சாண்டுர் கணவாய்
சாண்டுர் கணவாய் | |
---|---|
ஏற்றம் | 12,200 அடி (3,719 மீ) |
அமைவிடம் | கீசர் , கில்கிட் - பால்டிஸ்டான் |
ஆள்கூறுகள் | 36°09′54″N 72°45′29″E / 36.16500°N 72.75806°E |

சாண்டுர் கணவாய் (Shandur Top) உலகின் கூரை என அழைக்கப்படுகிறது. இது பாக்கித்தானில் உள்ள கிசர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 12,200 அடி உயரத்தில் (3,700 மீட்டர்) அமைந்துள்ளது. இதன் இருபுறமும் கில்கிட் - பால்டிஸ்டான் மற்றும் சிட்ரால் நகரங்கள் அமைந்துள்ளன. ஸாண்டுர் கணவாய் சிட்ராலுக்கும் கில்கிட்-பால்டிஸ்டானுக்கும் இடையேயான முக்கியமான போக்குவரத்துப் பாதையாகும்.[1][2] இருபுறமும் வாழும் மக்கள் கோவார் மொழியில் பேசுகின்றனர்.
சாண்டூர் போலோ திருவிழா
[தொகு]இங்கே உள்ள சமவெளிப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதம் முதல் வாரத்தில் கில்கிட் - பால்டிஸ்டான் அணிக்கும் சிட்ரால் அணிக்கும் இடையே போலோ விளையாட்டு நடைபெறும். இங்கு 1936ஆம் ஆண்டிலிருந்து போலோ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வருவர். இப்போட்டியின் போது பாரம்பரிய இசையும் நடனங்களும் இடம்பெறுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "William and Kate invited to Shandur: Aqil Shah". DAWN.COM (in ஆங்கிலம்). 2011-06-13. Retrieved 2022-06-16.
- ↑ "PASSES". www.gilgitbaltistanscouts.gov.pk. Archived from the original on 2022-01-18. Retrieved 2022-01-16.
- ↑ "Shandur Polo Festival I Book Now I Hunza Guides Pakistan". Hunza Guides Pakistan (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-21.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.visitgilgitbaltistan.gov.pk பரணிடப்பட்டது 2018-01-25 at the வந்தவழி இயந்திரம்
- http://gilgitbaltistan.gov.pk பரணிடப்பட்டது 2018-01-25 at the வந்தவழி இயந்திரம்