மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ckb:کێو
சி r2.7.3) (Robot: Modifying ang:Beorȝ to ang:Beorg
வரிசை 38: வரிசை 38:
[[am:ተራራ]]
[[am:ተራራ]]
[[an:Montanya]]
[[an:Montanya]]
[[ang:Beorȝ]]
[[ang:Beorg]]
[[ar:جبل]]
[[ar:جبل]]
[[arc:ܛܘܪܐ]]
[[arc:ܛܘܪܐ]]

08:03, 4 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சுவிசு ஆல்ப்சில் உள்ள "மட்டர்ஹோர்ன்"
ஐந்து விரல் மலை, அசர்பைசான்

மலை என்பது ஒரு குறித்த நிலப்பகுதியில் அதன் சுற்றாடலுக்கு மேலே உயர்ந்து காணப்படும் ஒரு பாரிய நிலவடிவம் ஆகும். இதற்கு ஒரு உச்சி இருக்கும். மலை, குன்று ஆகிய சொற்கள் சில வேளைகளில் ஒன்றுக்கு ஒன்று மாற்றீடாகப் பயன்பட்டாலும், மலை, குன்றைவிடக் குறைவான உயரம் உள்ளதாகவும், கூடிய சரிவு கொண்டதாகவும் இருக்கும். மலை தொடர்பான கல்வித்துறை மலையியல் எனப்படுகிறது.

வரைவிலக்கணம்

மலை என்பதற்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வரைவிலக்கணம் எதுவும் கிடையாது. உயரம், கனவளவு, புறவடிவம், சரிவு, இடைவெளி, தொடர்ச்சி என்பன மலை என்பதை வரையறுப்பதற்கான அடிப்படைகளாகப் கொள்ளப்படுகின்றன. "பிரமிப்பூட்டத்தக்கதாக, அல்லது குறித்துச் சொல்லத்தக்க உயரத்துக்கு, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏறத்தாழச் சடுதியாக இயற்கையாகவே உயர்ந்திருக்கும் நில மேற்பரப்பு" என்று ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி, மலைக்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது.

ஒரு நிலவடிவம் மலையாகக் கொள்ளப்படுகிறதா என்பது உள்ளூர் மக்கள் அதனை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதிலேயே தங்கியுள்ளது. கலிபோர்னியாவின் சான்பிரான்சிசுக்கோவில் உள்ள "டேவிட்சன் மலை" 300 மீட்டர் (980 அடி) மட்டுமே உயரம் கொண்டது ஆயினும் அது மலை எனப்படுகிறது. இதுபோலவே ஒக்லகோமாவின் லோட்டனுக்குப் புறத்தேயுள்ள "இசுக்காட் மலை" 251 மீட்டர் (823 அடி) மட்டுமே உயரமானது. யாழ்ப்பாணக் குடாநாட்டில், கடல் மட்டத்திலிருந்து சற்றே உயர்ந்திருக்கும் பகுதி கீரிமலை என்று அழைக்கப்படுவதையும் குறிப்பிடலாம்.

மலை என்பதற்குப் பின்வரும் வரைவிலக்கணங்கள் புழக்கத்தில் உள்ளன:

  • அடிவாரத்தில் இருந்து குறைந்தது 2,500 மீட்டர் (8,202 அடி) உயரம் கொண்டது.
  • அடிவாரத்தில் இருந்து 1,500 மீட்டர்களுக்கும் (4,921 அடி) 2,500 மீட்டர்களுக்கும் (8,202 அடி) உயரத்துக்கு மேற்பட்டும், 2 பாகைகளுக்கு மேற்பட்ட சரிவும் கொண்டது.
  • அடிவாரத்தில் இருந்து 1,000 மீட்டர்களுக்கும் (3,281 அடி) 1,500 மீட்டர்களுக்கும் (4,921 அடி) உயரத்துக்கு மேற்பட்டும், 5 பாகைகளுக்கு மேற்பட்ட சரிவும் கொண்டது.

ஆசியாவின் 64% நிலப்பகுதியும்; ஐரோப்பாவின் 25% நிலப்பகுதியும்; தென்னமெரிக்காவின் 22% உம்; ஆசுத்திரேலியா, ஆப்பிரிக்காக் கண்டங்களில் முறையே 17%, 3% ஆகிய பகுதிகளும் மலைகளினால் மூடப்பட்டுள்ளன. மொத்தமாக உலகின் 24% நிலப்பகுதி மலைகளாக உள்ளன. உலகின் 10% மக்கள் மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். உலகின் பெரும்பாலான ஆறுகள் மலைப் பகுதிகளிலேயே உருவாகின்றன என்பதுடன் உலக மக்களில் அரைப் பகுதியினர் நீருக்காக மலைகளிலேயே தங்கியுள்ளனர்.

தமிழர் பண்பாட்டில் மலை

பெருமாள் மலை

தமிழ்த் திணையியலின் படி, மலையும் மலை சார்ந்த பகுதிகளும் குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை&oldid=1338167" இலிருந்து மீள்விக்கப்பட்டது