சரிதா ஜோஷி
சரிதா ஜோஷி | |
---|---|
பிறப்பு | சரிதா போஸ்லே அக்டோபர் 17, 1941 புனே, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா (நவீன மகாராட்டிரம், இந்தியா) |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1950–present |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
உறவினர்கள் |
|
சரிதா ஜோஷி ( Sarita Joshi ) (என்கிற போஸ்லே ) (பிறப்பு அக்டோபர் 17, 1941) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர், குஜராத்தி மற்றும் மராத்திய நாடகங்களில் நடித்த முக்கியமான நடிகைகளில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். இவர், 1970களில் தனது கணவர் பிரவீன் ஜோஷியுடன் நடித்த குஜராத்தி நாடகங்களுக்காக பிரபலமாக அறியப்படுகிறார். மேலும், இவர் ஸ்டார் பிளஸ்ஸில் ஒளிபரப்பான பா பஹூ அவுர் பேபி (2005-2010) நகைச்சுவை நாடகத்தில் கோதாவரி தக்கர் என்ற பாத்திரத்திற்காக பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். 1988 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமி குஜராத்தியில் நடித்ததற்காக சங்கீத நாடக அகாதமி விருது வழங்கியது.[1] 2020 ஆம் ஆண்டில், கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியக் குடிமகன்களுக்கு வழங்கப்படும் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2] இவர் சமீபத்தில் (2019) ஜீ டிவியின் "ஹமாரி பாஹு சில்க்கில்" குறிப்பாக 'ஏ' கிரேடு திரைப்படங்களை வெறுக்கும் கடின உழைப்பாளி வணிகப் பெண்ணாகக் காணப்பட்டார். சரிதா ஜோஷி தற்போது ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான அனுபமாவின் முன்னோடி வலைத் தொடரான, அனுபமா: நமஸ்தே அமெரிக்காவில் காணப்படுகிறார்.
தற்போது சோனி சாப்பின் "புஷ்பா இம்பாசிபிள்" தொடரில், ராதா லிமாயே என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இளமைப்பருவம்
[தொகு]சரிதா வடோதராவில் வளர்ந்தாலும், புனேவில் நடுத்தர வர்க்க மராத்தியக் குடும்பத்தில் பிறந்தவர்.[3] இவரது தந்தை, பீமராவ் போஸ்லே, ஒரு வழக்குரைஞர் ஆவார். தாயார், கமலாபாய் ரானே, கோவாவைச் சேர்ந்தவர். இவர் தனது ஒன்பதாவது வயதில் தனது சகோதரி பத்மராணியுடன் சேர்ந்து மேடையில் நடிக்கத் தொடங்கினார், இவரது குடும்பத்தில் ஏற்பட்ட நிதிப் பிரச்சினைகளால், முதலில் பாரம்பரிய நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார் என்றாலும், விரைவில் சாந்தா ஆப்தே போன்ற பிரபலமான கலைஞர்களுடன் பணியாற்றத் தொடங்கினார்.[3]
தொழில்
[தொகு]சரிதா ஜோஷி, ஆறு வருடங்கள் குழந்தை நடிகராகப் பணியாற்றிய பிறகு, தனது 16 வயதில் தனது முதல் முக்கிய வேடத்தைப் குஜராத்தி திரைத்துறையில் பெற்றார். மேலும் அங்கு, இவர் தனது வருங்கால கணவர் பிரவீண் ஜோஷியை சந்தித்தார்.[3]
இவர் 1980 களில் நாதிரா பாப்பர் இயக்கின தொலைக்காட்சித் தொடரான டிட்லியான் (பட்டர்ஃபிளைஸ்) மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 90 களில் ஜீ டிவியின் ஹஸ்ரடீன் உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ஜோஷி முதலில் ராஜ்குமார் கட்டாவ் என்பவரை மணந்தார். பின்னர், நாடக இயக்குநரும் நாடக ஆசிரியருமான பிரவீண் ஜோஷியை மணந்தார்.[4] கியுங்கி சாஸ் பி கபி பாஹு தியில் தக்ஷாவாக நடித்த நடிகைகள் கேட்கி டேவ் மற்றும் காமெடி சர்க்கஸில் தொகுப்பாளராகத் தோன்றிய பர்பி ஜோஷி ஆகியோர் இவரின் குழந்தைகள் ஆவர்.அருணா இரானி இவரது சகோதரியின் கணவரின் மருமகள் ஆவார்.
விருதுகள்
[தொகு]- 2020 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[5]
- 1988 இல், குஜராத்தியில் நடித்ததற்காக சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.[4][6] 2007 இல், பா பஹூ அவுர் பேபியில் கோதாவரி லாப்சங்கர் தக்கராக நடித்ததற்காக, சிறந்த நாடக நடிகைக்கான ஐடிஇஏ இந்திய தொலைக்காட்சி அகாதமி விருதைப் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Theatre - Acting (Language Theatre-wise) - Gujarati". சங்கீத நாடக அகாதமி விருது. Archived from the original on 28 June 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
- ↑ "Press Note" (PDF). Ministry of Home Affairs. 2020-01-25. Archived from the original (PDF) on 2022-09-22. பார்க்கப்பட்ட நாள் 2022-11-11.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "All in the family". Indian Today. 13 February 2008. பார்க்கப்பட்ட நாள் 15 May 2013.
- ↑ 4.0 4.1 "Twining". Screen. 22 March 2002. Archived from the original on 2 March 2008. பார்க்கப்பட்ட நாள் 26 August 2009.
- ↑ "Sarita Joshi on her Padma Shri win: The honour has motivated me to work harder and with even more passion" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/sarita-joshi-on-her-padma-shri-win-the-honour-has-motivated-me-to-work-harder-and-with-even-more-passion/articleshow/87807281.cms.
- ↑ "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 17 February 2012.