பல கடவுட் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: zh:多神論
சி r2.6.2) (தானியங்கி இணைப்பு: tl:Politeismo
வரிசை 76: வரிசை 76:
[[sr:Политеизам]]
[[sr:Политеизам]]
[[sv:Polyteism]]
[[sv:Polyteism]]
[[tl:Politeismo]]
[[tr:Çoktanrıcılık]]
[[tr:Çoktanrıcılık]]
[[uk:Політеїзм]]
[[uk:Політеїзм]]

07:37, 17 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

திருமாலின் பத்து அவதாரங்கள். இந்து சமயத்தில் பல கடவுளர்கள் உள்ளனர். திருமால் அவர்களுள் முக்கியமான ஒரு கடவுள்.

பல கடவுட் கொள்கை (Polytheism) என்பது, பல கடவுள்களில் நம்பிக்கை வைத்திருக்கும் அல்லது பல கடவுள்களை வணங்கும் கடவுட் கொள்கையாகும். பழங்காலத்தைச் சேர்ந்தவையும், தற்காலத்தனவுமான பல சமயங்கள் "பல கடவுட் கொள்கை" உடையனவாக இருக்கின்றன. இந்துசமயம், ஷின்டோ சமயம், சீன நாட்டார் சமயம், பண்டைக் கிரேக்க சமயங்கள் என்பன இத்தகையவையாகும்.

பல கடவுட் கொள்கை உடையவர்கள் தாம் நம்பும் எல்லாக் கடவுளரையுமே ஒரே நிலையில் வைத்து வணங்குவதில்லை. அக் கடவுளர்களில் சிலருக்கே கூடிய முக்கியத்துவம் இருப்பது வழக்கம். சில சமயங்களில் ஒரு கடவுளுக்கு முழுமுதற் கடவுள் என முதன்மை கொடுத்து வணங்குவதும் உண்டு. எந்தக் கடவுளுக்கு முதன்மை என்ற அடிப்படையில் ஒரு சமயத்திலேயே பல பிரிவுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்து சமயத்தில், சிவனை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் பிரிவு சைவம் எனவும், விஷ்ணுவுக்கு முதன்மை கொடுக்கும் பிரிவு வைணவம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது போலவே, சக்தியாகிய தாய்க் கடவுள், பிள்ளையார் (கணபதி), முருகன் (குமரன்) போன்ற கடவுளர்களை முதன்மைப் படுத்தும் பிரிவுகள் முறையே சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் ஆகிய பெயர்களில் வழங்குகின்றன. குறிப்பிட்ட காலங்களில் சிறப்பாகச் சில கடவுளருக்கு முக்கியத்துவம் கொடுத்து வணங்கும் நிலையும் உண்டு.

பல கடவுட் கொள்கை சார்ந்த சமயங்களில் காணப்படும் கடவுளருக்கு அவ்வப் பண்பாடுகளின் தொன்மங்களில் இடம் உண்டு. இவர்கள் மனித இயல்புகளுடனும், பல்வேறுபட்ட தகுதிகளுடனும், மேலதிகமாகத் தனிப்பட்ட, சக்திகள், இயலுமைகள், அறிவு, நோக்கு என்பவற்றுடன் கூடியவர்களாக இத் தொன்மங்களில் காட்டப்படுகின்றனர்.

பல கடவுட் கொள்கையைப் பல இனக்குழுச் சமயங்களில் காணப்படும் ஆன்மவாத நம்பிக்கைகளில் இருந்து தெளிவாகப் பிரித்து அறிய முடியாது. "பல கடவுட்" சமயங்களில் காணப்படும் கடவுள்கள் பல வேளைகளில் மூதாதையர், பூதங்கள் போன்ற இயல்புகடந்த தன்மையைக் கொண்டவர்களினதோ அல்லது ஆவிகளினதோ தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. இக் கடவுள்கள் வானம் சார்ந்தவர்களாகவும், பூமி சார்ந்தவர்களாகவும் பிரிக்கப்படுவதும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல_கடவுட்_கொள்கை&oldid=1278290" இலிருந்து மீள்விக்கப்பட்டது