உள்ளடக்கத்துக்குச் செல்

காபில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காபில்
இயக்கம்சஞ்சை குப்தா
தயாரிப்புராகேஷ் ரோஷன்
கதைSanjay Masoom
திரைக்கதைவிஜய்குமார் மிஸ்ரா
இசைமுதன்மைப் பாடல்கள் :
ராகேஷ் ரோஷன்
பின்னணி இசை :
சலீம் சுலைமான்
நடிப்புகிருத்திக் ரோஷன்
யாமி கௌதம்
ராணித் ரோய்
ரோஹித் ராய்
ஒளிப்பதிவுசுதீப் சட்டர்ஜி
அயனானக போஸ்
படத்தொகுப்புஅக்கிவ் அலி
கலையகம்பிலிம் கிராப்ட் புரோடெக்சன்ஸ் பிரவேட். லிமிடெட்
விநியோகம்பிலிம் கிராப்ட் புரோடெக்சன்ஸ் பிரவேட். லிமிடெட்
பி4யு மோசன் பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 25, 2017 (2017-01-25)
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு500 மில்லியன்[1][2]
மொத்த வருவாய்1.76 பில்லியன்[3][4][5]

காபில் (Kaabil (English: Capable) என்பது 2017 ஆண்டைய இந்திய இந்தி குற்றவியல் திரில்லர் திரைப்படமாகும்.[6][7] படத்தை சஞ்சய் குப்தா இயக்க, விஜய்குமார் மல்கோத்ரா எழுதியுள்ளார். படத்தை ராகேஷ் ரோஷன் தனது பிலிம்கிராப்ட் என்ற பதாகையின்கீழ் தயாரித்துள்ளார்.[8] இது இரு பார்வையற்ற இணைகளின் காதல் குறித்த படம். பார்வையற்றவர்களாக கிருத்திக் ரோஷன் மற்றும் யாமி கௌதம் ஆகியோர் நடித்துள்ளனர்.[9][10] படத்துக்கான இசையை ராஜேஷ் ரோஷன் அமைத்துள்ளார். படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது 2016 மார்ச் 30 இல் துவங்கியது.[11] படமானது 2017 சனவரி 25 வெளியானது. மேலும் காபில் படமானது தமிழ் மற்றும் தெலுங்கில் பலம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[12][13] 63 வது பிலிம்ஃபேர் விருதுகளில் கிருதிக் ரோஷனின் நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.

கதை

[தொகு]

ரோகன் பதன்கர் (ஹிருதிக் ரோஷ்ன்) பார்வையற்றவர். இவர் கார்ட்டூன் கதாபாத்திங்களுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராக வேலை பார்ப்பவர். இவருக்கு திருமணம் செய்துகொள்ள ஆசை. ஒரு நாள் இவரைப்போலவே பார்வையற்றவரும் கீ போர்ட் கலைஞருமான சுப்ரியாவைச் (யாமி கௌதம்) சந்திக்கிறார். யாமியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். இதையடுத்து ஹிருத்திக்கின் பேச்சினாலும் காதல் நடவடிக்கைகளாலும் காதலில் விழுகிறார் யாமி. பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் தருணத்தில் அமித்தும் (ரோகித் ராய்) அவர்களின் நண்பர்களும் சேர்ந்து சுபிரியாவை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி அவரின் மரணத்துக்குக் காரணமாகிறார்கள். இந்தக் குற்றத்துக்கு நியாயம் கேட்டு ரோகன் பதன்கர் காவல் துறையிடம் புகார் அளிக்கிறார். அமீதின் அண்ணன் மாதவ்ராவ் (ரோனித் ராய்) அரசியல் செல்வாக்கு கொண்டவராக இருப்பதால், குற்றவாளிகள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இதனால் பார்வையற்றவராக இருந்தாலும் தன் அறிவுக்கூர்மையால் ரோகன் பதனகர் குற்றவாளிகளை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.

நடிகர்கள்

[தொகு]
  • கிருத்திக் ரோஷன் - ரோஹன் பட்நாகர்
  • யாமி கௌதம் - சு / சுப்பிரியா சர்மா / சுப்பிரியா பட்நாகர்
  • ராணித் ரோய் - மாதவராவ் ஷெல்லார்
  • ரோஹித் ராய் - அமித் ஷெல்லர்
  • நரேந்திர ஜா - காவல் ஆய்வாளர் அமோல் சவுப்
  • சுரேஷ் மேனன் - ஜபார் (ரோஹனின் நண்பர்)
  • சஹிதூர் ரஹ்மான் - வாசிம்
  • அகிலேந்திர மிஸ்ரா - வாசிமின் தந்தை
  • கிரிஷ் குல்கர்னி - காவல் உதவி ஆய்வாளர் பிரவின் நல்வாட் [14]
  • உர்வாஷி ரவுடெலா (குத்தாட்டப் பாடலில்)[15]

தயாரிப்பு

[தொகு]

வளர்ச்சி

[தொகு]

2016 சனவரியில் இப்படம் குறித்து சஞ்சய் குப்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். படத்தில் இருத்திக் ரோஷன் முன்னணி பாத்திரத்தை ஏற்பதாகவும், ராகேஷ் ரோசன் இந்தப் படத்தை தயாரிப்பதாகவும், ராஜேஷ் ரோஷன் படத்தின் பின்னணி இசையை செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தில்  ரோமிட் ரோய் மற்றும் ரோகித் ராய் ஆகியோர் எதிர்மறை பாத்திரத்தை ஏற்பதாகவும் அறிவிக்கப்பட்டது.[16][17][18]

