARC) என்ற நிறுவனத்தை விட்டு விலகி இந்நிறுவனத்தை உருவாக்கினர். 1985 ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் போஸ்ட் ஸ்க்ரிப்டின் உரிமம் பெற்று, அதனை தனது லேசர்ரைட்டர் அச்சியந்திரங்களுக்கு பயன்படுத்தியது, இது டெஸ்க்டாப் பிரசுரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிறுவனத்தின் பெயரான அடோப் என்பது, கலிபோர்னியா, லாஸ் ஆல்டோஸ்சில் (Los Altos) உள்ள அடோப் கிரீக் (Adobe Creek) என்பதிலிருந்து உருவானது, இது இந்நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரது வீட்டிற்கு பின்புறம் ஓடிய ஓடையின் பெயர்.[3] டிசம்பர் 2005 ஆம் ஆண்டு, அடோப் தனது போட்டி நிறுவனமான மேக்ரோமீடியாவை கையகப்படுத்தியது, இது அடோப் கோல்ட்ப்யூஷன் (Adobe ColdFusion), அடோப் ட்ரீம்வீவர் (Adobe Dreamweaver), அடோப் ஃப்ளாஷ் (Adobe Flash) மற்றும் அடோப் ஃப்ளக்ஸ் (Adobe Flex) என அதனது தயாரிப்புகளின் பட்டியலை அதிகரிக்க உதவியது.

ஆகஸ்ட் 2009 ஆம் வருட கணக்கெடுப்பின்படி, அடோப் சிஸ்டம்சில் 7,564 பணியாளர்கள் [3] பணியாற்றி வந்தனர், அதில் 40 சதவீத மக்கள் சான் ஹூசேவில் பணியாற்றி வந்தனர். அடோப்பின் முக்கிய அபிவிருத்தி செயலாக்க கூடங்கள், ஆர்லான்டோ, ப்ளோரிடா; சியாட்டில், வாஷிங்க்டன்; சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா; ஒட்டாவா; ஆன்டாரியோ; மினியாபோலிஸ், மின்னிசோட்டா; நியூட்டன், மாசஷூசெட்ஸ்; சான் லூயிஸ் ஓபிஸ்போ, கலிபோர்னியா; ஹாம்பர்க், ஜெர்மனி; நாய்டா, இந்தியா; பெங்களூர், இந்தியா; புச்சாரஸ்ட், ரோமானியா; பெய்ஜிங், சைனா ஆகியவை.

வரலாறு

அடோப் சிஸ்டம்ஸ் கலிபோர்னியாவில் உள்ள சான் ஹூசேவைத் தமது தலைமையகமாகக் கொண்டுள்ளது.

அடோப் அதன் போஸ்ட் ஸ்க்ரிப்ட் தயாரிப்பிற்கு பின் டிஜிட்டல் எழுத்துருக்களை உரிம உடமையுடன் டைப் 1 என்ற வடிவில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இதற்குப் போட்டியாக எழுத்து வடிவ எல்லைகளை மிகவும் துல்லியமாக பிக்சல் வடிவில் கட்டுப்படுத்தும் ட்ரூ டைப் என்ற மென்பொருளாக வெளியிட்டு இதன் உரிமத்தை மைக்ரோசாப்ட்டிற்கு வழங்கினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் அடோப், டைப் 1 வடிவ எழுத்துடன் அடோப் டைப் மேனேஜர் என்ற மென்பொருளை வெளியிட்டது, இது ட்ரூ டைப் போன்ற துல்லியமான பிக்சல் கட்டுப்பாடு இல்லாத போதிலும், WYSIWYG அளவுகோல் கொண்ட திரையில் வரும் டைப் 1 வடிவ எழுத்துக்களுடன் இருந்தது. ஆனால் இத்தகைய முயற்சிகள் ட்ரூ டைப்பின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. டைப் 1 கிராபிக்/பிரசுர சந்தையின் தரமாக ஏற்கப்பட்டிருப்பினும் ட்ரூ டைப், வியாபாரச் சந்தை மற்றும் விண்டோஸ் பயன்படுத்துபவரிடையேயும் உபயோகத் தரமாக கொள்ளப்பட்டது. 1996 ஆம் வருடம் அடோப் மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து ஓபன் டைப் வடிவ எழுத்துக்களை வெளியிட்டது, இதனைத் தொடர்ந்து 2003 ஆம் வருடம் அடோப் அதன் டைப் 1 வடிவ எழுத்துக்களின் தொகுப்பை ஓபன் டைப்பாக மாற்றியது.

