கிமு 426 மாலி வளைகுடா ஆழிப்பேரலை
நிலநடுக்க அளவு | அறியப்படவில்லை |
---|---|
நிலநடுக்க மையம் | 38°52′N 22°37′E / 38.87°N 22.62°E |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | பண்டைக் கிரேக்கம் |
ஆழிப்பேரலை | ஏற்பட்டது |
உயிரிழப்புகள் | அறியப்படவில்லை |
கிமு 426 மாலியன் வளைகுடா ஆழிப்பேரலை (426 BC Malian Gulf tsunami) என்பது கிமு 426 கோடையில் கிரேக்கத்தின் மாலி மற்றும் யூபோயன் வளைகுடாக்களின் கடற்கரைகளை அழித்த ஒரு ஆழிப்பேரலையாகும். [1] [2] துசிடிடீஸ் இதன் காரணங்களை ஆராய்ந்து, ஆழிப்பேரலை நிலநடுக்கத்தால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். [3] ஆழிப்பேரலையின் காரணத்தை புவியியல் நிகழ்வாக சரியாக விளக்கியதில் வரலாற்று ரீதியாக முதலில் தெரிவித்தவர் அவரே ஆவார். [4] எரோடோட்டசு, இதற்கு மாறாக, பொசைடானின் தெய்வீக கோபமே பொடிடேயா ஆழிப்பேரலைக்கு காரணம் என்று கூறினார். [5]
பண்டைய பதிவுகள்
[தொகு]மாலியன் வளைகுடா ஆழிப்பேரலை கிமு 426 கோடையில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் ஒன்றினால் ஏற்பட்டது, இது பெலோபொன்னேசியன் போரின் போக்கை பாதித்தது. முன்னேறி வந்த ஸ்பார்டான்கள் அட்டிகா மீதான அவர்களின் திட்டமிட்ட படையெடுப்பை கைவிடும்படி செய்வித்ததுது. [6] கிரேக்கம் முழுவதும் தீவுகளின் சில பகுதிகள் நீரில் மூழ்கியதாகவும், ஆறுகள் நிரந்தரமாக தம் போக்கை மாற்றிக்கொண்டதாகவும், நகரங்கள் அழிவுற்றதாகவும் இசுட்ராபோ தெரிவித்தார். [7] ஆழிப்பேரலை மாலி வளைகுடாவின் கரையோரத்தை மூன்று வெவ்வேறு இடங்களில் தாக்கியது, [7] உள்நாட்டில் முக்கால் மைல் தொலைவில் உள்ள நகரங்கள் வரை அலை வந்தடைந்தது. [8] ஆழிப்பேரலையின் பலம் என்னவென்றால், ஒரு கப்பல்துறையிலிருந்த ஒரு கப்பலானது தூக்கி நகரச் சுவரின் மீது வீசப்பட்டது. [7]
நிலநடுக்கம், கடல் நீர் பின்வாங்குதல் மற்றும் பேரலை ஆகியவற்றை வரிசையாக துசிடிடீஸ் குறிப்பிட்டுள்ளார்.
கிமு 426 மாலியன் வளைகுடா ஆழிப்பேரலை ஏற்பட காரணமான நிலநடுக்க மையம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், கடலடி நிலச்சரிவைக் காட்டிலும் யூபோயன் வளைகுடாவில் ஏற்பட்ட உரசுமுணை ஒன்றில் மேலோடு நகர்வே காரணமாக இருக்கலாம் என சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. [9]
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Antonopoulos 1992
- ↑ "Malian Gulf, Greece Tsunami". prezi.com. பார்க்கப்பட்ட நாள் 13 February 2015.
- ↑ Thucydides: "A History of the Peloponnesian War", 3.89.2–5
- ↑ Smid 1970
- ↑ Herodotus: "The Histories", 8.129
- ↑ Thucydides: “A History of the Peloponnesian War”, 3.89.1
- ↑ 7.0 7.1 7.2 Strabo, "Geography", 1.3.20
- ↑ Antonopoulos 1992
- ↑ Antonopoulos 1992