கொமரலிங்கம்
கொமரலிங்கம் | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 10°29′20″N 77°20′58″E / 10.489015°N 77.349436°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருப்பூர் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] | ||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||
மக்கள் தொகை | 11,737 (2001[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
கொமரலிங்கம் (ஆங்கிலம்:KOMARALINGAM-) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி . மடத்துக்குளம் வருவாய் வட்டத்தின் வருவாய் கிராமம் (கிராம எண்:39) ஆகும்.[4][5]
பெயர் சிறப்பு
[தொகு]கொங்கு நாட்டில் வாழ்ந்த வள்ளல்களில் குமணவள்ளல் பின் வந்தோர் இவ்வூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் இவ்வூர் அமராவதி ஆற்றின் கரையில் இருந்ததால் கரையூர் என அழைக்கப்பட்டதாக இங்குள்ள கல்யாண பெருமாள் கோவில் கல்வெட்டு தெறிவிக்கிறது.[6]
அமைவிடம்
[தொகு]பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் பழனியிலிருந்து சுமார் 22 கி.மீ.தூரத்திலும், உடுமலைப்பேட்டையிலில் இருந்து 12 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 415 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 7 கி.மீ தூரத்தில் ஐவர்மலை சமணர் குகைகள் அமைந்துள்ளது.
முக்கிய பயிர்
[தொகு]இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), கரும்பு, வாழை அதிகமாக விளைகின்றன. இது அமராவதியாற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளதால் செழிப்பான நிலப்பகுதியாகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொழுமம் கிராமத்தில் 1816 வீடுகள் உள்ளது. இவ்வூரில் 11737 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 5888,பெண்கள்5849 பாலின விகிதம் 962. எழுத்தறிவு பெற்றவர்கள் 6467 பேர். இதில் 3726 பேர் ஆண்கள்; 2741 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 62.38%. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 1341 ஆண் குழந்தைகள் 680,பெண் குழந்தைகள் 661 ஆவர்.[7]
நிர்வாக அலகு
[தொகு]- மாவட்டம்: திருப்பூர்
- வருவாய் கோட்டம்: உடுமலை
- வட்டம்:மடத்துக்குளம்
- வருவாய் கிராமம்: கொமரலிங்கம்
- பேரூராட்சி:கொமரலிங்கம்.
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.
- ↑ கொழுமம், கொமரலிங்கம்- ஐவர்மலை-முனைவர். தி.மனோன்மணி- தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு-2007-
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் சனவரி02, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unfit URL (link)