மீனவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி ****திருத்தம்**** ... .
சி ~AntanO4task பக்கம் தமிழ் மீனவர்கள் என்பதை மீனவர் என்பதற்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

19:19, 23 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்

தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும், (1076 கி.மீ.) [1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ளன. கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனப்படுகிறது. தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கியமானவர்கள் ஆகும்.

தமிழ்நாடு கடற்கரை

தமிழ்நாடு, 1076 கி.மீ நீள கடல்கரையை கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007-2008, கணக்கெடுப்பின் படி, மீன்பிடி 559,360 மெட்ரிக் டன்கள் ஆகும்.

தமிழ்நாட்டின் கடலோர நீளம்:[2]

கடலோரம் இடம் நீளம் கி.மீ
கோரமண்டல் கடற்கரை சென்னை முதல் கோடியக்கரை வரை 357.2
பாக் சலசந்தி கோடியக்கரை முதல் பாம்பன் வரை 293.9
மன்னார் வளைகுடா பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை 364.9
மேற்கு கடற்கரை கன்னியாகுமரி முதல் நீரோடி 60.0

வரலாறு

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன.[3]

சமூக அமைப்பு

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

  1. வலையர்
  2. பரவர்
  3. கடையர்

வலையர்

வலையைவைத்து மீன்பிடித்ததால் அவர்கள் வலையர் எனப்பட்டனர்.

பரவர்

பரவலாக கடலில் பரந்து விரிந்து சென்று மீன்பிடித்ததால் அவர்கள் பரதவர் எனப்பட்டனர்.

கடையர்

இவர்கள் கரைஓரங்களில் மீன்பிடித்ததாலும் கடல் சார்ந்த கரைதொழில்கள் செய்ததால் (கரைவலை, சுண்ணாம்பு எடுத்தல், சங்கு சம்பந்தப்பட்ட தொழில்கள், கடல் பூச்சிகளை காயவைத்து விற்பனை) போன்ற தொழில்கள் செய்ததால் கரையர் எனப்பட்டனர். பின்பு கரையர் மருவி கடையர் எனவாகியது. இதற்கு சான்றாக இன்னும் இந்த இனமக்களில் உட்பிரிவாக சுண்ணாம்புகடையர், பூச்சிகடையர் எனபிரிவுகள் உள்ளனர், இன்றளவும் இம்மக்கள் கடற்கரை ஓரங்களில் வசித்துவருகின்றனர் இவர்கல் கரையர் எனப்பட்டதற்கு சான்றாக இராமேஸ்வரத்தில் கரையாதெரு என்ற ஊர் உள்ளது. (கரையர் தெரு கரையாதெருவாக மருவியது).

தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள்

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.[4]

கடற்கரைக் காட்சிகள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

குறிப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனவர்&oldid=2555893" இலிருந்து மீள்விக்கப்பட்டது