உள்ளடக்கத்துக்குச் செல்

கோலாகுமுலி பள்ளத்தாக்கு

ஆள்கூறுகள்: 36°09′26″N 72°44′17″E / 36.1573309°N 72.7381°E / 36.1573309; 72.7381
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாகுமுலி பள்ளத்தாக்கு
وادئ گولاغمولی
கோ-இ-கிசர்
தெறு
சாண்டுர் பள்ளத்தாக்கு
பேந்தர் பள்ளத்தாக்கு
பேந்தர் பள்ளத்தாக்கு
கோலாகுமுலி பள்ளத்தாக்கு is located in Gilgit Baltistan
கோலாகுமுலி பள்ளத்தாக்கு
கோலாகுமுலி பள்ளத்தாக்கு
ஜம்மு-காஷ்மீரில் கோலாகுமுலி
ஆள்கூறுகள்: 36°09′26″N 72°44′17″E / 36.1573309°N 72.7381°E / 36.1573309; 72.7381
Countryபாக்கித்தான்
மாநிலம்வடக்கு நிலங்கள்
மாவட்டம்கிசர் மாவட்டம்
நகரங்கள்
பட்டியல்
  • பேனர்
ஏற்றம்
3,030 m (9,940 ft)
அஞ்சல் குறியீடு
15300
இடக் குறியீடுஅ.கு.எண் 15300
ஆறுகள்கிசர் ஆறு
இணையதளம்www.mygolaghmuli.com

கோலாகுமுலி பள்ளத்தாக்கு (ஆங்கிலம்: Golaghmuli Valley ) என்பது பாக்கித்தானின் கில்கிட்-பால்டித்தானில் மேல் கிசரில் உள்ள ஒரு உயர்ந்த மலை பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு சித்ராலின் கிழக்கிலும், சுவாத்தின் வடக்கிலும் அமைந்துள்ளது. கோலாகுமுலி பள்ளத்தாக்கு சித்ரல் மற்றும் சுவாத்திலிருந்து உயர்ந்த மலைப்பாதைகளால் பிரிக்கப்பட்டுள்ளது. கோலாகுமுலி பள்ளத்தாக்கை அடைய, ஒரு நபர் கில்கிட்டிலிருந்து மேற்கே கில்கிட்-சித்ரால் சாலையில் செல்ல வேண்டும். பின்னர் குபிசு வழியாக நேராக தனது பயணத்தைத் தொடர வேண்டும். பிறகு, வடமேற்கு திசையில் யாசின் பள்ளத்தாக்கை அடைந்து நேராக சாலை கோலாகுமுலி பள்ளத்தாக்குக்குச் செல்லலாம்.

வரலாறு

[தொகு]

கோலாகுமுலி பள்ளத்தாக்கு கிசர் மாவட்டத்தின் புதிய வட்டமான பாந்தரின் ஒரு பெரிய பகுதி ஆகும். இது முன்னர் குபிசு வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பாக்கித்தான் மக்கள் கட்சியின் அரசாங்கத்தில், கோலாகுமுலியை கிசரின் புதிய மாவட்டமாக்க செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாக்கித்தான் முஸ்லிம் லீக் (என்) அரசாங்கம் அதற்கு ஒரு வட்டத்தின் முழு அதிகாரத்தையும் கொடுத்தது. பாந்தரை முதலில் ஆளுநர் குபிசு, அரசர் உசேன் அலிகான் மக்பூன் ஆட்சி செய்தார். குபிசின் அரசர்கள் சிறந்த போர்வீரர்கள் மற்றும் கில்கிட்-பால்டித்தானின் சுதந்திர இயக்கத்தில் சீக்கியர்கள் மற்றும் தோக்ராக்களுக்கு எதிராக போராடினர். ஆனால் அவர்கள் இறுதியில் எல்லைப்புற குற்ற விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்பட்ட நேரத்தில் அதிகாரத்தையும் கோ-இ-கிசரின் உரிமையையும் இழந்தனர்.

கோலாகுமுலி பள்ளத்தாக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஏனெனில் இது ஒரு உயர்ந்த மலைப்பாதைக்கு வழிவகுக்கிறது, சித்ராலில் உள்ள இலாஸ்பூர் பள்ளத்தாக்குக்கு சாண்டுர் கணவாய் வழியாக, பின்னர் மஸ்தூஜுக்கு செல்கிறது. மற்றொரு நுழைவாயில் சுவாத் மாவட்டத்திற்கு செல்லும் அண்டரப் நல்லாவில் தாதைலி பாதையைக் கடந்து செல்கிறது.

கிராமங்கள்

[தொகு]

கோலாகுமுலி மற்றும் கோலாக்முலி பள்ளத்தாக்கு ஆகியவை கிசர் மாவட்டத்த்தின் மேற்கில் அமைந்துள்ளன. இதில் பிங்கல், ராவத், சாமரன், சாசி, கோலாக்முலி, , கோலக்தோரி, தெரிச், கண்டரப், ஏரி, கெர்குசு, தேரு, கரீம் அபாத், கில்தி, பார்செத் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் சாண்டூர் உட்பட குகுசு நல்லாவின் பரந்த பகுதி ஆகியவை அடங்கும்.

