புறாத்து ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 31°0′18″N 47°26′31″E / 31.00500°N 47.44194°E / 31.00500; 47.44194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: mn:Евфрат мөрөн
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Евфрат
வரிசை 166: வரிசை 166:
[[jv:Kali Éfrat]]
[[jv:Kali Éfrat]]
[[ka:ევფრატი]]
[[ka:ევფრატი]]
[[kk:Евфрат]]
[[ko:유프라테스 강]]
[[ko:유프라테스 강]]
[[ku:Firat]]
[[ku:Firat]]

23:31, 20 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

புராத்து
அரபு மொழி: الفرات‎: al-Furāt[1], துருக்கியம்: Fırat[1], குர்தியம்: Firat, Syriac: ܦܪܬ‎: Prath, எபிரேயம்: פרתPrat
ஆறு
சிரியாவின் அலபியே என்னும் இடத்துக்கு அருகில் இயுபிரட்டீசு.
பெயர் மூலம்: பழைய பாரசீக உஃபராத்து விலிருந்து இடைகாலப் பாரசீக ஃப்ரட் ஊடாக துருக்கிய ஃபிராட் க்கு[1]
நாடுகள்  ஈராக்,  சிரியா,  துருக்கி
வடிநிலப் பகுதி துருக்கி, சிரியா, ஈராக், சவூதி அரேபியா, குவைத்
கிளையாறுகள்
 - இடம் பலிக், கபுர்
 - வலம் சஜுர்
நகரங்கள் பிரெசிக், அர்-ரக்கா, டெயிர் எசு-சோர், மயாடின், அடித்தா, ரமாடி, அபானியா, ஃபலூஜா, குஃபா, சமாவா, நசிரியா
அடையாளச்
சின்னங்கள்
ஆசாத் ஏரி, கடீசியா ஏரி, அப்பானியா ஏரி
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் முரத் சூ, thurukki
 - உயர்வு 3,520 மீ (11,549 அடி)
Secondary source
 - location கர சூ, துருக்கி
 - உயர்வு 3,290 மீ (10,794 அடி)
Source confluence
 - location கெபான், துருக்கி
 - உயர்வு 610 மீ (2,001 அடி)
கழிமுகம் சாட் அல்-அராப்
 - அமைவிடம் அல்-குர்னா, பாசுரா ஆளுனரகம், ஈராக்
 - ஆள்கூறு 31°0′18″N 47°26′31″E / 31.00500°N 47.44194°E / 31.00500; 47.44194
நீளம் 2,800 கிமீ (1,740 மைல்) அண்ணளவு.
வடிநிலம் 5,00,000 கிமீ² (1,93,051 ச.மைல்) அண்ணளவு.
Discharge for Hīt
 - சராசரி
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
திஜ்லா - புராத்து ஆறுகளின் வடிநிலப் படம் (மஞ்சள் நிறத்தில்)
திஜ்லா - புராத்து ஆறுகளின் வடிநிலப் படம் (மஞ்சள் நிறத்தில்)
திஜ்லா - புராத்து ஆறுகளின் வடிநிலப் படம் (மஞ்சள் நிறத்தில்)
விக்கிமீடியா பொது: புராத்து

புராத்து ஆறு (அரபு மொழி: الفرات‎: al-Furāt, எபிரேயம்: פרת‎: Prat, துருக்கியம்: Fırat, குர்தியம்: Firat) அல்லது இயூபிரட்டீசு ஆறு (/juːˈfreɪtiːz/ (கேட்க), Euphrates) , மேற்காசியாவில் உள்ள ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு ஆறு ஆகும். இப்பகுதியில் ஓடும் டைகிரிசு என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய மெசொப்பொத்தேமியாவை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, சாட்-அல்-அராப் (Shatt al-Arab) என்னும் ஆற்றின் ஊடாகப் பாரசீகக் குடாவில் கலக்கின்றது.

