கதிரிபுரம்
கதிரிபுரம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636905 |
கதிரிபுரம் (Kathiripuram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643522.[1] இது பையா்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 281 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 380 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°57'17.1"N 78°18'50.0"E[3] ஆகும். கிழக்கே மோளையானுாா் கிராமமும் மேற்கே வாசிக்கவுண்டனுாா் கிராமமும் வடக்கே குண்டலமடுவு கிராமமும் தெற்கே பையா்நத்தம் கிராமமும் அமைந்துள்ளது.
மக்கள் வகைபாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 363 குடும்பங்களும் 1305 மக்களும் வசிக்கின்றனர். இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எட்டு ஆசிாியா்களும் 151 மாணவ மாணவியரும் உள்ளனா்.
மேற்கோள்[தொகு]
- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Kathiripuram Village , Pappireddipatty Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
- ↑ https://www.google.co.in/maps/place/11%C2%B057'17.1%22N+78%C2%B018'50.0%22E/@11.9547402,78.3117133,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.954735!4d78.313902