1980களில், அடோப், ஆப்பிள் மேக்கிண்டோஷ்க்காக அடோப் இல்லஸ்ரேட்டர் என்ற வெக்டர் வடிவ மென்பொருளுடன் நுகர்வோர் சந்தையில் நுழைந்தது. உள் நிறுவன எழுத்துரு-உருவாக்க மென்பொருளிலிருந்து வளர்ச்சியடைந்த இல்லஸ்ரேட்டர், போஸ்ட் ஸ்க்ரிப்டை பயன்படுத்தும் லேசர் அச்சியந்திரங்கள் பிரபலமாக உதவியது. மெக் டிரா, தரமான மேஷிண்டாஷ் வெக்டார் வரைதல் நிரல் போலல்லாது, இல்லஸ்ரேட்டர், வடிவங்களை விளக்க, அதுவரை இல்லாத அளவு மிகவும் துல்லியமான மற்றும் இணக்கமான பேசியர் வளைவுகளை அளித்தது. அடோப், அடோப் டைப் மேனேஜர் வெளியிடும் வரை, இல்லஸ்ரேட்டரின் வடிவ எழுத்துருக்கள், மேஷிண்டாஷின் குயிக் டிரா நூலகங்களைச் சார்ந்தே இருந்தது, போஸ்ட் ஸ்க்ரிப்ட் மாதிரி அணுகுமுறையால் அதனை முறியடிக்க இயலவில்லை.

1989 ஆம் ஆண்டு, அடோப் தனது தயாரிப்பில் முத்திரைப் பதித்த, மேஷிண்டாஷின் கிராபிக்ஸ் திருத்தியமைக்கும் நிரலான போட்டோஷாப்பினை அறிமுகப்படுத்தியது. நிலையான மற்றும் சிறப்பு அம்சங்களுடன், போட்டோஷாப் 1.0 பதிப்பினை அடோப் விற்பனை செய்தது, அது மென்பொருள் சந்தையை ஆட்சி செய்தது.[4]

அடோப்பின் சில தவறான செய்கைகளில் ஒன்று, மேஷிண்டாஷ் தளத்திற்கு டெஸ்க்டாப் பிரசுர நிரலை (DTP) அளிக்காததகும். 1985 ஆம் ஆண்டு ஆல்டஸ், பேஜ் மேக்கரையும், 1987 ஆம் ஆண்டு, குவார்க், குவார்க்எக்ஸ்பிரஸ்சினையும் கொண்டு வந்து, டிடிபி சந்தையில் முன்னிலையை அடைந்தனர். அடோப், வளர்ந்து வந்த விண்டோஸ் டிடிபி (DTP) சந்தையையும் சிறிது தாமதமாகவே சந்தித்தது. எனினும் அடோப், தனது இன் டிசைன் என்ற வெளியீட்டின் மூலமும், கிரியேட்டிவ் சுயிட் என்ற சேவையின் மூலம் இவ்வியாபாரத்தை திறம்பட எதிர்கொண்டது. கணினியாக்கம் செல்லும் திசையை நிர்ணயிக்க முடியாமல், அடோப் ஸ்டீவ் ஜாபின் நெக்ஸ்ட்(NeXT) கணினிக்காக இல்லஸ்ரேட்டரின் முழு பதிப்பை வெளியிட்டது, ஆனால் அது விண்டோஸ்க்கு தரம் தாழ்ந்து தயாரிக்கப்பட்ட பதிப்பாகும்.

இத்தகைய தவறான அடிகளை வைத்த போதும், போஸ்ட் ஸ்க்ரிப்ட் இன்டர்பிரெட்டருக்காகப் பெற்ற உரிமக் கட்டணம், 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் அதன் பல்வேறு போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ள அல்லது கையகப்படுத்த போதுமானதாக இருந்தது. டிசம்பர் 1991 ஆம் ஆண்டு, அடோப், அடோப் பிரீமியர் என்பதை வெளியிட்டது, 2003 ஆம் ஆண்டு அதனை அடோப் பிரீமியர் ப்ரோ(Adobe Premiere Pro) என மறுபெயரிட்டு வெளியிட்டது. 1994 அடோப் ஆல்டஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி, அடோப் பேஜ் மேக்கர் மற்றும் அடோப் ஆப்டர் எஃபக்ட்ஸ் இரண்டையும் தனது தயாரிப்புகள் வரிசையில் சேர்த்தது; மேலும் டிஃப் (TIFF) கோப்பு வடிவமைப்பையும் கட்டுப்படுத்தியது. 1995 ஆம் ஆண்டு, அடோப், பிரேம் டெக்னாலஜி கார்ப்பை கையகப்படுத்திய பின் தனது தயாரிப்பு வரிசையில், அடோப் ப்ரேம்மேக்கர் என்ற ஆவண டிடிபி (DTP) பயன்பாட்டைச் சேர்த்தது. அடோப் 1999 ஆம் ஆண்டு, குவார்க் காப்பி டெஸ்க்கிற்கு போட்டியாக அடோப் இன்காப்பி (Adobe InCopy) என்பதை அறிமுகப்படுத்தியது.[5]

