உள்ளடக்கத்துக்குச் செல்

கரும் மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரும் மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓரியோலசு
இனம்:
ஓ. கோசீ
இருசொற் பெயரீடு
ஓரியோலசு கோசீ
(சார்ப்பீ, 1892)

கரும் மாங்குயில் (Black oriole)(ஓரியோலசு கோசீ) என்பது ஒரியோலிடே பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது போர்னியோ தீவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். ஓரியோல்களில் மிகக் குறைவாக அறியப்பட்ட இனம் இதுவாகும். இதனுடைய பரம்பல் போர்னியோவில் சரவாக் பகுதியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.[2] கருப்பு மற்றும் கருஞ்சிவப்பு, மெரூன் மற்றும் வெள்ளி மாங்குயில்களுடன், இது சிவப்பு மற்றும் கருப்பு மாங்குயில் கிளேயினமாக உள்ளது.[3] டுலிட் மலையில் இந்த சிற்றினத்தின் முதல் மாதிரியைச் சேகரித்த சார்லஸ் ஹோசின் பெயரால் இந்த சிற்றினம் அழைக்கப்படுகிறது.[4]

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பநிலை அல்லது வெப்பமண்டல ஈரப்பதம் அதிகமாக இருக்கும் மான்ட்டேன் காடுகள் ஆகும். இதனுடைய வாழிட இழப்பால் இந்த சிற்றினம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்_மாங்குயில்&oldid=3476955" இலிருந்து மீள்விக்கப்பட்டது