உள்ளடக்கத்துக்குச் செல்

கெய்தி அசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெய்தி அசன் (Gaiti Hasan)(பிறப்பு 19 நவம்பர் 1956) என்பவர் இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் மூலக்கூற்று உயிரியல், மரபியல், நரம்பணுவியல் மற்றும் உயிரணு சமிக்ஞை ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்துவருகிறார்.[1] அசன் இந்தியத் தேசிய அறிவியல் கழகம், இந்திய அறிவியலாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உயர்நிலைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.[1] 2013 முதல் இவர் பெங்களூரில் உள்ள தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் மூத்த பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.[1][2]

கல்வி

[தொகு]

அசன் அலிகாரில் தன்னுடைய பள்ளிக் கல்வியினை முடித்தார். இவருடைய பெற்றோர் பல்கலைக்கழகத்தில் கற்பித்தார்கள். இவருடைய இரண்டு சகோதரிகளும் வேதியியல் மற்றும் இயற்பியல் படித்தார்கள்.[3] இவர் 1976இல் தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா இல்லத்தில் விலங்கியல் துறையில் படித்து இளம் அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1978இல் முதுநிலை அறிவியல் பட்டத்தினை உயிர் அறிவியல் துறையில் முடித்தார். மேலும் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 1980இல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.[1][3] 1983ஆம் ஆண்டில், ட்ரிபனோசோமா ப்ரூசியின் ரிபோசோம்களில் காணப்படும் ஆர்என்ஏ மரபணுக்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளுக்காக கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[4] அசனின் கூற்றுப்படி, அவர் தனது முனைவர் பட்டத்திற்குப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போதுதான், "கல்வியின் சிறுபான்மையினருக்கான பாகுபாடுகள் குறித்து முதன் முறையாக உணர்ந்ததாக” தெரிவிக்கின்றார். இதன் காரணமாக உணர்வுப்பூர்வமாக முயற்சி செய்து மற்ற பெண் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆதரவாக இருக்க வழிவகுத்தது என்று தெரிவிக்கின்றார்.[3]

தொழில்

[தொகு]

தற்போது இவர் பெங்களூரில் உள்ள உயிரியல் அறிவியல் தேசிய மையத்தில் பணியாற்றுகிறார்.[5] இங்கு விலங்குகளில் உள்ள உயிரணுவின் உள் கால்சியம் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களின் முறையான மற்றும் உயிரணு விளைவுகள் குறித்து ஆய்வு செய்துவருகிறார். 1983ஆம் ஆண்டில், அசன் மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் மூலக்கூறு உயிரியல் பிரிவில் வருகைதரும் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார்.[1] 1992இல் மாசச்சூசெட்ஸ் பிராண்டிஸ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் வருகை தரும் விஞ்ஞானியாகச் சேர்ந்தார்.[4]

ஆராய்ச்சி

[தொகு]

அசனின் ஆய்வகத்தில் உயிரணுக்களில் இரண்டாவது தூதுவர் செயல்படும் இனோசிடால் 1,4,5-முப்பாசுபேட் (InsP3) மற்றும் அதன் ஏற்பி-இன்சுபி3 குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த புரதம் உயிரணுவின் உள் -கால்சியம் சேமிப்பு மற்றும் இன்ஸ்பி3 க்கான ஏற்பி மற்றும் கால்சியம் வெளியீட்டிற்கான வாய்க்காலின் இரட்டைச் செயல்பாட்டைச் செய்கிறது. மரபணு, மூலக்கூறு, உயிரணுக்கள், மின் இயற்பியல் மற்றும் நடத்தை முறைகளில் மாதிரி உயிரினமான பழ ஈக்களில் இன்ஸ்பி3 ஏற்பி செயல்பாடுகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரது ஆய்வகத்தில் மேற்கூறி பிரிவுகளில் குறுகிய காலப் பயிற்சியினையும், முனைவர் பட்டம், முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆய்வினையும் தகுதி வாய்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

[தொகு]

அசன், இன்லாக்ஸ் அறக்கட்டளையின் உதவித்தொகை,[6] இங்கிலாந்து வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர் விருது, வெல்கம் அறக்கட்டளையின் நிதியுதவி மற்றும் ராக்பெல்லர் உயிர்த்தொழில்நுட்பவியல் நிதியுதவியினையும் பெற்றார். 2006ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும், 2007இல் ஆசிய-பசிபிக் மூலக்கூறு உயிரியல் வலையமைப்பின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

வெளியீடுகள்

[தொகு]