முன்னணி போட்டியாளர்கள்

ஹூவரில்[6] வழங்கியபடி, அடோபின் முன்னணி போட்டியாளர்கள்:

நிறுவன நிகழ்வுகள்

1992

1999

2003

  • மே: சின்டிரில்லியம் சாப்ட்வேர் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தி, அடோப் ஆடிஷனை (Adobe Audition) தனது தயாரிப்புகள் பட்டியலில் இணைத்தது.

2004

  • டிசம்பர்: 3D கூட்டு மென்பொருள் உருவாக்கும் ஒ கே ஒய் ஜீ எஸ். ஏ. (OKYZ S.A.) என்ற பிரான்சு நிறுவனத்தை கையகப்படுத்தியது. இந்த கையாக்கம், 3D தொழிற்நுட் அறிவை அடோப் இன்டலிஜன்ட் டாகுமென்ட் பிளாட்பார்ம்மில் இணைக்க உதவியது.

2005

படிமம்:Adobe formerly macromedia.png
"முன்பு மேக்ரோமீடியா" சின்னமாக இருந்தது

2007

  • ஜனவரி: அடோப் போட்டோஷாப் லைட் ரூம் என்பதை வெளியிட்டு, நிழற்படம் எடுப்பவர்களுக்கு அதன் டிஜிட்டல் உருவங்களை நிர்வகிக்கவும், புகைப்படம் எடுத்த பின் அதில் பணியாற்றுவதை எளிமையாக்கவும் உதவி செய்தது. இந்தத் தயாரிப்பு, பண்படுத்தப்படாத உருவங்களை எடிட் செய்ய உதவும் ஆப்பிளின் அபெர்ச்சர் என்பதற்கு போட்டியாக கொண்டு வரப்பட்டது.
  • மே 2007: ஸீன்7 என்பதை கையகப்படுத்தியது, இது உருவ செயலாக்கத்திற்கும், வலையில் பல்வேறு தளங்கள் பயன்படுத்தும் நடைமேடையை காண்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.
  • ஜூலை: அடோப், அடோப் சவுன்ட்பூத்தை வெளியிட்டது. இந்தத் தயாரிப்பு ஏற்கனவே உள்ள அடோப் ஆடிஷனுக்குப் பதிலாக கொண்டு வரப்படவில்லை, ஆடியோவைப் பற்றி அதிக புலமை இல்லாதவர்களும் பணியாற்ற ஒரு சூழல் ஏற்படுத்தி தருவதற்காகக் கொண்டு வரப்பட்டது.
  • ஆகஸ்ட் 3, 2007: ஆத்தர்வேர் என்ற "எலக்ட்ரானிக் முறையில் கற்றலை எளிதாக்கி நிறுவன வலைப்பின்னல், சிடி/டிவிடி மற்றும் வலைக்குப் பயன்படும் விஷுவல் படைப்பாக்க கருவி உருவாக்கத்தை நிறுத்தப் போவதாக" அறிவித்தது. ஆத்தர்வேர், மேக்ரோமீடியா/அடோப் சேர்க்கையின் போது கையகப்படுத்திய உருவாக்க கருவிகளில் ஒன்று. இதனை அடோப் கேப்டிவேட் பதிலீடு செய்தது.
  • அக்டோபர் 2007: ஆன்லைன் வார்த்தை செயலாக்கியான பஸ்வோர்ட்டுடன் (Buzzword) விர்ச்சுவல் யுபிக்குட்டியை கையகப்படுத்தியது.
  • நவம்பர் 12, 2007: சி இ ஒ, ப்ரூஸ் ஷிசென் (Bruce Chizen) தனது பதவியிலிருந்து விலகினார். டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து, அவருக்கு பதிலாக ஷாந்தனு நாராயண், அடோப்பின் தற்போதைய தலைவர் மற்றும் தலைமை செயற்பாட்டு அதிகாரியாகப் பதவியேற்றார். ப்ரூஸ் ஷிசென் அடோபின் அவைத் தலைவர்கள் குழுவில் அவரது சேவைக்காலம் முடியும் வரை பணியாற்றிய பின், 2008 நிதியாண்டு முடியும் வரை திட்ட ஆலோசகராக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2008