சொற்பிறப்பு

இந்த ஆற்றைப் பற்றிய மிகவும் பழைய குறிப்பு, தெற்கு ஈராக்கில் உள்ள சுருப்பக், நிப்பூர் ஆகிய இடங்களில் கிடைத்த ஆப்பெழுத்து ஆவணங்களில் காணப்படுகிறது. இந்த ஆவணங்கள் கிமு மூன்றாம் ஆயிரவாண்டின் நடுப் பகுதியைச் சேர்ந்தவை. சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணங்களின்படி இந்த ஆற்றின் பெயர் புரானுனா. அக்காடிய மொழியில் இயூபிரட்டீசை புரத்து என அழைத்தனர். பழைய பாரசீக மொழியில் உஃபராத்து என அழைக்கப்பட்ட இந்த ஆற்றை, இடைக்காலப் பாரசீக மொழியில் ஃப்ரட் என்றும், துருக்கிய மொழியில் ஃபிரட் என்றும் அழைத்தனர். இதிலிருந்தே தற்கால ஆங்கிலப் பெயரான இயூஃபிரட்டீஸ் (Euphrates) பெறப்பட்டது. "நல்லது" என்னும் பொருள் கொண்ட பழைய பாரசீக மொழிப் பெயரான உஃபராத்து என்பதைப் பின்பற்றியே கிரேக்கச் சொல்லான Εὐφράτης (இயூஃபிரட்டீஸ்) உருவானது.

பாதை

காரா சூ அல்லது மேற்கு இயூபிரட்டீசும் (450 கிலோமீட்டர் (280 மைல்)), மூரத் சூ அல்லது கிழக்கு இயூபிரட்டீசும் (650 கிலோமீட்டர் (400 மைல்)) சந்திக்கும் இடத்திலிருந்து இயூபிரட்டீசு தொடங்குகிறது. இவ்விடம், துருக்கியில் உள்ள கெபான் என்னும் நகரத்தில் இருந்து, ஆற்றின் போக்குக்கு எதிர்த் திசையில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் உள்ளது. டவூடி, ஃபிரெங்கென் ஆகியோரின் கணக்கீட்டின் படி, மூரத் ஆறு தொடங்கும் இடத்திலிருந்து, இயூபிரட்டீசு ஆறு, டைகிரிசு ஆற்றுடன் இணையும் இடம் வரையிலான மொத்த நீளம் 3000 கிலோமீட்டர்கள் (1,900 மைல்கள்). இதில் 1,230 கிலோமீட்டர்கள் (760 மைல்கள்) துருக்கியின் எல்லைக்குள் உள்ளது. எஞ்சியதில் 710 (440 மைல்கள்) கிலோமீட்டர்கள் சிரியாவிலும், 1,060 கிலோமீட்டர்கள் (660 மைல்கள்) ஈராக்கிலும் உள்ளது. இயூபிரட்டீசு, டைகிரிசு ஆறுகள் இணையும் இடத்தில் இருந்து பாரசீகக்குடா வரையிலான சாட்-அல்-அராப் ஆற்றுப் பகுதியின் நீளத்தை பலரும் வெவ்வேறு அளவினதாகக் கணித்துள்ளனர். இக் கணிப்பீடுகள் 145 - 195 கிலோமீட்டர்கள் (90 - 121 மைல்கள்) வரையில் அமைகின்றன.


காரா சூ, மூரத் சூ ஆகிய ஆறுகள் வான் ஏரிக்கு வட மேற்கில் கடல்மட்டத்தில் இருந்து முறையே 3,290 மீட்டர் (10,790 அடி), 3,520 மீட்டர் (11,550 அடி) உயரங்களில் ஊற்றெடுக்கின்றன. இரண்டும் இணைந்து இயூபிரட்டீசு ஆனபின், கெபான் அணைக்கு அருகில் இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 693 மீட்டர்கள் (2,274 அடிகள்). கெபானில் இருந்து துருக்கி-சிரியா எல்லை வரையிலான 600 கிலோ மீட்டர்களுக்கும் குறைவான தூரத்தில், இந்த ஆறு இன்னொரு 368 மீட்டர்கள் (1,207 அடிகள்) இறங்குகிறது. இயூபிரட்டீசு, மேல் மெசொப்பொத்தேமியச் சமவெளிக்குள் புகுந்த பின்னர், இதன் உயர்வு குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைகிறது. சிரியாவுக்குள் 163 மீட்டர்கள் (535 அடிகள்) வீழ்ச்சி ஏற்படுகின்றது. அதே வேளை இட் (Hīt) என்னும் நகரத்துக்கும், சாட்-அல்-அராப் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆற்றின் உயர மட்டம் 55 மீட்டர்கள் (180 அடி) மட்டுமே குறைகிறது.

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறாத்து_ஆறு&oldid=1031946" இலிருந்து மீள்விக்கப்பட்டது