விக்கிப்பீடியா:இணக்க முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: si:විකිපීඩියා:Consensus
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: as, kk, si, uk
வரிசை 51: வரிசை 51:


[[ar:ويكيبيديا:توافق]]
[[ar:ويكيبيديا:توافق]]
[[as:ৱিকিপিডিয়া:ঐকমত্য]]
[[az:Vikipediya:Konsensus]]
[[az:Vikipediya:Konsensus]]
[[be:Вікіпедыя:Кансэнсус]]
[[be:Вікіпедыя:Кансэнсус]]
வரிசை 72: வரிசை 73:
[[ja:Wikipedia:合意形成]]
[[ja:Wikipedia:合意形成]]
[[ka:ვიკიპედია:კონსენსუსი]]
[[ka:ვიკიპედია:კონსენსუსი]]
[[kk:Уикипедия:Консенсус]]
[[ko:위키백과:총의]]
[[ko:위키백과:총의]]
[[lt:Vikipedija:Konsensusas]]
[[lt:Vikipedija:Konsensusas]]
வரிசை 85: வரிசை 87:
[[ru:Википедия:Консенсус]]
[[ru:Википедия:Консенсус]]
[[sh:Wikipedia:Konsenzus]]
[[sh:Wikipedia:Konsenzus]]
[[si:විකිපීඩියා:පොදු එකඟත්වය]]
[[simple:Wikipedia:Consensus]]
[[simple:Wikipedia:Consensus]]
[[sk:Wikipédia:Konsenzus]]
[[sk:Wikipédia:Konsenzus]]
வரிசை 92: வரிசை 95:
[[tg:Википедиа:Иҷмоъ]]
[[tg:Википедиа:Иҷмоъ]]
[[tr:Vikipedi:Fikir birliği]]
[[tr:Vikipedi:Fikir birliği]]
[[uk:Вікіпедія:Консенсус]]
[[vi:Wikipedia:Đồng thuận]]
[[vi:Wikipedia:Đồng thuận]]
[[yi:װיקיפּעדיע:קאנסענסוס]]
[[yi:װיקיפּעדיע:קאנסענסוס]]

00:00, 22 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

குறுக்கு வழி:
WP:IM
WP:CONSENSUS
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


இணக்க முடிவு என்பது ஒரு குழு முடிவெடுக்கும் முறை. ஒரு குழுவின் அனைத்து அல்லது பலரின் இணக்கத்தோடு எடுக்கப்படும் முடிவே இணக்க முடிவு ஆகும். இம் முறையை தேர்தல் முடிவு, தனியொருவர் முடிவு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபாட்டை வரையறுக்கலாம்.

இதுவரை தமிழ் விக்கிபீடியா ஒரு சிறிய (<40) பயனர் குழுவினாலேயே முன்னெடுக்கப்பட்டதாலும், தெளிவான குறிக்கோளும் புரிந்துணர்வும் நம்மிடம் இருப்பதாலும் மிகப்பல விடயங்களுக்கு இணக்க முடிவு எட்ட முடிகின்றது. இப்போது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியானது இணக்க முடிவின் தேவையையும் வழிமுறையையும் தெளிவாக்கி செழுமைப்படுத்த உந்தியிருக்கின்றது.

எங்கே இணக்க முடிவு தேவை?

முக்கிய சிக்கலான முடிவுகளுக்கே நாம் பாடு்பட்டு இணக்க முடிவு காண வேண்டியிருக்கும். இது வரை த.வி. பெரும்பாலும் ஒத்துப்போகும் தன்மை இருக்கின்றது. த.வி. கட்டமைப்பை, தொடர் செயற்பாட்டை, குறிக்கோளுக்கு இடையூறு தரக் கூடிய விடயங்கள், எதிர்கால திட்ட முடிவுகள், மேல்-நிலை இணக்க முடிவுகள் தேவைப்படும் முடிவுகள், நிர்வாக முடிவுகள் ஆகியவற்றுக்கு இணக்க முடிவு தேவைப்படும்.

எங்கே இணக்க முடிவுகள் தேவையில்லை?