  • ஏப்ரல்: அடோப், அடோப் மீடியா பிளேயரை வெளியிட்டது. பல்வேறு வீடியோக்கள் மற்றும் கையேடுகள், பொழுதுபோக்கு அல்லது பயிற்சி செய்ய உதவும் வகையில் உள்ளது.
  • 27 ஏப்ரல்: அடோப் ட்ரீம்வீவருக்காக, தனது கோ லைவ் என்ற எச்டிஎம்எல் (HTML)/ வலை உருவாக்க மென்பொருள் தயாரிப்பதையும் விற்பனை செய்வதையும் நிறுத்தி விட்டது. அடோப் கோ லைவ் பயன்படுத்துபவர்களுக்கு, அவர்கள் ட்ரீம் வீவர் வாங்கினால் விலையில் தள்ளுபடி அளித்ததோடு, கோ லைவ் பயன்படுத்தி வருபவர்களுக்கு ஆன்லைன் கையேடுகள் மற்றும் கோ லைவ் மென்பொருளிலிருந்து ட்ரீம் வீவருக்கு வலை தளத்தை மாற்ற உதவியும் அளித்து வந்தது.
  • 1 ஜூன்: அடோப் இணைந்து பணியாற்றுவதற்கு ஏற்ற வலைப் பயன்பாடுகளின் தொகுப்பு கொண்ட Acrobat.com என்பதை வெளியிட்டது.[10]
  • வடிவமைத்தல், வலை, தயாரிப்பு பிரிமீயம் மற்றும் மாஸ்டர் தொகுப்பு கொண்ட கிரியேட்டிவ் சுயிட் 4 என்பதை அக்டோபர் 2008 ஆம் ஆண்டு பல்வேறு விலை மதிப்பில் ஆறு வித பதிப்புகளுடன் கொண்டு வந்தது, இது யூ எஸ் டாலர் மதிப்பில் 1,700 முதல் 2,500[11] வரையும் பயன்பாடுகளை தனித் தனியாக வாங்கும் வகையிலும் இருந்தது.[12] விண்டோஸ் பதிப்பில் வெளி வந்த போட்டோ ஷாப் 64-பிட் செயலாக்கத்தில் இருந்தது.[12]
  • டிசம்பர் 3, 2008: அடோப் நலிந்த பொருளாதாரச் சூழலைக் காரணம் காட்டி தனது 600 (பல்வேறு நாடுகளில் பணியாற்றுபவர்களில் 8 சதவீதம்) பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது.

2009

  • கிரியேட்டிவ் சுயிட் 4 தொகுப்பு அதிக அளவு விற்பனையாகவில்லை.[13]
  • ஆகஸ்ட் 29 - அடோப் பிசினஸ் கேடலிஸ்ட் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியது.[14]
  • செப்டம்பர் 15 - அடோப் ஆம்னிச்சரை கையகப்படுத்தியது.[15]
  • நவம்பர் 10 - அடோப் 680 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.[16]

2010

  • அடோப், சைனாவில் நிர்வகித்து வரும் கூட்டு நிறுவன கட்டமைப்புக்கு எதிராக நடந்த "ஒருங்கிணைந்த தாக்குதலைப்" பற்றி விசாரித்து வருவதாக அறிவித்தது.[17] இதே தாக்குதல் கூகுள் மற்றும் மேலும் 20 நிறுவனங்களுக்கு எதிராகவும் நடைபெற்றது.

