கெப்லர்-62
கெப்லர்-62எஃப் (முன்னிலையில்) மற்றும் கெப்லர்-62இ (வலதுபுறத்தில்) ஆகிய உயிர்வாழ்தகு புறக்கோள்கள் இரண்டும் கெப்லர்-62 என்னும் சூரியனை (நடுவில்) சுற்றிவரலைக் காட்டும் படம். நன்றி: நாசா Ames/JPL-கால்டெக் | |
நோக்கல் தரவுகள் ஊழி ஜே2000 Equinox ஜே2000 | |
---|---|
பேரடை | லீரா |
வல எழுச்சிக் கோணம் | 18h 52m 51.06019s[1] |
நடுவரை விலக்கம் | +45° 20′ 59.507″[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K2V[2] |
விவரங்கள் | |
திணிவு | 0.69 (± 0.02)[2] M☉ |
ஆரம் | 0.64 (± 0.02)[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.68 (± 0.04)[2] |
வெப்பநிலை | 4925 (± 70)[2] கெ |
அகவை | 7 (± 4)[2] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
கெப்லர்-62 என்பது லீரா பேரடையில் நமது சூரியனை விட சற்றே சிறிய அளவினதும், சற்றே வெப்பம் குறைந்ததுமான ஒரு சூரியன் ஆகும். இது பூமியிலிருந்து 1,200 ஒளியாண்டுகள் தொலையில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[3]
விண்வெளியில் உலவும் கோள்கள் தமது சூரியனைச் சுற்றிக் கடந்துசெல்வதைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு நாசா நிறுவனம் விண்வெளியில் செலுத்தியுள்ள கெப்லர் (விண்கலம்), தனது பார்வைவீச்சில் கண்டுபிடித்த சூரியன்களுள் ஒன்றுக்கு கெப்லர்-62 என்று பெயரிடப்பட்டுள்ளது.
தகவல்கள்
[தொகு]2013, ஏப்பிரல் 18ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கீழ்வரும் தகவல்கள் தெரிகின்றன:
- கெப்லர்-62 என்னும் சூரியனுக்கு 5 கோள்கள் உள்ளன.
- அக்கோள்களுள் இரண்டு மட்டும் திடத்தன்மை கொண்டவையாகவும், அச்சூரியனிலிருந்து பொருத்தமான தூரத்தில் அமைந்து, உயிர்வாழதகு நிலை கொண்டனவாகவும் உள்ளன. அந்த இரு கோள்களுக்கும் முறையே கெப்லர்-62இ, கெப்லர்-62எஃப் என்றும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளன.[2][4][5]
அளவைகள்
[தொகு]கெப்லர்-62 என்னும் சூரியன் நமது சூரியனின் பருமனில் 69% என்றும், ஆரையில் 62% என்றும் உள்ளது. அதன் மேல்மட்ட வெப்பம் 4925 ± 70 K ஆக உள்ளது. அது 7 ± 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.[6][7]
பூமியிலிருந்து நோக்கும்போது கெப்லர்-62 மிக மங்கலாக உள்ளதால் சாதாரண கண்பார்வைக்குத் தெரியாது. அதன் பிரகாச அளவு 13.8 என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Kepler Input Catalog search result". Space Telescope Science Institute. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 William J. Borucki; et al. (18 April 2013). "Kepler-62: A Five-Planet System with Planets of 1.4 and 1.6 Earth Radii in the Habitable Zone". Science Express. doi:10.1126/science.1234702. http://www.sciencemag.org/content/early/2013/04/17/science.1234702. பார்த்த நாள்: 18 April 2013.
- ↑ "பெரும்பூமி" - பிபிசி கட்டுரை]
- ↑ Johnson, Michele; Harrington, J.D. (18 April 2013). "NASA's Kepler Discovers Its Smallest 'Habitable Zone' Planets to Date". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம். பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.
- ↑ Overbye, Dennis (18 April 2013). "2 Good Places to Live, 1,200 Light-Years Away". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2013/04/19/science/space/2-new-planets-are-most-earth-like-yet-scientists-say.html. பார்த்த நாள்: 18 April 2013.
- ↑ Fraser Cain (16 September 2008). "How Old is the Sun?". Universe Today. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
- ↑ Fraser Cain (15 September 2008). "Temperature of the Sun". Universe Today. பார்க்கப்பட்ட நாள் 19 February 2011.
மேல் ஆய்வுக்கு
[தொகு]- Water Planets in the Habitable Zone: Atmospheric Chemistry, Observable Features, and the case of Kepler-62e and -62f, L. Kaltenegger, D. Sasselov, S. Rugheimer, 18 Apr 2013
- Kepler Mission - தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம்.
- Video (02:27) - NASA Finds Three New Planets in "Habitable Zone" (04/18/2013).