களப் பயணம்
களப் பயணம் (field trip) அல்லது உல்லாசப் பயணம் என்பது ஓர் குழுவினர் தங்களின் இயல்பான சூழலில் இருந்து விலகி ஓர் இடத்திற்குச் செல்லும் பயணமாகும்.
மாணவர்களுக்காக செய்யப்படும் போது, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்தில் பள்ளிப் பயணம் என்றும், அயர்லாந்தில் பள்ளிச் சுற்றுலா என்றும் அழைக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைத் தரவைப் பயன்படுத்தி நடத்திய ஆய்வில், கலாச்சார ரீதியாக வளப்படுத்தும் களப் பயணங்கள், மாணவர்கள் கலைகளில் அதிக ஆர்வம் காட்ட வழிவகுத்தது, வெவ்வேறு எண்ணங்களைக் கொண்ட மாணவர்களிடையே சகிப்புத்தன்மை வளரவும், கற்றல் வெளிப்பாடுகள் அதிகரிக்கவும் உதவியது தெரியவந்தது.[1]
மீள்பார்வை
[தொகு]களப் பயணத்தின் முக்கிய நோக்கம் ,கல்வி அவதானிப்பு,பரிசோதனை அல்லாத ஆராய்ச்சிக்காகவோ அல்லது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களது வகுப்பு தோழர்களுடன் முகாமிடுவது போன்ற அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அப்பால் உள்ள அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவது ஆகும். இந்த ஆய்வின் நோக்கம், குறிப்பிட்ட விடயங்களை அதன் இயற்கையான நிலையில் அவதானித்து, மாதிரிகளைச் சேகரிப்பதாகும். வசதியான குழந்தைகள் ஏற்கனவே பள்ளிக்கு வெளியே இருக்கும் கலாச்சார நிறுவன சூழலை அனுபவித்திருக்கலாம், மேலும் களப்பயணங்கள், கலைகளில் ஒரே மாதிரியான கலாச்சார அனுபவங்களைப் பெறுவதற்கும் அதிக வசதியற்ற மற்றும் வசதி குறைந்த குழந்தைகளும் அவ்வாறான அனுபங்களைப் பெருவதற்கும் உதவு புரிகிறது.[2]
களப் பயணங்கள் பெரும்பாலும் 3 படிநிலைகளில் செய்யப்படுகின்றன: தயாரிப்பு, செயல்பாடுகள் மற்றும் பின்தொடர்தல் செயல்பாடு. தயாரிப்பு என்பது மாணவர் மற்றும் ஆசிரியர் இருவருக்கும் பொருந்தும். ஆசிரியர்கள் பெரும்பாலும் பயணத்திற்கு முன் சேருமிடம் மற்றும் பாடப்பொருள் பற்றி அறிய நேரம் எடுத்துக்கொள்கிறார்கள். விரிவுரைகள், சுற்றுப்பயணங்கள், பணித்தாள்கள், நிகழ்படங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள். தொடர்பணி நடவடிக்கைகள் பொதுவாகக் களப்பயணம் முடிந்தவுடன் வகுப்பறையில் நடக்கும் விவாதங்கள் ஆகியவை களப்பயணங்களில் நடக்கும் பரவலான செயல்பாடுகளாகும்.[3]
மேலும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Erickson, Heidi H.; Watson, Angela R.; Greene, Jay P. (2022). "An Experimental Evaluation of Culturally Enriching Field Trips". Journal of Human Resources: 1020. doi:10.3368/jhr.1020-11242R1. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-166X.
- ↑ Greene, Jay P.; Kisida, Brian; Bowen, Daniel H. (2014). "The Educational Value of Field Trips". Research. Education Next. Vol. 14, no. 1. Hoover Institution. pp. 78–86. பன்னாட்டுத் தர தொடர் எண் 1539-9672. பார்க்கப்பட்ட நாள் 4 May 2015.
- ↑ Bitgood, Stephen (1989). Bitgood, Stephen. ed. "School Field Trips: An Overview". Visitor Behavior (Center for Social Design; Visitor Studies Association) 4 (2): 3–6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0892-4996. http://kora.matrix.msu.edu/files/31/173/1F-AD-10E-8-VSA-a0a2f0-a_5730.pdf.