கோரை உள்ளான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Bilateria
கோரை உள்ளான்
Lymnocryptes minimus (Marek Szczepanek).jpg
உயிரியல் வகைப்பாடு e
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பறவை
Order: சரத்ரீபார்மசு
Family: Scolopacidae
Genus: கோரை உள்ளான்
F. Boie, 1826
இனம்: L. minimus
இருசொற் பெயரீடு
Lymnocryptes minimus
(Brunnich, 1764)
வேறு பெயர்கள்
  • Scolopax minima Brünnich, 1764

உடலமைப்பு[தொகு]

ஆங்கிலப் பெயர் :Jack Snipe

அறிவியல் பெயர் :Lymnocryptes minimus

21 செ.மீ. - உடலின் மேற்பகுதி பசுமையும் ஊதாவும் தோய்ந்தது. தலையிலும் கண்களை அடுத்தும் வெண்பட்டைகளைக் காணலாம். மார்பில் பழுப்புத் திட்டுகள் உண்டு. வயிறும் வாலடியும் வெண்மை.

காணப்படும் பகுதிகள்[தொகு]

குளிர் காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் வலசை வரும் இது சகதியும் சேறுமாக உள்ள அறுவடை முடிந்த வயல்கள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றில் காணப்படும்.

உணவு[தொகு]

கோரை உள்ளான்

சிறு நத்தைகள், புழு பூச்சிகள் ஆகியவற்றோடு சதுப்பு நிலத் தாவரங்களில் விதைகளையும் தேடித்தின்னும். வேட்டைக்காரர்கள் ஆரவாரம் செய்து துரத்தும்போது கடைசி வரை புதரிலிருந்து வெளிப்படாது பதுங்கியிருந்து பின் எழுந்து சற்றுத் தொலைவு பறந்து புதரிடையே பதுங்கும். இராமநாதபுரம் பெரியகண்மாயைச் சார்ந்த பகுதியில் இப் பறவைகள் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோடிக்கரையில் மேற்கொள்ளப்படுவது போல தென்மாவட்டங்களின் மீது அதிக கவனம் செலுத்தினால் வலசை வரும் பறவைகள் பற்றிய பல விவரங்கள் மேலும் வெளிப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

[2] [3]

  1. "Lymnocryptes minimus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:45
  3. "Jack_snipeகோரை உள்ளான்". பார்த்த நாள் 27 செப்டம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரை_உள்ளான்&oldid=2749276" இருந்து மீள்விக்கப்பட்டது