நிர்வாக ரீதியாக, கோலாகுமுலி வட்டம் புதியதாக அமைக்கப்பட்ட ஒரு வட்டம் ஆகும். இவ்வட்டம் கில்கிட்-பால்டித்தானின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. கோலாகுமுலி கிராமம் கோலாகுமுலி வட்டத்தின் தலைமையகமாகும். இருப்பினும், வட்டத்தில் கோலாகுமுலியும் மக்கள் தொகை கொண்ட ஒரு கிராமமாகும்.

மொழி

[தொகு]

கோலாகுமுலி பள்ளத்தாக்கு மக்கள் கோவார் மொழி பேசுகிறார்கள். இது சொந்த மொழியாகும். இருப்பினும், சினா, உருது மற்றும் ஆங்கிலம் நன்றாக பேசவும் தெரிந்துள்ளது.

மதம்

[தொகு]

இசுலாம் மட்டுமே இங்கு பின்பற்றப்படுகிறது. மக்கள் இஸ்மாயிலி மற்றும் சுன்னி இசுலாம் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். மொத்த மக்கள் தொகையில் 65% இஸ்மாயிலி இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் சுன்னி இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள்.

காலநிலை

[தொகு]

கோலாகுமுலி பள்ளத்தாக்கின் காலநிலை உள்ளூர் புல்வெளி காலநிலையாக கருதப்படுகிறது. ஆண்டின் போது, சனவரி முதல் மார்ச் இறுதி வரை மழை பொழிவு இருக்கும். கோப்பென் காலநிலை வகைப்பாட்டின்படி இங்கு அரை வறண்ட காலநிலையாக கருதப்படுகிறது. கோலாகுமுலி பள்ளத்தாக்கின் சராசரி ஆண்டு வெப்பநிலை 19.6. C ஆகும். ஆண்டுதோறும் சுமார் 429 மி.மீ மழை பெய்யும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், கோலாகுமுலி வட்டம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 8.3
(46.9)
9.5
(49.1)
14.9
(58.8)
21.0
(69.8)
25.6
(78.1)
31.8
(89.2)
32.8
(91)
32.0
(89.6)
28.7
(83.7)
23.7
(74.7)
17.4
(63.3)
10.9
(51.6)
32.8
(91)
தினசரி சராசரி °C (°F) 4.1
(39.4)
5.0
(41)
9.8
(49.6)
15.3
(59.5)
19.4
(66.9)
24.9
(76.8)
26.1
(79)
25.4
(77.7)
21.9
(71.4)
17.0
(62.6)
11.5
(52.7)
6.5
(43.7)
26.1
(79)
தாழ் சராசரி °C (°F) 0.0
(32)
0.6
(33.1)
4.8
(40.6)
9.7
(49.5)
13.3
(55.9)
18.0
(64.4)
19.5
(67.1)
18.8
(65.8)
15.2
(59.4)
10.3
(50.5)
5.6
(42.1)
2.1
(35.8)
11.4
(52.5)
பொழிவு mm (inches) 69
(2.72)
99
(3.9)
146
(5.75)
139
(5.47)
69
(2.72)
22
(0.87)
52
(2.05)
56
(2.2)
40
(1.57)
31
(1.22)
26
(1.02)
51
(2.01)
800
(31.5)
ஆதாரம்: Climate-Data.org[1]

பழங்குடியினர்

[தொகு]

கோலாகுமுலி பள்ளத்தாக்கில் ஏராளமான இனங்கள் வாழ்கின்றன. இங்கு பல பழங்குடியினர் வாழ்கின்றனர்.

கணவாய்கள்

[தொகு]

கோலாகுமுலி பள்ளத்தாக்கு மிகவும் மலைப்பாங்கான இடத்தில் உள்ளது. இது சுவாத் மற்றும் சித்ராலின் எல்லையுடன் அமைந்துள்ளது. சாண்டூர் கணவாய் கோலாகுமுலி பள்ளத்தாக்கை சித்ரலுடன் இணைக்கிறது. தாதரிலி (தாதைலி) கணவாய் கோலாகுமுலி பள்ளத்தாக்கை சுவாத்துடன் இணைக்கிறது. சுவாத் மாவட்டத்திற்கான மற்றொரு கணவாய் அருகிலுள்ள குகுஷ் லங்கர் (பஹா) ஏரி, இது நக்லாச்சோ தஹார் என்று அழைக்கப்படுகிறது. சுமர்கன் ஆன் என்ற மற்றொரு கணவாய் பார்செட்டை மேஸ்துஜ் சபாலியுடன் இணைக்கிறது. சுமர்கன் ஆன் உடன், கோட்பார் ஆன் அமைந்துள்ளது. இது பார்செட்டை கார்ச்சினுடன் இணைக்கிறது. இந்த கணவாய்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் மலையேறுபவர்களுக்கு தங்கள் பயணத்தை குறைக்க எளிதானது.

ஏரிகள்

[தொகு]

கோலாகுமுலி பள்ளத்தாக்கில் பல ஏரிகள் உள்ளன;

  • குக்குசு இலாங்கர் (மகா ஏரி)[2]
  • சாண்டுர் ஏரி[3]
  • கேன்ட்ராப் ஏரி
  • கோலாமுகிலி ஏரி
  • கோலாகோத்ரி ஏரி 1
  • கோலாகோத்ரி ஏரி 2
  • சாகி மால் ஏரி
  • பாரிச் ஏரி

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.accuweather.com/en/ir/shandul/511646/weather-forecast/511646
  2. http://myGolaghmuli.com/baha-lake-ghizer-gilgit-baltistan-pakistan/[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-11-19. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.

வெளி இணைப்புகள்

[தொகு]