சாகீர் உசேன் (பரத நாட்டியக் கலைஞர்)
சாகீர் உசேன் என்பவர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பரதநாட்டியக் கலைஞர், சொற்பொழிவாளர், நடன ஆசிரியர் ஆவார்.
சாகிர் உசேன் தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், துருஞ்சிப்பட்டி என்னும் சிற்றூரைச் சேர்ந்தவர். பிறப்பால் இசுலாமியரான இவரை இவரது பெரியம்மாவான அலுமேலு அப்துல்லாவால் தத்தெடுத்து வளர்க்கபட்டார். அலுமேலு வழியாக வைணவத்தின் அறிமுகத்தையும், ஈடுபாட்டையும் பெற்றார். பரத நாட்டியத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் சித்திரா விசுவேசுவரிடம் பரதம் கற்றார். பல கோயில்களிலும், மேடைகளிலும் நூற்றுக்கணக்கான நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர், இந்திய அரசின் நல்கையைப் பெற்று வைணவ ஆகமகங்களான வைகானசம், பாஞ்சராத்திரம் ஆகியவற்றில் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.[1]
இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, இந்திய ஒன்றிய அரசின் சமூக நல்லிணக்க விருது போன்றவற்றைப் பெற்றவராவார்.[2]
சர்ச்சைகள்
[தொகு]வைணவத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட இவர் வைணவக் கோயில்களில் சிறுவயதிலிருந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டவர். இந்நிலையில் 2021 திசம்பர் 10 அன்று திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்றவரை தனிநபர் ஒருவர் வழிமறித்து மாற்று சமயத்தவர்கள் கோயிலுக்குள் செலக்கூடாது என்று நெட்டித் தள்ளி வெளியேற்றியது சர்ச்சைக்கு ஆளானது. இது குறித்து சம்பந்தபட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.[3]
எதிர்வினைகள்
[தொகு]இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட கர்நாடக இசை கலைஞர் ஸ்ரீரங்கம் அரங்கநாதரை தரிசிக்கச் சென்ற நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் மோசமாக நடத்தப்பட்டது ஆழமாக பாதிக்கிறது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். துலுக்க நாச்சியாருக்கு சிறப்பிடம் தருவதன் மூலமாக சங்கம பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது ஸ்ரீரங்கம் என்பதை நாம் மறக்கவேண்டாம் என்று என்று பதிவிட்டார்.[4]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Muslim-ஆக பிறந்தேன்... ஆனால் இப்போது... Zakir Hussain (Bharatanatyam Dancer) Interview" (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ இளங்கோவன்,தே.தீட்ஷித், நவீன். "நடனக் கலைஞர் `கலைமாமணி' ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டாரா?! - பின்னணி என்ன?". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
{{cite web}}
: External link in
(help)|website=
- ↑ "'மாற்று மதத்தினராக இருந்தாலும் நம்பிக்கை கொண்டவர்கள் வரலாம்' - ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.
- ↑ "நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து துரத்தப்பட்டாரா? நடந்தது என்ன?". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-12-13.