தலைமை நிர்வாகம்

நிர்வாகக் குழு [18]
சார்லஸ் எம். ஜெஸ்க் (Charles M. Geschke) அவையின் இணை இயக்குனர்
ஜான் இ. வார்னாக் (Charles M. Geschke) அவையின் இணை இயக்குனர்
ஷாந்தனு நாராயண் (Shantanu Narayen) தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி
கரேன் காட்டில் (Karen Cottle) மூத்த துணைத் தலைவர், பொது ஆலோசகர் மற்றும் நிர்வாக காரியதரிசி
மார்க் கேரெட் (Mark Garrett) நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி
டானா மோரிஸ் (Donna Morris) மூத்த துணைத் தலைவர், மனித வளம்
கெவின் லின்ச் (Kevin Lynch) மூத்த துணைத் தலைவர்: அனுபவம் & தொழிற்நுட்ப குழு, தலைமை தொழிற்நுட்ப அதிகாரி

தயாரிப்புகள்

அடோப்பின் தயாரிப்புகளாவன:

நிதிசார் தகவல்

1986 ஆம் ஆண்டு அடோப் சிஸ்டம்ஸ் நாஸ்டாக்கில் (NASDAQ) நுழைந்தது. 2006 ஆம் ஆண்டில் அடோப்பின் வருமானம் $2.575 பில்லியன் யூ எஸ் டாலர்கள் (USD).[19]


பிப்ரவரி 2007 ஆம் ஆண்டின் படி, அடோப்பின் சந்தை முதலாக்கம் $23 பில்லியன் யூ எஸ் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது; ஆகஸ்ட் 2007 ஆம் ஆண்டின்படி, இதனுடைய தொழிற் பங்கு நாஸ்டாக்கில் $40 யூ எஸ் டாலர்களுக்கும், பி/இ விகிதம் 49க்கும் மற்றும் இபிஎஸ் $0.80க்கும் விற்பனையாகிக் கொண்டிருந்தது.[19]

மார்ச் 2008 ஆம் ஆண்டின்படி, அடோப்பின் சந்தை முதலாக்கம் தோராயமாக $18 பில்லியன் யூ எஸ் டாலர்களாக இருந்தது; இதனுடைய தொழிற் பங்கு நாஸ்டாக்கில் $33 யூ எஸ் டாலர்களுக்கும், பி/இ விகிதம் 27க்கும் மற்றும் இபிஎஸ் $1.21க்கும் விற்பனையாகிக் கொண்டிருந்தது.[19]

வருவாய்

2000 ஆம் ஆண்டு வரிசையில்

ஆண்டு வருவாய்
2008 $3.58 பில்லியன் [20]
2007 $3.158 பில்லியன் [21]
2006 $2.575 பில்லியன்[22]
2005 $1.966 பில்லியன்[22]
2004 $1.667 பில்லியன்[23]
2003 $1.295 பில்லியன்[24]
2002 $1.165 பில்லியன்[24]
2001 $1.230 பில்லியன்[25]
2000 $1.156 பில்லியன்[26]

1990 ஆம் ஆண்டு வரிசையில்

நிதியாண்டு வருவாய்
1999 $1.015 பில்லியன்[26]
1998 $895 மில்லியன்[27]
1997 $912 மில்லியன்[27]
1996 $787 மில்லியன்[27]
1995 $762 மில்லியன்[27]
1994 $676 மில்லியன்[27]

அடோபின் நிதியாண்டு டிசம்பர் முதல் நவம்பர் வரை செல்லும். உதாரணமாக, 2007 ஆம் வருட நிதியாண்டு நவம்பர் 30, 2007-இல் முடிவடைந்தது.

விருதுகள்

1995 ஆம் ஆண்டு, பார்ச்சூன் (Fortune) அடோபினை பணியாற்ற மிக உன்னதமான இடமாக தனது கணக்கெடுப்பில் குறிப்பிட்டுள்ளது. அடோப் 2003 ஆம் ஆண்டு பணியாற ஐந்தாவது சிறந்த யூ எஸ் நிறுவனமாகவும், 2004 ஆம் ஆண்டு ஆறாவதாகவும், 2007 ஆம் ஆண்டு முப்பத்தி ஒன்றாவதாகவும், 2008 ஆம் ஆண்டு நாற்பதாவதாகவும், 2009 ஆம் ஆண்டில் பதினொன்றாவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.[28] மே மாதம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அடோப் சிஸ்டம்ஸ் இந்தியா, இந்தியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த இடங்களில், பத்தொன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.[29] அக்டோபர் 2008 ஆம் ஆண்டு, அடோப் சிஸ்டம்ஸ் கனடா இன்க், "கனடாவின் முதல் 100 தொழிலதிபர்களில்" ஒன்றாக மீடியாகார்ப் கனடா இன்க்கால் பெயரிடப்பட்டது, இதனைப் பற்றிய அறிக்கை மெக்லீன் பத்திரிகையிலும் வெளிவந்தது.