படப்பிடிப்பு

[தொகு]

படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது மும்பையில் 2016 மார்ச்சில் தொடங்கியது. முழுபடப்பிடிப்பும் 2016 சூலையில் முடிவடைந்தது. படம் 2017 சனவரி 25 இல் வெளியிடப்பட்டது.[19] படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு 2016 சூன் 19 அன்று முடிந்தது.[20] படத்தின் படப்பிடிப்பு 77 நாள்களில் நிறைவடைந்தது.[21]

வெளியீடு

[தொகு]

இப்படமானது 2017 சனவரி 25 அன்று உலக அளவில் சாருக் கானின் ராகுல் தௌக்காஸ் ரயீஸ் படம் வெளியான நிலையில் அன்றே வெளியானது. காபில் 2700 திரையரங்குகளில் வெளியாக, ராகுல் தௌளக்காஸ் ரயீஸ் 3500 அரங்குகளில் வெளியானது.[22] 2017 பெப்ரவரி 2 அன்று காபில் பாக்கித்தானில் வெளியானது, 2016 யூரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்திய திரைப்படங்களுக்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு பாக்கிஸ்தானில் திரையிடப்பட்ட முதல் இந்திய திரைப்படம் இது.[23]

படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, 2017 பெப்ரவரி 2 அன்று இந்தியாவில் மேலும் 200 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[24]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Raees vs Kaabil: Hrithik Roshan's film covers production cost already. Should Shah Rukh Khan worry?". இந்தியன் எக்சுபிரசு. 5 January 2017. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Hrithik Roshan's Kaabil mints Rs 106.2 crore". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 20 April 2017. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. http://www.boxofficeindia.com/movie.php?movieid=3459/
  4. http://www.bollywoodhungama.com/news/box-office-special-features/box-office-kaabil-fails-cross-200-crores-worldwide-box-office/
  5. http://www.bollywoodhungama.com/movie/kaabil/box-office/
  6. "Kaabil Box Office Collection Day 9: Hrithik Roshan's Film Makes Rs 67 Crores". என்டிடிவி. 3 February 2017. http://movies.ndtv.com/bollywood/kaabil-box-office-collection-day-9-hrithik-roshans-film-makes-rs-67-crores-1655725. பார்த்த நாள்: 10 September 2017. 
  7. Kaabil: BookMyShow
  8. "Exclusive: 'Kaabil' trailer leaked before release, Rakesh Roshan shocked".
  9. "Yami Gautam's thank you note makes Hrithik Roshan emotional". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 February 2016. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/yami-gautams-thank-you-note-makes-hrithik-roshan-emotional/articleshow/56781116.cms. பார்த்த நாள்: 8 February 2016. 
  10. Yami Gautam's post on Kaabil leaves Hrithik Roshan teary-eyed". Indianexpress.com. Retrieved on 2017-01-28.
  11. Iyer, Sanyukta (30 March 2016). "Lights, camera, action for Hrithik". Mumbai Mirror. http://mumbaimirror.com/entertainment/bollywood/Lights-camera-action-for-Hrithik/articleshow/51609107.cms. பார்த்த நாள்: 30 March 2016. 
  12. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Hrithiks-Kaabil-as-Balam-in-Telugu/articleshow/55349933.cms
  13. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/Hrithik-Roshans-Kaabil-set-for-a-Telugu-release/articleshow/54807522.cms
  14. Bhanage, Mihir (14 May 2016). "Girish Kulkarni in Hrithik-Yami starrer Kaabil". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-08-12.
  15. "After Priyanka Chopra, Hrithik Roshan turns to Urvashi Rautela"
  16. "Rohit Roy and Ronit Roy to play villains in Sanjay Gupta's Kaabil". Bollywood Hungama. 29 February 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-12.
  17. "Ronit Roy to play negative role in Hrithik Roshan's 'Kaabil'". IBTimes. http://www.ibtimes.co.in/after-akshay-kumars-boss-ronit-roy-play-negative-role-hrithik-roshans-kaabil-667528. 
  18. "Hrithik Roshan to fight 'baddies' Ronit and Rohit Roy in Kaabil". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/entertainment/bollywood/010316/hrithik-roshan-to-fight-baddies-ronit-and-rohit-roy-in-kaabil.html. 
  19. "Hrithik Roshan's ‘Kaabil’ to go on floors March end". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/entertainment/bollywood/hrithik-roshans-yami-gautam-kaabil-to-go-on-floors-march-end/. 
  20. "Hrithik Roshan wraps first schedule of Kaabil". 20 June 2016.
  21. "Hrithik Roshan's ‘Kaabil’ complete ahead of schedule". http://www.dnaindia.com/entertainment/report-kaabil-complete-ahead-of-schedule-2265060. 
  22. Raees Vs Kaabil: SRK Gets Bumper Opening, Hrithik Loses Box Office Race பரணிடப்பட்டது 2019-01-03 at the வந்தவழி இயந்திரம். English.jagran.com. Retrieved on 2017-01-28.
  23. Nandini Ramnath (2 February 2017). "Review: In 'Kaabil', Hrithik Roshan is much too capable as the blind hero". DAWN Images. http://images.dawn.com/news/1177035/. பார்த்த நாள்: 2 February 2017. 
  24. "Hrithik Roshan's Kaabil gets 200 more screens". The Indian Express (A. Kameshwari). 2 February 2017. http://indianexpress.com/article/entertainment/bollywood/hrithik-roshan-kaabil-4504226/. பார்த்த நாள்: 6 February 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காபில்&oldid=4118542" இலிருந்து மீள்விக்கப்பட்டது