விக்கிப்பீடியா:கண்ணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: sv:Wikipedia:Etikett (strongly connected to ta:விக்கிப்பீடியா:நற்பண்புகள்)
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 33: வரிசை 33:
[[cs:Wikipedie:Zdvořilost]]
[[cs:Wikipedie:Zdvořilost]]
[[en:Wikipedia:Civility]]
[[en:Wikipedia:Civility]]
[[fr:Wikipédia:Relations sociales entre Wikipédiens]]
[[hu:Wikipédia:Civilizált viselkedés]]
[[hu:Wikipédia:Civilizált viselkedés]]
[[sr:Википедија:Учтивост]]
[[sr:Википедија:Учтивост]]

23:25, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


எப்போதும் உதவிட முனைப்பாகவும் தீங்கு செய்யாதிருக்கவும் முயலுங்கள். விக்கிப்பீடியாவை உருவாக்குவதில் அனைவருக்கும் பங்குண்டு. கருத்து வேறுபாடுகள் தோன்றும்போது விவாதங்கள் நிகழ்வது இயல்பே. இவை கண்ணியத்துடன் நிகழ்வது இன்றியமையாதது. ஆனால் விவாதங்களின் தீவிரத்தில் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.விக்கிப்பீடியாவின் செயல்பாட்டிற்கு இப்போக்கு ஊறு விளைவிக்கும்:

  • கண்ணியமற்ற செயல்பாடு பிற பயனர்களை துயரமடையச் செய்யும். அவ்வாறு துயருற்ற பயனர்கள் பங்களிக்காது விலகக் கூடும்.
  • சிலரை கோபமடையச் செய்யும். கோபமடைந்தவர்கள் உதவிகரமாக இல்லாது பிறரையும் கோபமடையச் செய்வர்.
  • கோபமுற்றவர் பிறரின் காரணங்களை கேட்க ஆயத்தமாக இருக்க மாட்டார்கள். இதனால் ஓர் உடன்பாடு காணுதல் மேலும் கடினமாகும்.
  • ஒருவர் ஏற்படுத்திய மாற்றங்களை மட்டுமே பேச வேண்டும்,அவர்களைப் பற்றியல்ல.
  • எப்போதுமே கண்ணியக்குறைவோடு செயல்பட்டால் தடை செய்யப் படலாம்.

எடுத்துக்காட்டுகள்

  • ஒருவரின் இனம்,பால்,குழு,நாடு,மொழி மற்றும் மதம் குறித்த கீழான சொற்களைக் கூறுதல்.
  • பிற பயனரைக் குறித்து பொய் கூறுதல்.
  • கடுமையாக நடந்து கொள்ளுதல்.
  • தொகுத்தல் சுருக்கங்களில் பிறரின் தொகுத்தல் குறித்து இழிவாகக் கூறுதல்(காட்டு:"மட்டமான தமிழ் பெயர்ப்பு," "அறியாது தொகுத்தல்")
  • நீங்கள் இன்னார்தான் செய்தார் என அறியாமலே அவரை குறை கூறுவது.
  • பிறரின் பயனர்பக்கத்தை சிதைப்பது.
  • பயனர்களின் மொழியறிவு அல்லது இலக்கணம் குறித்து எள்ளுவது
  • ஏதேனும் சிறு தவறு செய்த பயனரை தடை செய்ய வேண்டுவது.
  • "ஒன்றும் தெரியாதவர் போன்று நடிப்பது"

வழிகாட்டல்கள்

உதவிகரமாக இல்லாதிருப்பதை தடுக்கும் வண்ணம் இவற்றை செயல்படுத்தலாம்:

  • கடுமையாகவும் மரியாதையின்றியும் உள்ள மறுமொழிகளுக்கு பதில் கூறாதிருத்தல்.
  • விக்கிப்பீடியாவிலிருந்து சிறு விடுப்பு எடுத்துக் கொள்ளுதல்.
  • இன்னா செய்தாருக்கும் நன்மை பயக்கும் வண்ணம் செயல்படல்.