விமர்சனம்

அடோப் அதனது மென்பொருளுக்கு நிர்ணயிக்கும் விலை குறித்து விமர்சனங்களுக்கு[30][31][32] உள்ளாகியுள்ளது, அது தனது தயாரிப்புகளை உள்ளூர் சந்தையில் அளிக்கும் விலையை விட இருமடங்கு அதிகமாக[33] வைத்து வெளிநாடுகளில் விற்பதாக கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 2009 ஆம் ஆண்டு, அடோப் தனது தாயரிப்புகளின் விலையை யூ கே வில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.[34]

மேலும் காண்க

குறிப்புகள்

  1. Adobe - Company Overview - Hoover's
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Financial Tables". Adobe Systems Investor Relations. பார்க்கப்பட்ட நாள் 2009-01-23.
  3. 3.0 3.1 3.2 3.3 "Adobe Fast Facts" (PDF). 2009-03-09. பார்க்கப்பட்ட நாள் 2009-04-04.
  4. Hormby, Thomas. "How Adobe's Photoshop Was Born". SiliconUser. பார்க்கப்பட்ட நாள் June 12, 2007. {{cite web}}: Cite has empty unknown parameters: |month= and |coauthors= (help)
  5. அடோப் பற்றி - பத்திரிக்கைச் செய்திகள் - உடனடி வெளியீட்டுக்காக
  6. ஹூவரின் - அடோப் - நிறுவனம் ஒரு பார்வை
  7. Adobe(April 18, 2005). "Adobe to acquire Macromedia". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-03-31.
  8. Macromedia(April 18, 2005). "ADOBE TO ACQUIRE MACROMEDIA". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2007-03-31.
  9. Graham, Jefferson (2005-04-18). "Adobe buys Macromedia in $3.4B deal". USA Today. http://www.usatoday.com/money/industries/technology/2005-04-18-adobe-macromedia_x.htm?csp=34. பார்த்த நாள்: 2007-03-31. 
  10. Erik Larson (2008-06-01). "Welcome to Acrobat.com — Work. Together. Anywhere". Adobe. பார்க்கப்பட்ட நாள் 2008-06-02.
  11. "Adobe launches Creative Suite 4; Likely to top low expectations". ZDNet (CBS). September 23, 2008. http://blogs.zdnet.com/BTL/?p=10127. பார்த்த நாள்: 2008-09-23. 
  12. 12.0 12.1 Carlson, Jeff (September 23, 2008). "Adobe Announces Vast Creative Suite 4". TidBITS. http://db.tidbits.com/article/9782. பார்த்த நாள்: 2008-09-23. 
  13. http://www.menafn.com/qn_news_story.asp?StoryId={71506579-2A79-4443-B4C6-91AFEBB869A9}
  14. http://www.adobe.com/special/businesscatalyst/
  15. http://www.businesswire.com/portal/site/google/?ndmViewId=news_view&newsId=20090915006569&newsLang=en
  16. http://online.wsj.com/article/SB10001424052748704402404574528174100385780.html
  17. http://www.dailytech.com/Adobe%20Targeted%20by%20Cyber%20Attack%20from%20China/article17387.htm
  18. http://www.adobe.com/aboutadobe/pressroom/pdfs/fastfacts.pdf
  19. 19.0 19.1 19.2 "Adobe Systems Incorporated Company Profile". Google Finance.
  20. Q4 மற்றும் FY2008 வருமானம் பத்திரிக்கைச் செய்தி
  21. Macsimum செய்தி - அடோப் தனது சாதனை வருமானத்தை அறிவித்தது
  22. 22.0 22.1 adobe.com
  23. adobe.com
  24. adobe.com
  25. 26.0 26.1 adobe.com
  26. 27.0 27.1 27.2 27.3 27.4 adobe.com
  27. "100 Best Companies to Work For 2009".
  28. "Best Places to work in India".
  29. "Photographers take stand against Adobe".
  30. "Adobe responds to CS4 pricing criticism".
  31. "Adobe defends CS4 pricing".
  32. "Adobe responds to customer protests against perceived unfair pricing".
  33. http://www.pcpro.co.uk/news/254173/adobe-hikes-uk-prices-by-10.html

மேற்குறிப்புகள்

புற இணைப்புகள்

வார்ப்புரு:Adobe Systems வார்ப்புரு:NASDAQ-100 வார்ப்புரு:Plugins

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடோபி_சிஸ்டம்ஸ்&oldid=524154" இலிருந்து மீள்விக்கப்பட்டது