சானசு புகாரி
சானசு புகாரி (Shahnaz Bukhari அல்லது சானசு போகாரி ) என அறியப்படும் இவர் ஒரு பாக்கித்தான் மருத்துவ உளவியலாளர் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். இவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஆவணப்படுத்தும் மற்றும் எதிர்க்கும் அரசு சாரா அமைப்பின், முற்போக்கு மகளிர் சங்கம் (PWA) இன் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார்.
கல்வி மற்றும் வேலை
[தொகு]லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் முதுகலைப் பட்டம் பெறுள்ளார். பட்டம் பெற்ற பிறகு, இவர் ஏழு ஆண்டுகள் சவுதி அரேபியாவில் குடும்ப ஆலோசகராகப் பணியாற்றினார். 1984 ல் பாக்கித்தானுக்கு திரும்பிய போது, புகாரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த சேவைகளும் வழங்கப்படுவது இல்லை என்பதைக் கவனித்து, அதனை சரி செய்ய தீர்மானித்தார். 1985ஆம் ஆண்டில் இவர் முற்போக்கு மகளிர் சங்கத்தை (PWA) நிறுவினார், இந்த அமைப்பு சமூக மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதனை நோக்கமாகக் கொண்டது.[1] 1994 ஆம் ஆண்டில், அமிலத் தாக்குதலனினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்குகளில் அவர்களுக்கு சட்ட ரீதியிலான உதவியினை வழங்க முயற்சிகளை மேற்கொண்டார்.[2] சானசு புகாரி மகளிர் உலகம் எனும் இதழையும் இவர் திருத்தி வெளியிட்டார்.[3]
1994 ஆம் ஆண்டு, முற்போக்கு மகளிர் சங்கத்தை வெற்றிகரமாக அனைத்து பெண் காவல் நிலையங்களில் நிறுவப்பட வேண்டும் என்று பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கு அழுத்தம் கொடுத்தது. 1999 இல், புகாரி ராவல்பிண்டியில் உள்ள தனது குடும்ப வீட்டை சானசு புகாரி, குழந்தைகள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான முதல் தங்குமிடமாக மற்றினார்.[4] சானசு புகாரி முற்போக்கு மகளிர் சங்கம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஆவணப்படுத்தியது.இதன் மூலம் 16,000 வழகுகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 5,675 க்கும் மேற்பட்ட இறப்புகள் சமையலின் போது ஏற்பட்ட இறப்புகள் எனக் கண்டறியப்பட்டது. 1994 முதல் 2008 வரை, இந்தச் சங்கம் இஸ்லாமாபாத் பகுதியில் 7,800 அமிலத் தாக்குதல்கள் வழக்குகள் நடைபெற்றுள்ளதாக பதிவு செய்தது.[5]
2001 ஆம் ஆண்டில்,சானசு புகாரி "விபச்சாரம் செய்ய முயன்றார்" என்பதற்காக கைது செய்யப்பட்டார். தனது அமைப்பின் மூலமாக குழந்தைகள் மற்றும் குடும்ப வன்முறைகளால் கணவனிடமிருந்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் மீது சுமத்தப்பட்ட விபச்சாரக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். சானசு புகாரியின் கூற்றுப்படி, இவரும் இவரது குடும்பத்தினரும் பல அச்சுறுத்தல்கள்களுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், பலமுறை காவல் துறையினரின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சானசி புகாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் ஒற்றைப் பெற்றோராக இவர்களை வளர்த்து வருகிறார்.இவரது மூத்த மகன் இவரது தலைமை உதவியாளராக பணியாற்றுகிறார். இவரது முன்னாள் கணவர் அமெரிக்காவில் வசிக்கிறார்.
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
[தொகு]புகாரி 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிரைன் அறக்கட்டளையின் சிவில் கவரேஜ் பரிசை வென்றார், இது "இராணுவ பாதிப்புகளை விட அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் நபர்களுக்காக வழங்கப்படுகிறது.[7][8] ஒரு வருடம் கழித்து, விமஸ் இநியூஸ் அறிவித்த "21 ஆம் நூற்றாண்டுக்கான 21 தலைவர்கள்" பட்டியலில் இவர் இடம்பெற்றார்.
இவர் வீமர் மனித உரிமைகள் விருது 2001 ஆம் ஆண்டில் பெற்றார்.
சான்றுகள்
[தொகு]- ↑ Carline Bennett (23 December 2003). "21 Leaders for the 21st Century". We News. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012.
- ↑ Zofeen T. Ebrahim (16 February 2009). "Maria Shah — another acid attack file closed?". Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Richard H. Curtiss (August–September 1996). "Shahnaz Bukhari—A Single-Minded Activist for Women's Rights". Washington Report on Middle East Affairs. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012.
- ↑ "Shahnaz Bukhari". Conference on World Affairs: University of Colorado-Boulder. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Nicholas D. Kristof (30 October 2008). "Terrorism that's personal". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012.
- ↑ Shahnaz Bukhari (15 October 2003). "Shahnaz Bukhari Civil Courage Prize Address". Civil Courage Prize. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Civil Courage Prize". civilcourageprize.org. 2010. Archived from the original on 23 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 11 May 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "David Patrick Columbia's New York Social Diary". newyorksocialdiary.com. 29 October 2003. Archived from the original on 21 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012.