  • மேல்-நிலை இணக்க முடிவின் கீழ் தேர்தல் வழி முடிவு எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட விடயங்களில்.
  • அவசர முடிவுகள் தேவைப்படும்பொழுது, எ.கா. விசமிகள் தாக்குதல்.
  • தெளிவான, அதிக முக்கியத்துவம் இல்லாத கீழ் நிலை முடிவுகளுக்கு, எ.கா. பரிசோதனை இடுகைகளை நீக்குதலில்.
  • ஒரு குறிப்பிட்ட விசயத்துக்கு ஆதரவு திரட்ட விக்கிக்கு புற தளங்களிலிருந்து ஆதரவு திரட்டி கையாட்களை ஒருவர் விக்கிக்கு அழைத்து வரு சூழ்நிலையில்

இணக்க முடிவு தமிழ் விக்கிபீடியாவிற்கு ஏன் உகந்தது

  • தமிழ் விக்கிபீடியா ஒரு குழுச் செயற்பாடு. இங்கே நமக்கு ஒரு தெளிவான குறிக்கோள் உண்டு. எளிய தமிழில் தரமான கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே அந்தக் குறிக்கோள். அக்குறிக்கோளை செயலாக்கும்பொழுது எழும் சிக்கல்களை அல்லது பிரச்சினைகளை தீர்க்க நாம் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. அது இணக்க முடிவாக அமையும் பொழுது நாம் பிளவுபடாமலும் முரண்படாமலும் முன்னேற்றப் பாதையில் செல்வதை உறுதி செய்ய கூடியதாக இருக்கின்றது.
  • தமிழ் விக்கிபீடியா இன்னும் ஒரு பெரிய குழு இல்லை. எனவே விரைவாக இணக்க முடிவுகளை எட்டுவது நடைமுறையில் இயலுகின்றது.
  • நிர்வாகிகள், அதிகாரிகள் என்று பொறுப்புகளை ஏற்றுப் பயனர்கள் மேலதிக அனுகூலங்களுடன் செயற்பட்டாலும், அனைவரும் தன்னார்வப் பயனர்களே. இங்கு மேல்-கீழ் அடுக்கமைவு கட்டமைப்பு கிடையாது. அதிகாரம் செலுத்தும் தலைமைத்துவமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. நல்லுறவோடு நம்பிக்கையின் அடிப்படையிலான செயற்பாட்டிலேயே த.வி. செயற்பாடுகள் தங்கியுள்ளன. இந்த சூழமைவு இணக்க முடிவுக்கு உகந்தது.
  • இணக்க முடிவு வழிமுறை பயனர்களுக்கிடையான தொடர்புகளையும் புரிதல்களையும் பலப்படுத்தி விரிவாக்க உதவும்.

இணக்க முடிவு வழிமுறை

Flowchart of basic consensus decision-making process.
  • முடிவு எடுக்கப்படவேண்டிய ஒரு கருத்தை அல்லது சிக்கலை விவரித்தல்.
  • எடுக்கப்படக் கூடிய அனைத்து முடிவுகளையும் அலசுதல்.
  • அனைவருடைய பார்வைகளும் கருத்துகளும் இயன்றவரை முன்வைக்கப்படுதலையும் கேட்கப்படுதலையும் உறுதிசெய்தல்.
  • ஒவ்வொரு முடிவின் நன்மை தீமைகளையும் அல்லது வரவு செலவுகளையும் ஆராய்ந்து, மறுப்புகள் மாற்றுக் கருத்த்க்கள் இருந்தால் திருத்தி சிறந்த முடிவுகளைத் தெரிவு செய்தல்.
  • பாரிய எதிர்ப்பு அல்லது மறுப்புகள் இல்லாவிட்டால் ஒத்துழைப்பைக் கோருதல்.
  • இணக்கத்தை உறுதிப்படுத்தல்.

இணக்க முடிவு நோக்கி விமர்சனங்கள்

  • சிறுபான்மை ஒத்துப்போகாதோரால் அல்லது தனிநபர்களால் கூட பெரும்பான்மையினரின் முயற்சிகள் தடைப்பட்டு போகக்கூடிய சாத்தியக்கூறு.
  • இணக்க முடிவுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால் அதிக நேரம் செலவழிக்க கூடியவர்களே பங்களிக்ககூடியதா இருக்கும். இது ஜனநாய போக்குக்கு சார்பான செயற்பாடு அல்ல.
  • ஒத்துப்போகவேண்டும் என்ற போக்கு இருப்பதால் கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமான விமர்சனங்கள் தடைப்படக்கூடிய சாத்தியக்கூறு.
  • இணக்க முடிவு வழிமுறை சிறுபான்மைக் கருத்துக்கள் நீண்டகாலமாக பெரும்பான்மையினரின் செயற்திட்டங்களை இழுப்பறி செய்ய வழி செய்கின்றது.

இவற்றையும் பார்க்க