இவர் தலைசிறந்த பன்னாட்டு ஆவ்விதழ்களில் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  1. Deb, Bipan Kumar; Pathak, Trayambak; Hasan, Gaiti (26 May 2016). "Store-independent modulation of Ca2+ entry through Orai by Septin 7". Nature Communications 7: 0. doi:10.1038/ncomms11751. பப்மெட்:27225060. Bibcode: 2016NatCo...711751D. 
  2. Pathak, T.; Agrawal, T.; Richhariya, S.; Sadaf, S.; Hasan, G. (2015). "Store-Operated Calcium Entry through Orai is Required for Transcriptional Maturation of the Flight Circuit in Drosophila". Journal of Neuroscience 35 (40): 13784–99. doi:10.1523/JNEUROSCI.1680-15.2015. பப்மெட்:26446229. 
  3. Agrawal, Tarjani; Hasan, Gaiti (2015). "Maturation of a central brain flight circuit in Drosophilarequires Fz2/Ca2+signaling". eLife 4. doi:10.7554/eLife.07046. பப்மெட்:25955970. 
  4. Sadaf, Sufia; Reddy, O. Venkateswara; Sane, Sanjay P.; Hasan, Gaiti (2015). "Neural Control of Wing Coordination in Flies". Current Biology 25 (1): 80–6. doi:10.1016/j.cub.2014.10.069. பப்மெட்:25496964. 
  5. Agrawal, Tarjani; Sadaf, Sufia; Hasan, Gaiti (2013). "A Genetic RNAi Screen for IP3/Ca2+ Coupled GPCRs in Drosophila Identifies the PdfR as a Regulator of Insect Flight". PLOS Genetics 9 (10): e1003849. doi:10.1371/journal.pgen.1003849. பப்மெட்:24098151. 
  6. Subramanian, M.; Metya, S. K.; Sadaf, S.; Kumar, S.; Schwudke, D.; Hasan, G. (2013). "Altered lipid homeostasis in Drosophila InsP3 receptor mutants leads to obesity and hyperphagia". Disease Models & Mechanisms 6 (3): 734–744. doi:10.1242/dmm.010017. பப்மெட்:23471909. 
  7. Hasan, Gaiti (2013). "Intracellular signaling in neurons: Unraveling specificity, compensatory mechanisms and essential gene function". Current Opinion in Neurobiology 23 (1): 62–7. doi:10.1016/j.conb.2012.07.004. பப்மெட்:22878162. 
  8. Chakraborty, Sumita; Hasan, Gaiti (2012). "Functional Complementation of Drosophila itpr Mutants by RatItpr1". Journal of Neurogenetics 26 (3–4): 328–37. doi:10.3109/01677063.2012.697501. பப்மெட்:22817477. 
  9. Agrawal, N.; Venkiteswaran, G.; Sadaf, S.; Padmanabhan, N.; Banerjee, S.; Hasan, G. (2010). "Inositol 1,4,5-Trisphosphate Receptor and dSTIM Function in Drosophila Insulin-Producing Neurons Regulates Systemic Intracellular Calcium Homeostasis and Flight". Journal of Neuroscience 30 (4): 1301–13. doi:10.1523/JNEUROSCI.3668-09.2010. பப்மெட்:20107057. 
  10. Venkiteswaran, G.; Hasan, G. (2009). "Intracellular Ca2+ signaling and store-operated Ca2+ entry are required in Drosophila neurons for flight". Proceedings of the National Academy of Sciences 106 (25): 10326–10331. doi:10.1073/pnas.0902982106. பப்மெட்:19515818. Bibcode: 2009PNAS..10610326V. 

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Gaiti Hasan – INSA Fellow". Indian National Science Academy www.insaindia.org. Archived from the original on 16 March 2014. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  2. "NCBS Faculty". National Centre for Biological Sciences www.ncbs.res.in. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  3. 3.0 3.1 3.2 (eds.) Godbole, Rohini and Ramaswamy, Ram (2008). "Science and the Art of Detection" (PDF). Lilavati's Daughters: The Women Scientists of India. Indian Academy of Sciences. pp. 128–131. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014. {{cite web}}: |last= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  4. 4.0 4.1 "NISER Gaiti Hasan bio" (PDF). National Institute of Science Education and Research www.niser.ac.in. Archived from the original (PDF) on 27 February 2018. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  5. "NCBS Faculty". ncbs.res.in. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.
  6. "Inlaks Shivdasani Scholarships – Gaiti Hasan". Inlaks Shivdasani Foundation. Archived from the original on 3 April 2015. பார்க்கப்பட்ட நாள் 14 April 2015.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெய்தி_அசன்&oldid=3278794" இலிருந்து மீள்விக்கப்பட்டது