கோரை உள்ளான்
கோரை உள்ளான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே
|
பேரினம்: | கோரை உள்ளான் F. Boie, 1826
|
இனம்: | L. minimus
|
இருசொற் பெயரீடு | |
Lymnocryptes minimus (Brunnich, 1764) | |
வேறு பெயர்கள் | |
|
கோரை உள்ளான் (Jack Snipe; Lymnocryptes minimus) 21 செ.மீ. உடலின் மேற்பகுதி பசுமையும் ஊதாவும் தோய்ந்தது. தலையிலும் கண்களை அடுத்தும் வெண்பட்டைகளைக் காணலாம். மார்பில் பழுப்புத் திட்டுகள் உண்டு. வயிறும் வாலடியும் வெண்மை.
காணப்படும் பகுதிகள்
[தொகு]குளிர் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் வலசை வரும் இது சகதியும் சேறுமாக உள்ள அறுவடை முடிந்த வயல்கள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் காணப்படும்.
உணவு
[தொகு]சிறு நத்தைகள், புழு பூச்சிகள் ஆகியவற்றோடு சதுப்பு நிலத் தாவரங்களில் விதைகளையும் தேடித்தின்னும். வேட்டைக்காரர்கள் ஆரவாரம் செய்து துரத்தும்போது கடைசி வரை புதரிலிருந்து வெளிப்படாது பதுங்கியிருந்து பின் எழுந்து சற்றுத் தொலைவு பறந்து புதரிடையே பதுங்கும்.
இராமநாதபுரம் பெரியகண்மாயைச் சார்ந்த பகுதியில் இப் பறவைகள் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கரையில் மேற்கொள்ளப்படுவது போல தென்மாவட்டங்களின் மீது அதிக கவனம் செலுத்தினால் வலசை வரும் பறவைகள் பற்றிய பல விவரங்கள் மேலும் வெளிப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lymnocryptes minimus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)